கிரிக்கெட்
#NZvsIND: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி!


இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்று 5 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் டெஸ்ட் தொடர்கள் உள்ளிட்டவற்றில் விளையாடி வருகிறது.
அதில் முதலில் விளையாடப்பட்ட டி20 தொடரில் இந்திய அணி 5-0 என்று வெற்றியை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்று 3 ஒரு நாள் போட்டி தொடரின் முதல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக ரோஹித் ஷர்மா விளையாடவில்லை. அதே போன்று நியூசிலாந்து அணியிலும் கேப்டன் கேன் வில்லியம்டன் விலகியுள்ளார். இரண்டு அணிகளுக்குமே இது பின்னடைவாக இருக்கும்.
டி20 தொடரில் வாஷ்அவுட் ஆன நியூசிலாந்து, இன்றைய போட்டியில் வெற்றியை ருசி பார்க்குமா? அல்லது இந்திய அணி தொடர் வெற்றியைப் பெறுமா என்று இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டி முடிவை அளிக்கும்.
இந்தியா – நியூசிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் அட்டவணை!
கிரிக்கெட்
சஞ்சு சாம்சன் சதம் வீண்: பஞ்சாப் த்ரில் வெற்றி!


நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன் கடைசிவரை போட்டியை எடுத்துக் கொண்டு சென்றும் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் அடித்தது. கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி 91 ரன்களும், தீபக் ஹூடா 64 ரன்களும், கிறிஸ் கெய்ல் 40 ரன்களும் எடுத்தார்கள்.
அர்ஷத் சிங் வீசிய கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் சஞ்சு சாம்சன் 4 நான்காவது பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்து ஆறாவது பந்தில் அவுட் ஆனதால் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்
‘கோலி, பாபர் அசாமை பார்த்து கத்துக்கணும்’- வம்பிழுக்கும் பாக். முன்னாள் வீரர்!


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகச் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார். மூன்று ஃபார்மெட்டுகளிலும் 50க்கு மேல் பேட்டிங் சராசரி வைத்துள்ளார் கோலி. அப்படிப்பட்ட கோலி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாமைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகிப் ஜாவெத். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
கோலிக்கும் பாபர் அசாமுக்கும் அடிக்கடி ஒப்பீடுகள் வருவது சகஜம் தான். காரணம், பாகிஸ்தான் அணியின் விராட் கோலி என்று தான் பாபர் அசாம் வர்ணிக்கப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருவருக்கும் இடையில் யார் சிறந்த வீரர் என்கிற ஒப்பீடு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
இப்படியா சூழலில் ஜாவெத், ‘கோலி சில பேட்டிங் நுட்பங்கள் குறித்த விஷயங்களில், பாபர் அசாமை விட பின் தங்கியுள்ளார். அவரை விட பாபர் ஆசாம் சிறப்பாக செயல்படுகிறார். ஆஃப் சைடில் எப்படி விளையாடுவது என கோலி, பாபர் ஆஸமிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதே போல உடலை எவ்வாறு பேண வேண்டும் என்பதை கோலியிடம் இருந்து பாபர் ஆசம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்
IPL – சென்னை அணிக்கு மேலும் ஒரு சிக்கல்


இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா, இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், விராட் கோலி தலைமை தாங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின. கடைசிப் பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் பெங்களூர் வெற்றி கண்டது.
இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி வெற்றி வாகை சூடியது.
இரண்டாவது போட்டியில் சென்னை அணி, பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டாலும் பவுலிங்கில் கடுமையாக சொதப்பியது. சென்னை அணியில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஜோஷ் ஹேசல்வுட் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் கடைசி நேரத்தில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்பதை அறிவித்தார்.
அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லுங்கி நிகிடி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரும் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்துள்ளதால், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதன் காரணமாக அடுத்ததாக வரும் 16 ஆம் தேதி பஞ்சாப் அணியை எதிர்த்து சென்னை களமிறங்கும் போதும் நல்ல பந்து வீச்சாளர்கள் யாரும் அணியில் இருக்க மாட்டார்கள் எனத் தெரிகிறது. இதனால் சென்னை அணிக்கும் மேலும் சிக்கல் எழுந்துள்ளது.
-
தமிழ்நாடு19 hours ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
விமர்சனம்2 days ago
அழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்!
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!