கிரிக்கெட்
4 விக்கெட்டுக்களை இழந்து திணறி வரும் இந்திய அணி: தனியாளாக போராடும் ரோஹித்!


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நேற்று தொடங்கிய நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்து இருந்தது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த நிலையில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தத்தளித்து வருகிறது.
இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் பென்ஸ்டாக் மற்றும் லீச் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 175 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்
ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகலா? அதிர்ச்சி தகவல்


ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பேரர்ச்சியாக உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் நடராஜன் விளையாடி வருகிறார். அவர் முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய நிலையில் திடீரென அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காயம் பெரிதாக இருப்பதாகவும் ஒரு வாரம் அவர் எழுந்து நிற்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சேர்ந்த ஐதராபாத் அணியின் அதிகாரி ஒருவர் கூறியபோது நடராஜன் காயம் குறித்து அறிக்கை இன்னும் எங்களுக்கு வரவில்லை என்றும் அந்த அறிக்கை வந்தவுடன் அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து பிசிசிஐயிடம் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் இதுகுறித்து கூறிய போது நடராஜனை நாங்கல் மிகவும் எதிர்பார்க்கின்றோம் என்றும், ஆனால் துரதிஸ்டவசமாக அவரது காயம் அதிகம் இருப்பதால் அவர் அணியில் இணைவது சந்தேகம்தான் என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட்
10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு: படிக்கல் அபார சதம்


நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மிக அபாரமாக விளையாடிய படிக்கல் சதமடித்து அசத்தியதோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. அதன்பின் 178 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான விராட் கோஹ்லி மற்றும் படிக்கல் ஆகிய இருவருமே ஆட்டத்தை முடித்து விட்டனர். விராட் கோலி 72 ரன்கள் அடித்தார், படிக்கல் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதனையடுத்து படிக்கல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்
IPL- ராஜஸ்தானுடன் டாஸ் போட்ட போது கோலி செய்த காரியத்தைப் பாருங்க!


ஐபிஎல் தொடரில் இன்று 16 வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையில் நடக்கிறது. ஆர்.சி.பி அணி கோலி தலைமையில் இன்று களமிறங்கியுள்ளது. இளம் கேப்டனான சஞ்ச சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் கண்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸின் போது இரு அணிகளின் கேப்டன்களும் மைதானத்தின் நடுவில் வந்தனர். அப்போது சாம்சன் டாஸ் தோற்றுவிட்டார். ஆனால் தான் டாஸ் வென்றதைக் கூட அறியாத விராட் கோலி, சற்று தள்ளி நின்றார்.
இதனால் ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கோலியை அழைத்து நீங்கள் தான் டாஸ் வென்றுள்ளீர்களர் என்றனர். அதற்கு அவர், ‘மன்னிக்கவும்… நான் டாஸ் வென்று பழக்கம் இல்லை’ என்று கூறி சிரித்தார்.
“I’m not used to winning tosses” 😅 @imVkohli #RCB have the toss and they will bowl first against #RR #VIVOIPL pic.twitter.com/a0bX6JNGak
— IndianPremierLeague (@IPL) April 22, 2021
கோலி இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளிலும் இந்தியாவுக்குத் தலைமை தாங்கிய போதும் மிக அரிதாகவே டாஸ் வெல்வார். இதனால் தான் அவர் அப்படியான ஒரு கருத்தைக் கூறினார். இந்நிலையில் இது குறித்தான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரைப் பொறுத்த வரையில், ஆர்.சி.பி நல்ல ஃபார்மில் உள்ளது. அதே நேரத்தில் ராயல்ஸ் வெற்றிக்காக திணறி வருகிறது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது.
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!