கிரிக்கெட்
IPL ஏலம் 2021: விற்காமல் விடுபட்ட முக்கிய வீரர்கள்!


2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் இன்று சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏல முறையில் எடுத்துள்ளது.
இன்றைய ஏலத்துக்கு 1,097 வீரர்களில் இருந்து 292 பேர் தேர்வு செய்து ஏலப் பட்டியல் உருவாக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல்லை எடுக்க ஐபிஎல் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அவரை ரூ.14 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கியுள்ளது. அதேபோல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இது ஒருபுறம் இருக்க, இங்கிலாந்து வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேஸன் ராய், ஆஸ்திரேலிய வீரர்கள் அலெக்ஸ் கெரே, வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், இலங்கை வீரர் குஷால் பெரேரா, சாம் பில்லிங்ஸ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன்வரவில்லை. இந்த வீரர்கள் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இதேபோன்று மோசமான ஆட்டத்தால் விமர்சிக்கப்பட்டு, சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேதர் ஜாதவை எந்தவொரு அணியும் விலைக்கு வாங்கவில்லை. இவருக்கு அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்திய வீரர் ஹர்பாஜன் சிங் 2 கோடிக்கு ஏலம் விடப்பட்ட நிலையில் அவரையும் எந்த அணியும் வாங்கவில்லை. இதேபோன்று கடந்த சீசனில் ரூ.6.75 கோடி கொடுத்து சென்னை அணி வாங்கிய பியூஷ் சாவ்லாவை நடப்பு சீசனில் அனைத்து அணிகளும் புறக்கணித்துள்ளன.
கிரிக்கெட்
INDvENG- ‘சும்மா பிட்ச் சரியில்லைன்லாம் புலம்பினு இருக்காதீங்க!’- இங்கி., அணியை வறுத்தெடுத்த விவியன் ரிச்சர்ட்ஸ்


இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள புத்தம் புதிய நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி யாரும் எதிர்பாராத வகையில் இரண்டே நாட்களில் முடிந்தது. இங்கிலாந்து அணி, இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து மோடி மைதானத்தின் பிட்ச் சரியில்லை என்றும், இந்தியாவுக்குச் சாதகமாக அது அமைக்கப்பட்டு உள்ளது என்றும் இங்கிலாந்து தரப்பின் பல இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு எழுப்பினார்கள். இது குறித்து தன் கருத்தைத் தெரிவித்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ்.
மூன்றாவது போட்டியைப் போல நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற நிலையில் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கின்றது. கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தன் இடத்தை உறுதி செய்துவிடும்.
4 வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் மாதம், 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ரிச்சர்ட்ஸ் பிட்ச் குறித்தான சர்ச்சை குறித்துப் பேசுகையில், ‘இந்தியாவுக்குப் பயணம் செய்தால் இதைப் போன்று சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்சுகள் தான் இருக்கும் என்பது தான் நிதர்சணமான உண்மை. இதை இங்கிலாந்து அணி புரிந்து கொள்ள வேண்டும்.
அதை விடுத்து, பிட்ச் சரியில்லை, அடுகளம் சரியில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது. உங்கள் மனவோட்டத்தையும், மன வலிமையையும் சோதனை செய்யும் களம் டெஸ்ட் கிரிக்கெட். அதனால் தான் அதற்குப் பெயரே அப்படி வைக்கப்பட்டுள்ளது.
நான் இந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் கண்டிப்பாக 4வது டெஸ்ட் போட்டிக்கும் பிட்ச்-ஐ பெருமளவு மாற்ற மாட்டேன். அப்படியே இருக்கும்படி தான் செய்வேன். இங்கிலாந்து அணி, தனது கம்ஃபர்ட் தளத்திலிருந்து வெளியே வந்து விளையாட்டை அணுக வேண்டும். அப்படி அணுகினால் மட்டுமே வலுவான இந்திய அணியை எதிர்கொள்ள முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்
INDvENG- ‘4வது டெஸ்ட்ல ஜெய்ச்சே ஆகணும்’; ஆக்ரோஷ பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்


இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களில் முடிந்து விட்ட காரணத்தினால், இந்திய கிரிக்கெட் அணியினர் கிடைக்கும் அதிக நேரத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்றாவது போட்டியைப் போல நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற நிலையில் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கின்றது. கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தன் இடத்தை உறுதி செய்துவிடும்.
4 வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் மாதம், 4 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது குறித்தான புகைப்படங்கள் இதோ:
#TeamIndia members gearing up for the fourth and final Test against England.@Paytm #INDvENG pic.twitter.com/7YmPyfUj6W
— BCCI (@BCCI) February 28, 2021
கிரிக்கெட்
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்த இந்திய வீரர் டாப்-3ல் நுழைந்தார்!


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் பட்டியலைப் பொறுத்தவரை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், 891 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதேபோல ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுஷானே 878 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நிலை கொண்டுள்ளார். அவரைத் தொடர்ந்து 4 ஆம் இடத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டும், 5 வது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியும் உள்ளனர்.
India opener Rohit Sharma storms into the top 10 to a career-best eighth position in the latest @MRFWorldwide ICC Test Player Rankings for batting 💥
Full list: https://t.co/AIR0KN4yY5 pic.twitter.com/Hqb9uTWnzJ
— ICC (@ICC) February 28, 2021
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து ரன்கள் குவித்து வரும் இந்திய அதிரடி தொடக்க வீரர், ரோகித் சர்மா, 6 இடங்கள் முன்னிலைப் பெற்று 8 வது இடத்தைப் பிடித்துள்ளார். செத்தேஷ்வர் புஜாரா 2 இடங்கள் பின் தங்கி 10 வது இடத்தில் நிலை கொண்டுள்ளார்.
பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவர் 908 புள்ளிகள் பெற்றுள்ளார். அவரை அடுத்து நியூசிலாந்தின் நீல் வாக்னர் 825 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட்டுகளை அள்ளி வரும் சுழற் பந்து வீச்சாளர் அஷ்வின், 823 புள்ளிகள் பெற்று, 4 இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தவிர முதல் 10 பவுலர்களில் இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, 746 புள்ளிகள் பெற்று 9 வது இடத்தில் இருக்கிறார்.