கிரிக்கெட்
“அப்பா… இந்த ஷூ லேஸ் கட்டிவிடு”- சீரியஸாக வீடியோவில் பேசிய கிரீம் ஸ்மித்; நடுவில் வந்து ஹஸ்கி வாயஸில் கேட்ட மகன் #ViralVideo


தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித். தற்போது அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அதே நேரத்தில், தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் வர்ணனையாளராகவும், வல்லுநராகவும் பங்கேற்று தன் கருத்துகளை சொல்லி வருகிறார். அப்படிப்பட்ட கிரீம் ஸ்மித்திற்கு, அவரது மகன் பல்பு கொடுத்த சம்பவம் இணைய வைரலில் வேற ரகம்.
ஸ்மித், ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக வீட்டில் இருந்தபடியே வீடியோ மூலம் ‘பாகிஸ்தான் – தென் ஆப்ரிக்கா’ இடையிலான கிரிக்கெட் தொடர் பற்றி பேசுகிறார். அதில் தென் ஆப்ரிக்கா, எந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது பற்றியெல்லாம் அவர் மிக சீரியஸாக விவாதித்துக் கொண்டிருக்கும் போது, அவரது மகன் பேக்-கிரவுண்டில் உலாவுகிறார். முதலில் கையை வைத்து சைகை செய்து அங்கிருந்து விலகும்படி ஸ்மித், மகனுக்கு அன்புக் கட்டளைப் போடுகிறார்.
இருந்தாலும் அந்த வாண்டு விடாமல் அவர் அருகில் வந்து, ‘அப்பா… அப்பா… இந்த ஷூ லேஸ் மட்டும் கட்டிவிடுங்களேன்…’ என யாருக்கும் கேட்காதபடி ஹஸ்கி வாய்ஸில் ரிக்வஸ்ட் வைக்கிறது. அதற்கு ஸ்மித்தும் சிரித்துக் கொண்டே ஷூ லேஸ் கட்டிவிட்டு, வீடியோவிலும் நெறியாளரிடம் அது குறித்து விளக்குகிறார்.
அதற்கு நெறியாளர், ‘எவற்றலிருந்து வேண்டுமானால் ஓய்வு கிடைக்கலாம். அப்பா என்னும் வேலையில் இருந்து ஓய்வு கிடைக்காது’ என்கிறார். அதற்கு ஸ்மித்தும் ஆமோதித்து தலையசைக்கிறார். இந்த வீடியோ பார்ப்போர் முகங்களில் மகிழ்ச்சியை வரவழைக்கும் வகையில் உள்ளது.
வீடியோ இதோ:
Graeme Smith’s son crashing a press conference so he can get his shoelaces tied is absolutely adorable ❤️ pic.twitter.com/OorqWXm9Pz
— Wisden (@WisdenCricket) January 22, 2021
கிரிக்கெட்
INDvENG – திடீரென்று மைதானத்துக்குள் ஓடி வந்த ரசிகர்; பதறியடித்துப் பின்வாங்கிய கோலி – வைரல் சம்பவம்!!!


இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது, இந்திய கேப்டன் விராட் கோலியை நோக்கி ரசிகர் ஒருவர் ஓடி வந்துள்ளார். அவரைப் பார்த்து கோலி கொடுத்த ரியாக்ஷன், இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நேற்று அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்குத் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடி இந்திய அணி, 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் அதன் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜாக் கிராலி, அதிகபட்சமாக அரைசதம் விளாசினார். இந்தியாவுக்காக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மாவுடன் இணைந்து கோலி போட்ட பார்ட்னர்ஷிப்பால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதே நேரத்தில் 58 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த போது, ஜாக் லீச் பந்தில் விக்கெட் ஆனார் கோலி. இதற்கு முன்னர் தான் கோலியின் தீவிர ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி ஓடி வந்துள்ளார். அப்போது கோலி, பதறியடித்துப் பின் வாங்கிய ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகவும், மீம் கன்டென்டாகவும் மாறியுள்ளது.
கோலியின் ரியாக்ஷன் இதோ:
— EditVideoBot (@editvideobot) February 24, 2021
கிரிக்கெட்
INDvENG – “எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்!”- சர்ச்சையைக் கிளப்பும் ஜாக் கிராலி


இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நேற்று அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்குத் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடி இந்திய அணி, 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் அதன் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜாக் கிராலி, அதிகபட்சமாக அரைசதம் விளாசினார். இந்தியாவுக்காக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸில், அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா அரசைதம் விளாசி தொடர்ந்து களத்தில் இருக்கிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் தங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டும் வகையில் மூன்றாவது அம்பயர் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார் ஜாக் கிராலி.
இந்திய அணி பேட்டிங் செய்த போது, ரோகித் சர்மாவை ஸ்டம்பிங் செய்து அப்பீல் செய்தது இங்கிலாந்து. அது குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு மூன்றாவது அம்பயரிடம் சென்றது. அவர் ஒரு சில ஆங்கில்களில் இருந்து மட்டும் ஸ்டம்பிங்கை பார்த்து விட்டு, நாட்-அவுட் கொடுத்து விட்டார். இது சரியில்லை என்பது தான் இங்கிலாந்து அணியின் வாதம்.
இது பற்றி ஜாக் கிராலி, ‘இப்படியான முடிவுகள் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகின்றன. நாங்கள் ஆட்டத்தில் தற்போது பின் தங்கியுள்ளோம். இதைப் போன்ற சமயங்களில் சில முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக மாற வேண்டும் என்று கருதுகிறோம். நான் ஸ்டம்பிங்கில் அவுட், நாட்-அவுட் என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை. ஏன் இந்திய அணிக்கான அப்பீல் மட்டும் பல ஆங்கில்களில் இருந்து பார்க்கப்படவில்லை. அது தான் எனது கேள்வி’ என்று கேட்டுள்ளார். இது மிகப் பெரும் சர்ச்சையாக மாறி வருகிறது.
காரணம், இந்தப் போட்டியில் மைதானத்தில் இருக்கும் நடுவர்களும், மூன்றாவது அம்பயரும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இந்தியர்களுக்கும் இந்திய அணிக்கும் சாதகமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தான் சர்ச்சையாகி உள்ளது.
கிரிக்கெட்
#INDvsENG | பந்தின் மீது எச்சில் தடவிய ஸ்டோக்ஸ்.. எச்சரித்த நடுவர்!


இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது பந்தின் மீது பென் ஸ்டோக்ஸ் எச்சில் தடவியதைப் பார்த்த நடுவர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
பொதுவாக கிரிக்கெட்டில் பந்து வீசும் போது, நன்கு சுழன்று செல்ல வேண்டும் என்பதற்காக அதை ஈரம் ஆக்க எச்சில் தடவ அனுமதிப்பார்கள். ஆனால் இது கொரோனா காலம் என்பதால் இவ்வாறு பந்தின் மீது எச்சில் தடவ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் நேற்று இந்திய அணியின் முதல் இன்னிக்ஸ் பேட்டிங்கின் 12வது ஓவரை வீசிய பென் ஸ்டோக், பந்தின் மீது எச்சில் தடவினார். இதை கண்ட நடுவர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Cricket in the #COVID19 era! Umpire sanitising the ball after Ben Stokes used saliva. The next time someone does so, the batting team gets five runs.#INDvsENG pic.twitter.com/cuwPxPoxK8
— Samanway Banerjee (@qriosam) February 24, 2021
பென் ஸ்டோக்ஸ்க்கு எச்சரிக்கை விடுத்தது மட்டுமல்லாமல் பந்தின் மீது சானிடைசர் போட்டு துடைத்தனர்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எச்சில் துப்பியதற்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீண்டும் இந்த தவறு நேர்ந்தால், இங்கிலாந்து அணியின் 5 ரன்கள் அபராதமாகக் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 112 ரன்களுக்கு ஆட்டத்தை இழந்தது. அடுத்து விளையாடத் தொடங்கிய இந்திய அணி 33 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 99 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் ஷர்மா 57 ரன்களுடனும், ரஹானே 1 ரன்னுடனும் ஆட்டாம் இழக்காமல் ஆடி வருகின்றனர்.
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
சினிமா செய்திகள்2 days ago
13 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவுக்கு வரும் இயக்குநர்… வடிவேலுவுக்கு அழைப்பு..!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி… வெறித்தனமாக பயிற்சி செய்யும் ‘தல’ அஜித்!