கிரிக்கெட்
சதம் அடித்தது அஷ்வின்; ஆனால் அதற்கு சிராஜைப் புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் – காரணம் என்ன?


இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். அவரின் அற்புதமான சதத்திற்காகவும், ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய திறனிற்காகவும் ஆட்ட நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இப்படி தன் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய அஷ்வினுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், வேகப் பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
.@mdsirajofficial‘s reaction to @ashwinravi99 getting to his century was very interesting & I thoroughly enjoyed that.
This is what Team Sport is all about…. enjoying and being a part of your teammates’ success.Proud of you Siraj & #TeamIndia!pic.twitter.com/rP7ITEaiJ4
— Sachin Tendulkar (@sachin_rt) February 17, 2021
அஷ்வின், இரண்டாவது டெஸ்டில் 90களை நெருங்கும் போது, இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து விட்டது. கடைசி ஆளாக உள்ளே வந்தது சிராஜ் தான். அஷ்வின் இன்னும் சதத்தை ரீச் செய்ய சிறிது நேரம் பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் இருந்தது. அப்போது சிராஜ் பொறுப்பாக விளையாடி அஷ்வின், மைல்கல்லை எட்ட உறுதுணையாக இருந்தார்.
மேலும் அஷ்வின் சதம் அடித்த போது, அவரை விடவும் அதிகம் மகிழ்ச்சி கொண்டது சிராஜ் தான். இது குறித்தான காணொலி பார்ப்போரை நெகிழ வைத்தது.
🙏🙏 @mdsirajofficial has been nothing but a team man🤩 https://t.co/PTEajA6C1R
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) February 17, 2021
அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், ‘சிராஜ், அஷ்வினின் சதத்திற்கு ரியாக்ட் செய்த விதம் மிகவும் கவனிக்கத்தக்கது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது தான் ஒரு குழுவாக விளையாடுவது என்பது… உங்கள் அணியைச் சேர்ந்தவரின் வெற்றியைக் கொண்டாடுவதும் அதில் பங்கெடுப்பதும் தான் முக்கியம். உன்னை நினைத்துப் பெருமை கொள்கிறேன் சிராஜ்’ என்று பதிவிட்டு சிராஜின் ரியாக்ஷன் வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.
கிரிக்கெட்
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்த இந்திய வீரர் டாப்-3ல் நுழைந்தார்!


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் பட்டியலைப் பொறுத்தவரை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், 891 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதேபோல ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுஷானே 878 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நிலை கொண்டுள்ளார். அவரைத் தொடர்ந்து 4 ஆம் இடத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டும், 5 வது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியும் உள்ளனர்.
India opener Rohit Sharma storms into the top 10 to a career-best eighth position in the latest @MRFWorldwide ICC Test Player Rankings for batting 💥
Full list: https://t.co/AIR0KN4yY5 pic.twitter.com/Hqb9uTWnzJ
— ICC (@ICC) February 28, 2021
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து ரன்கள் குவித்து வரும் இந்திய அதிரடி தொடக்க வீரர், ரோகித் சர்மா, 6 இடங்கள் முன்னிலைப் பெற்று 8 வது இடத்தைப் பிடித்துள்ளார். செத்தேஷ்வர் புஜாரா 2 இடங்கள் பின் தங்கி 10 வது இடத்தில் நிலை கொண்டுள்ளார்.
பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவர் 908 புள்ளிகள் பெற்றுள்ளார். அவரை அடுத்து நியூசிலாந்தின் நீல் வாக்னர் 825 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட்டுகளை அள்ளி வரும் சுழற் பந்து வீச்சாளர் அஷ்வின், 823 புள்ளிகள் பெற்று, 4 இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தவிர முதல் 10 பவுலர்களில் இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, 746 புள்ளிகள் பெற்று 9 வது இடத்தில் இருக்கிறார்.
கிரிக்கெட்
INDvENG – இது இந்திய அணியின் ‘மாஃபியா கேங்’- மயான்க் அகர்வால் பகிர்ந்த வைரல் படம்


இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களில் முடிந்து விட்ட காரணத்தினால், இந்திய கிரிக்கெட் அணியினர் ரிலாக்ஸ் மோடில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மூன்றாவது போட்டியைப் போல நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற நிலையில் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கின்றது. கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தன் இடத்தை உறுதி செய்துவிடும்.
4 வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் மாதம், 4 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னர் சில் செய்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியினரின் ஓர் புகைப்படத்தைப் பகிர்ந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவரான மயான்க் அகர்வால், ‘தி மாஃபியா கேங்’ என்று அதற்கு கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இந்திய அணியின் இருக்கும் சீனியர் வீரர்கள் மற்றும் முக்கிய பயிற்சியாளர்கள் குழு மட்டுமே அந்தப் படத்தில் உள்ளனர். கேப்டன் விராட் கோலியும் இருக்கிறார். இந்தக் குழுவுக்கு சுழற் பந்து வீச்சாளரும், ஆல்- ரவுண்டருமான ரவிச்சந்திரன் அஷ்வின் தான் தலைவன் என்பது போல ஹின்டும் கொடுத்துள்ளார் மயான்க்.
வைரல் புகைப்படம் இதோ:
View this post on Instagram
கிரிக்கெட்
INDvENG – 3வது டெஸ்ட் ரிசல்ட்டை சிம்பிளாக கலாய்த்த ஜோ ரூட்- இப்படி சொல்லிப்புட்டாரே!!!


இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த அக்சர் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிவுக்கு வந்துள்ளது பல கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம் மீது அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திப் பேசியுள்ளார்.
3வது போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, 145 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது நாளில் விளையாடிய இங்கிலாந்து அணி, 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 2 – 1 என்று முன்னிலைப் பெற்றுள்ளது. அடுத்தப் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘இரு அணிகளுமே மூன்றாவது டெஸ்டுக்காக பயன்படுத்தப்பட்ட விக்கெட்டில் திணறினோம். இதைப் போன்ற ஆட்டத்தை வைத்து எங்களது திறமையை மதிப்பிட முடியாது. இந்தப் போட்டியில் எனக்கே 5 விக்கெட்டுகள் கிடைத்தன. அதை வைத்துப் பார்த்தாலே இந்த பிட்ச் எந்தளவுக்கு இருந்திருக்கிறது என்பது.
இன்னும் ஒரு போட்டி மட்டுமே இருக்கும் நிலையில், மூன்றாவது டெஸ்டை மனதில் வைத்து அதை அணுக மாட்டோம். அந்தப் போட்டியில் இந்தியாவைப் போல எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியும்’ என்று கூறியுள்ளார் ஜோ ரூட்.
இங்கிலாந்து அணி வீரர்களும், அந்த அணி நிர்வாகமும் நரேந்திர மோடி மைதான பிட்ச் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் பிட்ச் மாற்றப்பட வேண்டும் என்பது குறித்து அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
-
சினிமா செய்திகள்2 days ago
நயன்தாரா படத்தில் நாயகி ஆனார் ‘செல்லம்மா’ பட பாடகி: ஹீரோ யார் தெரியுமா?
-
ஆரோக்கியம்1 day ago
பாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
-
தமிழ்நாடு2 days ago
முதல்வர் வேட்பாளர் நான் தான்: கமல் அறிவிப்பால் சரத்குமார் அதிர்ச்சியா?
-
தமிழ்நாடு2 days ago
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா: தேர்தலிலும் போட்டி!