கிரிக்கெட்
INDvAUS – 5 விக்கெட்டுகள் எடுத்து ஆஸி.,யை அலறவிட்ட சிராஜுக்கு பும்ராவின் ‘நெகிழ்ச்சி ஹக்’


இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்தியா கடைசி நாளான நாளை வெற்றி பெற 324 ரன்கள் தேவை.
ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, காபாவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன்பின் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி 336 ரன்கள் குவித்தது.
பின்னர் நடைபெற்ற இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியாவின் பவுலிங்கை பொறுத்தளவில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 5 விக்கெட்களை வீழ்த்தி கெத்து காட்டினார்.
இதன் மூலம், இந்தியா வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா ஆட ஆரம்பித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா – சுப்மன் கில் களமிறங்கினார்கள். இன்று மொத்தமாக இந்தியாவுக்கு, 1.5 ஓவர் மட்டுமே வீசப்பட்டது. இதில் இந்திய அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 4 ரன்கள் எடுத்தது.
நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கடைசி நாள் ஆட்டம் எப்போதும் கடினமானதாகவே இருக்கும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளதால், வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் இந்தியா, தற்போது டெஸ்ட் போட்டியை வெல்லும் கட்டத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் சிராஜ். தனது அசாத்தியப் பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தார் சிராஜ். தனது முதல் டெஸ்ட் தொடரிலேயே 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய பெருமையையும் பெற்றுள்ளார் சிராஜ். அவர் ஆஸ்திரேலிய இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு பெவிலியன் திரும்பிய போது, இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, சிராஜை ஆரத்தழுவி பாராட்டுகிறார். இது குறித்தான வீடியோ தற்போது படு வைரலாக பரவி வருகிறது.
A standing ovation as Mohammed Siraj picks up his maiden 5-wicket haul.#AUSvIND #TeamIndia pic.twitter.com/e0IaVJ3uA8
— BCCI (@BCCI) January 18, 2021
கிரிக்கெட்
#INDvsENG | இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா


இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றது.இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது. புதன்கிழமை அகமதாபாத் மோடி மைதானத்தில் தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளிலேயே இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கிரிக்கெட்
400 விக்கெட்டுகள்… வரலாறு படைத்த அஷ்வின் ரவிச்சந்திரனின் சாதனை..!


இந்தியக் கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் உலகில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அஸ்வின் ரவிச்சந்திரன் இன்று இந்தியா- இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இன்றைய இரண்டாவது இன்னிங்க்ஸில் ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்திய போது 400 விக்கெட்டுகள் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார் அஸ்வின்.
இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் கும்ளே, கபில் தேவ், ஹர்பஜன் சிங் வரிசையில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது வீரர் ஆகியுள்ளார் அஸ்வின். ஆனால் இதுமட்டுமில்லாமல், முரளிதரனுக்கு அடுத்தபடியாக மிகக் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அஸ்வின். அஸ்வின் வெறும் 77 போட்டிகளில் இந்த 400 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
A major milestone for India’s spin king R Ashwin 🙌#INDvENG pic.twitter.com/QbXdiD8fYO
— ICC (@ICC) February 25, 2021
கிரிக்கெட்
INDvENG – திடீரென்று மைதானத்துக்குள் ஓடி வந்த ரசிகர்; பதறியடித்துப் பின்வாங்கிய கோலி – வைரல் சம்பவம்!!!


இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது, இந்திய கேப்டன் விராட் கோலியை நோக்கி ரசிகர் ஒருவர் ஓடி வந்துள்ளார். அவரைப் பார்த்து கோலி கொடுத்த ரியாக்ஷன், இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நேற்று அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்குத் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடி இந்திய அணி, 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் அதன் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜாக் கிராலி, அதிகபட்சமாக அரைசதம் விளாசினார். இந்தியாவுக்காக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மாவுடன் இணைந்து கோலி போட்ட பார்ட்னர்ஷிப்பால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதே நேரத்தில் 58 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த போது, ஜாக் லீச் பந்தில் விக்கெட் ஆனார் கோலி. இதற்கு முன்னர் தான் கோலியின் தீவிர ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி ஓடி வந்துள்ளார். அப்போது கோலி, பதறியடித்துப் பின் வாங்கிய ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகவும், மீம் கன்டென்டாகவும் மாறியுள்ளது.
கோலியின் ரியாக்ஷன் இதோ:
— EditVideoBot (@editvideobot) February 24, 2021
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
கிரிக்கெட்1 day ago
100வது டெஸ்டில் விளையாடும் இஷாந்த் சர்மா; இந்திய அணியில் அவர் முதன்முறை தேர்வானபோது கோலி செய்த காரியம்
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/02/2021)
-
கிரிக்கெட்1 day ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்