கிரிக்கெட்
கிறிஸ் மோரீஸ் 16 கோடி, மாக்ஸ்வெல் 14 கோடி: ஐபிஎல் ஏலம் குறித்த தகவல்!


2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கிறிஸ் மோரீஸ் 16.25 கோடிக்கும், கிளன் மேக்ஸ்வெல் 14.25 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இன்றைய ஏலத்தில் இதுவரை எடுக்கப்பட்ட வீரர்கள் மற்றும் அவர்களுடைய மதிப்புகள் என்ன என்பதை தற்போது பார்ப்போம்:
கிளன் மேக்ஸ்வெல்: 14.25 கோடி பெங்களூரு அணி
ஸ்டீவ் ஸ்மித்: 2.20 கோடி டெல்லி அணி
டாவிட் மலன்: 1.50 கோடி பஞ்சாப் அணி
ஷிவம் டுபே: 4.40 கோடி ராஜஸ்தான் அணி
மொயின் அலி: 7 கோடி சென்னை அணி
ஷாகிப் அல் ஹசன்: 3.20 கோடி கொல்கத்தா அணி
கேதார் ஜாதவ், ஹனுமா விஹாரி, ஆரோன் பின்ச், எவின் லீவிஸ், ஜேசன் ராய், ஆகிய வீரர்களை இதுவரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் ஏலம் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கிரிக்கெட்
IPL தொடரை கேவலப்படுத்திய டேல் ஸ்டெய்ன்; சர்ச்சையானதால் பல்டி!


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் குறித்து தென்னாப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் முன்பு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது தன் கருத்திலிருந்து ஸ்டெய்ன் பின்வாங்கியுள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடி வரும் ஸ்டெய்ன், சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், ‘பாகிஸ்தான் சூப்பர் லீக், ஸ்ரீலங்கா பிரிமியர் லீகில் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில், அங்கு பேசப்படும் விஷயமே இந்த ஐபிஎல்-ல் எவ்வளவு பணம் கிடைக்கும், எந்தத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டோம் என்பதாகத் தான் இருக்கும்.
ஐபிஎல்லில் மிகப்பெரிய அணிகள் இருக்கின்றன. அங்கு நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளையாடுகிறார்கள். இதனால் பணம் குறித்தான பேச்சு அங்கு அதிகம் இருக்கும். இதனால் கிரிக்கெட் பற்றி ஏதோ இரு இடத்தில் மறக்கப்படுகிறது என்பதாகவே உணர்கிறேன்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்நிலையில் இந்தக் கருத்தைத் திரும்ப பெறும் வகையில் ஸ்டெய்ன், ‘என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் ஆழ்ந்த வியப்பை ஏற்படுத்தியது. இது உலகின் மிக பிரமாண்டமான கிரிக்கெட் தொடர்.
இதனை சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். நான் ஐபிஎல்லுடன் மற்ற தொடர்களை ஒப்பிட்டு கூறும் எண்ணத்தில் அப்படிப் பேசவில்லை.
நான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் நான் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். நான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என விளக்கம் கொடுத்துள்ளார்.
கிரிக்கெட்
INDvENG- ‘பயப்படாம விளையடுங்கப்பா!’- இங்கி., வீரர்களுக்கு ஜோ ரூட் ஓப்பன் ரிக்வஸ்ட்


இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள், அச்சம் கொள்ளாமல் விளையாட வேண்டும் என்று அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி, 2 – 1 என்ற நிலையில் முன்னிலைப் பெற்றுள்ளது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இங்கிலாந்து அணி, மூன்றாவது போட்டியைப் போல முழுவதும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விளையாட வேண்டும் என்கிற முனைப்போடு களமிறங்குகிறது.
இருப்பிடும் மூன்றாவது டெஸ்டைப் போலவே நான்காவது டெஸ்டிலும் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்ய திணறுவார்கள் என்றே தெரிகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து வீரர்கள், இந்த ஆட்டத்தை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து ஜோ ரூட், ‘இந்தியா போன்ற நாட்டில் ஒரு பேட்டிங் குழுவாக எப்படி வெற்றி பெற வேண்டும் என்கிற திறனும் ஆற்றலும் எங்களிடம் உள்ளது. அதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
இந்த மனப்பான்மையை முதன்மையாக வைத்துக் கொண்டு இன்னும் தைரியத்துடனும் சுதந்திரத்துடனும் ஆட்டத்தை அணுக வேண்டும். அப்படிச் சொல்வதனால் களத்தில் இறங்கியவுடன் மனம் போன போக்கில் பேட்டை சுழற்றிக் கொண்டிருக்கக் கூடாது. சூழலைப் பார்த்து பயப்படாத வண்ணம் நம் ஆட்டத்தை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையே சொல்ல வருகிறேன்.
என்ன செய்வதென்று தெரியாமல் க்ரீஸிலேயே மாட்டிக் கொள்வது, இரண்டு மனநிலைகளுடன் பந்தை அணுகுவது உள்ளிட்டவைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். சுதந்திரமாக களத்திற்குச் சென்று தாம் விரும்பிய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும், ரன்கள் குவிக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் இங்கிலாந்து வீரர்கள் விளையாட வேண்டும் என விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களில் முடிவடைந்தது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் அந்த அணி மீது அதிக அழுத்தம் உள்ளது.
கிரிக்கெட்
உலக கிரிக்கெட் வீரர்களில் விராத் கோஹ்லி செய்த முதல் சாதனை!


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோயர்கள் பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோயர்கள் பெற்ற உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை அதாவது 10 கோடியை கடந்தது. இந்த மைல்கல்லை அடைந்த முதல் இந்தியரும் இவர்தான் என்பதும் அவருக்கு அடுத்ததாக பிரியங்கா சோப்ரா 60 மில்லியன் ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா1 day ago
தினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்!
-
தமிழ்நாடு1 day ago
எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா?
-
இந்தியா1 day ago
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா?
-
இந்தியா2 days ago
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்!