கிரிக்கெட்
இந்தியா – நியூசிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் அட்டவணை!


இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வெற்றி பெற்றதை அடுத்து ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு, மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
ஒரு நாள் போட்டி அட்டவணை
ஒரு நாள் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 5-ம் தேதி புதன் கிழமை காலை 7:30 மணியளவில் ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இரண்டாவது ஒரு நாள் போட்டி பிப்ரவரி 8-ம் தேதி சனிக்கிழமி காலை 7:30 மணிக்கு ஆக்லாந்து மைதானத்தில் நடைபெறும்.
மூன்றாவது ஒரு நாள் போட்டி பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமை காலை 7:30 மணிக்கு பே ஓவல் மைதானத்தில் நடைபெறும்.
டெஸ்ட் போட்டி அட்டவணை
முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை வெல்லிங்டன் மைதானத்தில், தினமும் காலை 4 மணிக்குத் தொடங்கி நடைபெறும்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 29-ம் தேதி தொடங்கி மார்ச் 4-ம் தேதி வரை கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டியும் தினமும் காலை 5 மணிக்கு நடைபெறும்.
கிரிக்கெட்
தமிழகத்துச் சிங்கம் நடராஜனுக்கு சின்னப்பம்பட்டியில் கொடுக்கப்பட்ட உற்சாக ‘ரத வரவேற்பு’; வைரல் வீடியோ!


இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மிக நீண்ட தொடர் சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி, 2-1 என்ற ரீதியில் கைப்பற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி, டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றியது. பின்னர் ஆரம்பித்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, வரலாற்றுப் படுதோல்வி அடைந்தது. எப்படியும் டெஸ்ட் தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்தியா மண்ணைக் கவ்வும் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் கணித்துக் கொண்டிருந்தனர்.
அதற்கு ஏதுவாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, சொந்த காரணங்களுக்காக தாயகம் திரும்பினார். பல முன்னணி வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. குழப்பமான சூழலில் களமிறங்கிய இந்திய அணி, அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டது.
தொடர்ந்த நடந்த மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டியிருந்தது. ஆனால் தன் அசாத்திய பேட்டிங் மூலம் இந்திய அணி, அந்த வெற்றியைத் தடுத்து நிறுத்தி ஆட்டத்தை டிரா செய்தது.
எல்லா பகைகளையும் தீர்த்துக் கொள்ள ஏதுவாக கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி அமைந்தது. முழு பலத்துடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இந்தியா சார்பில் அந்தப் போட்டியில் மட்டும் இரண்டு வீரர்கள் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாயினர். இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஒருவர் வாஷிங்டன் சுந்தர், இன்னொருவர் நடராஜன்.
இரண்டு பேரும் தங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் மூலம் ஆஸ்திரேலிய அணியை மிரட்டினர். அவர்களின் பங்களிப்பின் மூலமும், குழுவாக இந்திய அணியின் செயல்பாடு மூலமும் வலுவான ஆஸ்திரேலிய அணி வீழ்த்தப்பட்டது. தொடரையும் இந்தியா 2- 1 என்ற ரீதியில் கைப்பற்றி கெத்துக் காட்டியது.
ஆஸ்திரேலிய தொடருக்கு நெட் பவுலராக பறந்தவர் நடராஜன். 3வது ஒருநாள் போட்டியில் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அவர் சிறப்பாக செயல்படவே, அடுத்து டி20 தொடரிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து டெஸ்ட் தொடரிலும் களமிறங்கினார். தான் களமிறங்கிய அனைத்து வித போட்டிகளிலும் தன் திறமை மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் நடராஜன்.
ஒரே தொடரில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான முதல் வீரர் என்ற பெருமையையும் நடராஜன் பெற்றார்.
இப்படி சாதனைகள் பல குவித்து, சேலம் மாவட்டத்தில் இருக்கும் தன் சொந்த கிராமமான சின்னப்பம்பட்டிக்குத் திரும்பியுள்ளார் நடராஜன். அவரை ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று கிராம மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோ இதோ:
After making his international cricket debut and the historic test series win in Australia, Indian cricketer T Natarajan was given a grand welcome upon his arrival at the Chinnappampatti village in Salem district. pic.twitter.com/hAlZuwOGKP
— Shilpa Nair (@NairShilpa1308) January 21, 2021
கிரிக்கெட்
“அடேய்களா… நான் அவன் இல்லடா..!”- ஆஸி., வெற்றிக்குப் பின் தவறான டிம் பெய்னை ட்ரோல் செய்த ரசிகர்கள்


இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, டெஸ்ட் தொடரில் அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் உள்ளனர். இந்த வெற்றி சந்தோஷம் அதிகமாக தலைக்கேறிய சில இந்திய ரசிகர்கள், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்னை ஆன்லைனில் ட்ரோல் செய்துள்ளனர். அதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், தாங்கள் யாரை ட்ரோல் செய்கிறோம் என்பது தெரியாமலேயே கலாய்த்து தள்ளியுள்ளனர் இந்திய ரசிகர்கள். அதாவது நிஜ டிம் பெய்னை ட்ரோல் செய்யாமல், டிம் பெய்ன் என்ற பெயருடைய ஒருவரை கேலி செய்துள்ளனர் ரசிகர்கள். இதனால் மனம் நொந்து போன அந்த ‘போலி’ டிம் பெய்ன், ‘நான் அவன் இல்லப்பா… என்ன விடுங்கப்பா’ எனக் கதறியுள்ளார்.
அவர், ‘நான் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
இன்ஸ்டாகிரமிலும் ‘டிம் பெய்ன்’ என்று தேடினால் என் பெயர்தான் காண்பிக்கப்படுகிறது. அந்த பெய்ன், சமூக வலைதளங்களில் இல்லாத காரணத்தினால், டெஸ்ட் தொடர் தோல்விக்கு எனக்கு அர்ச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதுவரை மட்டும் சுமார் 600 மெஸேஜ்கள் எனக்கு வந்து விட்டன. தொடர்ச்சியாக நட்புக்கான விருப்பங்களும் வந்து கொண்டிருக்கின்றன. அது மட்டுமில்லாமல் என் புகைப்படங்களில் அதிக கமென்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில கமென்டுகள் ரசிக்கும்படி உள்ளன’ என்று ஸ்மைலிகளுடன் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தனக்கு வந்த சில மெஸேஜ்களின் ஸ்க்ரீன் ஷாட்களையும் அந்த டிம் பெய்ன் பகிர்ந்துள்ளார். அவை இதோ:
கிரிக்கெட்
“மண்ட பத்திரம்..!”- ஆஸி., தொடரில் வென்ற இந்திய அணிக்கு பீட்டர்சனின் எச்சரிக்கை


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி, 2-1 என்ற ரீதியில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கேப்டன் விராட் கோலி, முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையில் அனுபவமற்ற இளம் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணிலேயே அந்த அணியை வீழ்த்தியுள்ளது பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், கெவின் பீட்டர்சனும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அவர், இந்திய அணிக்கு ஓர் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
பீட்டர்சன், தன் ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணியின் வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்து, இந்தியில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
India 🇮🇳 – yeh aitihaasik jeet ka jashn manaye kyuki yeh sabhi baadhao ke khilaap hasil hui hai
LEKIN , ASLI TEAM 🏴 😉 toh kuch hafto baad a rahi hai jisse aapko harana hoga apne ghar mein .
Satark rahe , 2 saptaah mein bahut adhik jashn manaane se saavadhaan rahen 😉
— Kevin Pietersen🦏 (@KP24) January 19, 2021
‘இந்திய கிரிக்கெட் அணிக்கு, இது ஒரு வராற்றுச் சிறப்பு மிக்க வெற்றி தான். ஆகையில் இந்த வெற்றிக் கொண்டாடப்பட வேண்டும். அனைத்துத் தடைகளையும் மீறி இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.
அதே நேரத்தில் உங்களுக்கான உண்மையான சவால் என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூலம் வர உள்ளது. இங்கிலாந்து அணி, இந்தியாவுக்குப் பயணம் செய்ய உள்ளது. அவர்களை நீங்கள் உங்கள் இடத்தில் வீழ்த்தியாக வேண்டும்.
எனவே மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள். அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு அதீத கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து விடுங்கள்’ என்று வெளிப்படையாக கருத்து கூறியுள்ளார்.
-
வேலைவாய்ப்பு2 days ago
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு!
-
விமர்சனம்2 days ago
இன்னும் எத்தனை படங்கள் இப்படி?… புலிக்குத்தி பாண்டி விமர்சனம்
-
வேலைவாய்ப்பு2 days ago
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!