கிரிக்கெட்
#AUSvsIND இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு 20% அபராதம் விதித்த ஐசிசி!


ஆஸ்திரேலியா சுற்று பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தாமதமாகப் பந்து வீசியதால், மொத்த அணி வீரர்களுக்கு 20 சதவீத அபராத விதிக்கப்பட்டுள்ளது.
50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியில் பந்துகளை வீச ஒரு அணிக்கு, 3 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை அளிக்கப்படும். ஆனால் இந்திய அணி 4 மணி நேரத்திற்கும் கூடுதலாக நேரத்தை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
எனவே ஐசிசி கிரிக்கெட் விதிகளின் படி இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களுக்கு 20 சதவீதம் போட்டியின் சம்பளத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தவற்றை ஒப்புக்கொண்ட விராட் கோலி, அபராதத்தை ஒப்புக்கொண்டுள்ளார். எனவே விசாரணை ஏதும் இருக்காது என்று கூறப்படுகிறது.
கிரிக்கெட் வரலாற்றில் 50 ஓவருக்கு 4 மணி நேரத்திற்கும் அதிகமாக, 45 நிமிடங்கள் கூடுதலாக பந்து வீச நேரம் எடுத்துக்கொண்டது இந்த போட்டியாக இருக்கும் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
கிரிக்கெட்
சர்வதேச சாதனை படைத்த நடராஜன்… முதல் இந்தியக் கிரிக்கெட் வீரர் எனப் பெருமிதம்


இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன் புதிதாக ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றுள்ளார். தற்போது ஒரு நாள் போட்டி, டி20, டெஸ்ட் என இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இந்திய அணி நிறைவு செய்ய உள்ளது.
இந்த சூழலில் நெட் பவுலர் அதாவது வலைப்பயிற்சிக்காக மட்டும் பந்துவீட இந்திய அணியில் இடம்பெற்ற நடராஜன் எதிர்பாரா விதமான ஒரு நாள் போட்டி, டி20, டெஸ்ட் என சுற்றுப்பயணத்தின் மூன்ற்உ தொடர்களிலும் பங்கேற்கும் வாய்ப்புப் பெற்றார். இதன் மூலம் வலைப்பயிற்சி பந்துவீசச் சென்று சுற்றுப்பயணத்தின் அத்தனைப் போட்டிகளிலும் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையைப் படைத்துள்ளார் நடராஜன்.
மேலும், ஒரு சுற்றுப்பயணத்தின் மூலம் அத்தனை சர்வதேச போட்டி ரகங்களிலும் ஒன்று சேர்ந்தாற்போல் அறிமுகமான முதல் வீரர் என்ற பெருமையையும் நடராஜன் பெற்றுள்ளார்.
@Natarajan_91 has been grabbing his chances very well on this tour. 😁🙌 #TeamIndia #AUSvIND pic.twitter.com/sThqgZZq1k
— BCCI (@BCCI) January 3, 2021
கிரிக்கெட்
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும் சுதாரித்து ஆடிய ஆஸி.,- மீளுமா இந்தியா! #VideoHighlights


இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் ‘யார்க்கர் கிங்’ நடராஜன், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரைப் போலவே தன் அறிமுகப் போட்டியில் வாஷிங்டன் சுந்தரும் விக்கெட் எடுத்து கெத்துக் காட்டினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அந்த அணி சார்பில் டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினார். வார்னர், 1 ரன்னில் சிராஜ் பந்தில் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இன்னொரு ஓப்பனரான ஹாரிஸும், 5 ரன்களில் தாக்கூர் பவுலிங்கில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதைத் தொடர்ந்து களத்துக்கு வந்த மார்னஸ் லாபுஷானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். இதனால் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. ஆனால் நடராஜனின் அசத்தலான பவுலிங் காரணமாக ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
ஆஸ்திரேலியா சார்பில் மார்கஸ் லாபுஷானே, சதம் விளாசி அசத்தினார். அவரின் விக்கெட்டையும், நன்றாக விளையாடி வந்த மேத்யூ வேடின் விக்கெட்டை 45 ரன்களிலும் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பினார் நடராஜன். பின்னர் களத்துக்கு வந்த கேம்ரோன் கிரீன் மற்றும் டிம் பெய்ன் ஆகியோர் ஜோடி போட்டு ரன் சேர்க்கத் தொடங்கினார்கள்.
ஆட்ட நேர முடிவில் டிம் பெய்ன் 38 ரன்களுடனும், கிரீன் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அனுபவமற்ற இந்திய பந்துவீச்சு குழு, நாளை ஆஸ்திரேலிய அணியை 400 ரன்களுக்குள் சுருட்டுமா என்பதைத்தான் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இன்றைய போட்டியில் பவுலர்களில் ஒருவரான நவ்தீப் சயினி காயமடைந்தார். எனவே, நாளை ஒரு பவுலர் குறைவாகவே இந்திய அணி களமிறங்கும் என்று அஞ்சப்படுகிறது.
வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி, எப்படி தாக்குப் பிடிக்கும் என்பதை இந்த டெஸ்ட் போட்டி காட்டும். இன்றைய போட்டி ஹைலைட்ஸ் இதோ:
கிரிக்கெட்
INDvAUS- முதல் நாளே 2 விக்கெட்டுகள்… தெறிக்கவிட்ட நம்ப நடராஜன்!


இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் ‘யார்க்கர் கிங்’ நடராஜன், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அந்த அணி சார்பில் டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினார். வார்னர், 1 ரன்னில் சிராஜ் பந்தில் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இன்னொரு ஓப்பனரான ஹாரிஸும், 5 ரன்களில் தாக்கூர் பவுலிங்கில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதைத் தொடர்ந்து களத்துக்கு வந்த மார்னஸ் லாபுஷானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். இதனால் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. ஆனால் நடராஜனின் அசத்தலான பவுலிங் காரணமாக ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தற்போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா சார்பில் மார்கஸ் லாபுஷானே, சதம் விளாசி அசத்தினார். அவரின் விக்கெட்டையும், நன்றாக விளையாடி வந்த மேத்யூ வேடின் விக்கெட்டை 45 ரன்களிலும் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பினார் நடராஜன்.