Connect with us

கிரிக்கெட்

‘IPL-ல விளையாடுங்க; ஆனா, இதுக்கெல்லாம் நோ!’- வீரர்களுக்கு கட்டுப்பாடு விதித்த ஆஸி., கிரிக்கெட் வாரியம்

Published

on

இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவில் ஐபிஎல் 2021 தொடர் தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள். இந்நிலையில் தங்கள் நாட்டு வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தவிட்டு உள்ளது.

‘ஆஸ்திரேலிய வீரர்கள் ஃபாஸ்ட் புட், மதுபானம், புகையிலை அல்லது சூதாட்டம் போன்றவற்றின் விளம்பரங்களுக்கு எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தபடக் கூடாது.

தொலைக்காட்சியிலோ, வானொலி வாயிலாகவோ, செய்தித் தாள் வழியாகவோ, இணையம் வழியாகவோ அல்லது மற்ற எந்த வகையிலும் மேற்குறிப்பிட்ட விஷயங்களுக்கான விளம்பரங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஈடுபடுத்தபடக் கூடாது’ என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-க்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு கறார் அறிக்கையைக் கொடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் 14 வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல்லும் மிக அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

கிரிக்கெட்

சீரியஸாக பேசிக் கொண்டிருந்த பாண்டியா – அக்சர் படேல்; நடுவில் புகுந்து கலாய்த்த கேப்டன் கோலி #ViralVideo

Published

on

By

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த அக்சர் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.

3வது போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, 145 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது நாளில் விளையாடிய இங்கிலாந்து அணி, 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 2 – 1 என்று முன்னிலைப் பெற்றுள்ளது. அடுத்தப் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகன் விருதை வென்ற அக்சர் படேலை, இந்திய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பிசிசிஐ சார்பில் நேர்காணல் செய்தார். அப்போது அக்சர் பற்றி பேசிய பாண்டியா, ‘ஒரு நீண்ட கால நண்பனாக அக்சர் படேலின் சர்வதேச டெஸ்ட் அறிமுகத்துக்காக நான் காத்திருந்தேன். அப்படி காத்திருந்த எனக்கு, அக்சர் இப்படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது மிகுந்த மன நிறைவைத் தருகிறது’ என்றார்.

தொடர்ந்து அக்சரிடம், மைதானம் குறித்தும், தன் சொந்த மாநிலத்தில் விளையாடுவது குறித்தும், ஆட்டம் குறித்தும் சீரியஸாக பேசத் தொடங்கினார். அப்போது தூரத்தில் இருந்து உள்ளே வந்த கேப்டன் விராட் கோலி, இருவரின் நேர்காணலிலும் உட்புகுந்து கலாய்த்தார். இதை சற்றும் எதிர்பாராத இருவரும் நேர்காணலைப் பொருட்படுத்தாமல் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

கோலி குறும்புத்தனமாக இப்படி உள்ளே வந்து கேலி செய்தது இணையத்தில் படு வைரலாக மாறி வருகிறது.

கோலி கலாய் வீடியோ இதோ:

Continue Reading

கிரிக்கெட்

INDvENG – 2 நாளில் முடிந்த 3வது டெஸ்ட்; குஜராத் பிட்ச்-ஐ கேவலப்படுத்திய யுவ்ராஜ் சிங், இங்கி., ஆஸி., வீரர்கள்!

Published

on

By

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிவுக்கு வந்துள்ளது பல கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம் மீது அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

3வது போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, 145 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது நாளில் விளையாடிய இங்கிலாந்து அணி, 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 2 – 1 என்று முன்னிலைப் பெற்றுள்ளது. அடுத்தப் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்தும் நரேந்திர மோடி பிட்ச் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ‘இரண்டு நாட்களில் டெஸ்ட் முடிந்தது நல்லதுதானா என்று எனக்குத் தெரியவில்லை. இதைப் போன்ற விக்கெட்டுகளில் அனில் கும்ப்ளேவும் ஹர்பஜன் சிங்கும் பந்து வீசியிருந்தால் அவர்கள் 1000 மற்றும் 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருப்பர்’ என்று தெரிவித்துள்ளார்.

அவரைப் போலவே இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன், ‘இந்தப் போட்டி மிகுந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்தவையாக இருந்தது. ஆனால் இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற விக்கெட் கிடையாது’ என்று சாடியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக், ‘அடுத்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடி இருந்தால், அணிகள் அடிக்கும் ரன்கள் இன்னும் குறைவாக இருக்கும். ஜோ ரூட்டுக்கு 5 விக்கெட்டுகள் கிடைக்கும் போது, இந்த பிட்ச்சின் தராதரம் தெரிகிறது’ என்று விமர்சித்துள்ளார்.

இப்படி பலரது விமர்சனக்குத்துக்கும் உள்ளான குஜராத் பிட்ச், அடுத்தப் போட்டிக்கு மாற்றப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 

 

 

Continue Reading

கிரிக்கெட்

#INDvsENG | இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா

Published

on

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றது.இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது. புதன்கிழமை அகமதாபாத் மோடி மைதானத்தில் தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளிலேயே இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Continue Reading
தமிழ்நாடு44 mins ago

ஆளுனர் தமிழிசை எடுத்த அதிரடி நடவடிக்கை: புதுவையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை

சினிமா செய்திகள்53 mins ago

ஆஸ்கார் விருதை நெருங்கிவிட்டதா சூர்யாவின் சூரரை போற்று?

தமிழ்நாடு1 hour ago

பிரதமர் மோடிக்கு போட்டியாக திருக்குறள் படிக்கும் ராகுல்காந்தி!

கிரிக்கெட்1 hour ago

சீரியஸாக பேசிக் கொண்டிருந்த பாண்டியா – அக்சர் படேல்; நடுவில் புகுந்து கலாய்த்த கேப்டன் கோலி #ViralVideo

இந்தியா2 hours ago

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

வேலைவாய்ப்பு2 hours ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் வேலைவாய்ப்பு!

கிரிக்கெட்2 hours ago

INDvENG – 2 நாளில் முடிந்த 3வது டெஸ்ட்; குஜராத் பிட்ச்-ஐ கேவலப்படுத்திய யுவ்ராஜ் சிங், இங்கி., ஆஸி., வீரர்கள்!

வேலைவாய்ப்பு3 hours ago

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு3 hours ago

விவசாயிகள் வாங்கிய நகைக்கடன்களும் தள்ளுபடி: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு10 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ1 month ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ1 month ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ1 month ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ1 month ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ2 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ2 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ2 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ2 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்2 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி2 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending