கிரிக்கெட்
6 பந்தில் 6 சிக்ஸர்கள்; தெறிக்கவிட்ட திசாரா பெரேரா #Video


இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் திசாரா பெரேரா, 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார்.
இலங்கையில் கொழும்புவில் நடந்த லிஸ்ட்-ஏ போட்டியில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார். இலங்கை ராணுவ அணிக்காக லிஸ்ட் களமிறங்கிய பெரேரா, அத்லெடிக் கிளப் அணிக்கு எதிராக 13 பந்துகளில் 52 ரன்கள் விளாசி சாதனை புரிந்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் கெய்ரோன் பொலார்டு ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை புரிந்தார்.
இதுவரை ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த சாதனையை உலகிலேயே 9 பேட்ஸ்மேன்கள் மட்டும் தான் புரிந்துள்ளனர். அவர்கள் கார்ஃபீல்டு சோபர்ஸ், ரவி சாஸ்திரி, ஹெர்ஷெல் கிப்ஸ், யுவ்ராஜ் சிங், ராஸ் வைட்லி, ஹஸ்ரதுல்லா சாசாய், லியோ கார்டர் மற்றும் கெய்ரோன் பொலார்டு ஆகியோரே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து தனித்துவச் சாதனையைப் புரிந்துள்ள வீரர்கள்.
கிரிக்கெட்
டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங்: தொடர் வெற்றி பெறுவாரா கோஹ்லி?


இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது
இன்று ஐபிஎல் போட்டியின் பத்தாவது போட்டியின் சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்
இதனை அடுத்து சற்று முன்னர் களமிறங்கிய படிக்கல் மற்றும் விராத் கோலி அதிரடியாக விளையாடி வருகின்றனர். முதல் ஓவரிலேயே அந்த அணி 6 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணி ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றும் தொடர் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
கொல்கத்தா: ரானா, கில், ராகுல் திரிபாதி, இயான் மோர்கன், ஷகிப் அல் ஹூசைன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரு ரஸல், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன்சிங், பிரதிஷ் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி,
பெங்களூரு: விராத் கோஹ்லி, படிக்கல், ரஜத் படிதார், மாக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷாபஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், சிராஜ், சாஹல்,
கிரிக்கெட்
நேற்றைய போட்டியில் நடராஜன் களமிறக்கப்படாதது ஏன்? விவிஎஸ் லட்சுமண் விளக்கம்!


நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 151 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய அந்த ஹைதராபாத் அணி முதல் 10 ஓவர்கள் வரை ஆட்டத்தை தனது பக்கமே வைத்திருந்தது. ஆனால் அதன் பின் திடீரென ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டு மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன் களமிறக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து ஐதராபாத் அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமணன் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:
கிரிக்கெட்
கடைசி நேரத்தில் சொதப்பிய ஐதராபாத்: மும்பை அபார வெற்றி


நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 151 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய போதிலும் கடைசி நேரத்தில் சொதப்பியதால் தோல்வி அடைந்தது.
நேற்று டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதனையடுத்து அந்த அணியின் குவின்டன் டி காக் 40 ரன்களும், பொல்லார்டு 35 ரன்களும் ரோகித் சர்மா 32 ரன்களும் எடுத்ததால், அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனால் அதன்பின் மடமடவென விக்கெட்டுகள் விழுந்தன. இதனை அடுத்து இறுதியில் 137 ரன்களுக்கு ஐதராபாத் அணி ஆட்டம் இழந்ததால், மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய பொல்லார்டு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் இதனை அடுத்து மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும் பெங்களூர் அணி 4 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும் சென்னை அணி 3வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சினிமா செய்திகள்2 days ago
விருகம்பாக்கம் வீட்டிற்கு வந்தது விவேக் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு விரைவில் ஏற்பாடு!
-
சினிமா செய்திகள்1 day ago
விவேக் மறைவு குறித்து அரசியல் பிரபலங்களின் இரங்கல்கள்!
-
விமர்சனம்2 days ago
ஜோஜி – விமர்சனம்!
-
கிரிக்கெட்2 days ago
விக்கெட் எடுத்தவுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடிய பிராவோ! வைரல் வீடியோ