கிரிக்கெட்
டி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்!


சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் முதல் முறையாக ஷிக்கர் தவன் சதம் அடித்துள்ளார்.
34 வயதான ஷிக்கர் தவான், 2007-ம் ஆண்டு, ஏப்ரல் 3-ம் தேதி டி20 போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.
இதுவரை 268 டி20 போட்டிகளில் ஷிக்கர் தவான் விளையாடியுள்ளார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான டி20 போட்டியில், டெல்லி அணி சார்பாக விளையாடிய ஷிக்கர் தவான் 57 பந்துகளில் 100 ரன்கள் அடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக 2019-ம் ஆண்டு ஐபில் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 63 பந்துகளில் 97 ரன்கள் அடித்து இருந்ததே, டி20 போட்டிகளில் தவான் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.
கிரிக்கெட்
சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி – மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கொல்கத்தாவில் இருக்கும் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் கங்குலிக்கு முதன்முறையாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதே நேரத்தில் கங்குலிக்கு அடுத்த சில நாட்களில், மேல் சிகிச்சைத் தேவைப்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
சுமார் 5 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பின்னர், கடந்த 7 ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போதில் இருந்து இப்போது வரை கங்குலியின் வீட்டில், அவரை கண்காணித்து வந்தது ஒரு மருத்துவக் குழு. இந்நிலையில் அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட்
ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் எங்கே… எப்போது…?


2021ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டி ஏலத்துக்காக எட்டுஅணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ – யிடம் ஏற்கெனவே ஒப்படைத்துவிட்டன.
இதனை தொடர்ந்து எட்டு அணிகளுக்கான வீரர்களின் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான தொடரை பிசிசிஐ வெற்றிகராம முடித்துவிட்டால் இந்த ஆண்டு ஐபில் தொடரும் இந்தியாவிலேயே நடக்கும் என எதிர்பார்க்கலாம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் துபாயில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
எட்டு அணிகளிலும் உள்ள வீரர்களின் விரவங்கள்… மற்றும் அணியிக்கு தேவையான வீரர்கள் மற்றும் அவர்களிடம் மீதம் உள்ள தொகையின் விவரம்…
சென்னை சூப்பர் கிங்கஸ்
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 18
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 7
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.62.10 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.22.90 கோடி
தேவையான வீரர்கள்: 7
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 1
டெல்லி கேப்பிட்டல்ஸ்
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 19
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 6
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.72.0982 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.12.90 கோடி
தேவையான வீரர்கள்: 6
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 2
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 16
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 3
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.31.80 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.53.20 கோடி
தேவையான வீரர்கள்: 9
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 5
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 17
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 6
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.74.25 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.10.75 கோடி
தேவையான வீரர்கள்: 8
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 2
மும்பை இந்தியன்
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 18
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 4
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.69.65 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.15.35 கோடி
தேவையான வீரர்கள்: 8
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 2
ராஜஸ்தான் ராயல்ஸ்
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 17
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 5
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.50.12 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.34.85 கோடி
தேவையான வீரர்கள்: 8
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 3
ராயல் சேலஞ்ஜசர்ஸ் பெங்களூரு
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 12
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 4
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.48.10 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.35.90 கோடி
தேவையான வீரர்கள்: 13
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 4
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
மொத்த வீரர்களின் எண்ணிக்கை : 22
வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை : 7
இதுவரை செலவு செய்த தொகை: ரூ.74.25 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.10.75 கோடி
தேவையான வீரர்கள்: 3
வெளிநாட்டு வீரர்களின் தேவை: 1
கிரிக்கெட்
உல்லாச மோடில் ரிஷப் பன்ட்; தோனி – சாக்ஷியுடன் ஃபன் பார்ட்டி


இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஹாட்-டாப்பிக்காக இருப்பது ரிஷப் பன்ட் தான். சில நாட்களுக்கு முன்னர் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் ஹீரோவாக உருவெடுத்துள்ளது ரிஷப் பன்ட் தான். இரு அணிகளுக்கும் இடையிலான 4வது மற்றும் கடைசி போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று, அணியின் வெற்றியை உறுதி செய்தார் பன்ட். இதனால் இந்திய டெஸ்ட் அணியின் அவரது இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பன்ட், தனக்கு கிடைத்திருக்கும் ஓய்வு நேரத்தை உல்லாசமாக ரிலாக்ஸ் மோடில் கழித்து வருகிறார்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அவரது மனைவி சாக்ஷி ஆகியோரோடு பன்ட், ஃபன் அவுட்டிங் சென்றுள்ளார். இது குறித்தான போட்டாவை சாக்ஷி, தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அடுத்ததாக இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் டெஸ்ட் ஆரம்பமாகிறது. இந்தப் போட்டியிலும் தொடரிலும் ரிஷப் பன்ட் மீண்டும் அதிரடி பேட்டிங் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.