கிரிக்கெட்
டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு ஒரு அணி; ஆசிய கோப்பைக்கு ஒரு அணி; பிசிசிஐ-யின் பலே திட்டம்


வரும் ஜூன் மாதம் கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதே காலக்கட்டத்தில் ஆசிய கோப்பைத் தொடரும் நடத்தப்படலாம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியால், ஆசிய கோப்பையில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படும் என்று தெரிகிறது. இதைச் சமாளிக்க ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளதாம் பிசிசிஐ.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஆசிய கோப்பை தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்திய அணி ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட உள்ளதால் ஆசிய கோப்பை தொடரில் எப்படி விளையாட முடியும் என்ற குழப்பத்தில் பிசிசிஐ உள்ளது.
மேலும் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதால் இந்திய அணி இங்கிலாந்திலே தங்க திட்டமிட்டுள்ளது. இதனால் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடர் தள்ளி வைக்கப்படுமா அல்லது ஐசிசியிடம் அனுமதி பெற்று மாற்று அணியை அனுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் குழுவினர் பிசிசிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளது.
கிரிக்கெட்
IPL- ராஜஸ்தானுடன் டாஸ் போட்ட போது கோலி செய்த காரியத்தைப் பாருங்க!


ஐபிஎல் தொடரில் இன்று 16 வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையில் நடக்கிறது. ஆர்.சி.பி அணி கோலி தலைமையில் இன்று களமிறங்கியுள்ளது. இளம் கேப்டனான சஞ்ச சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் கண்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸின் போது இரு அணிகளின் கேப்டன்களும் மைதானத்தின் நடுவில் வந்தனர். அப்போது சாம்சன் டாஸ் தோற்றுவிட்டார். ஆனால் தான் டாஸ் வென்றதைக் கூட அறியாத விராட் கோலி, சற்று தள்ளி நின்றார்.
இதனால் ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கோலியை அழைத்து நீங்கள் தான் டாஸ் வென்றுள்ளீர்களர் என்றனர். அதற்கு அவர், ‘மன்னிக்கவும்… நான் டாஸ் வென்று பழக்கம் இல்லை’ என்று கூறி சிரித்தார்.
“I’m not used to winning tosses” 😅 @imVkohli #RCB have the toss and they will bowl first against #RR #VIVOIPL pic.twitter.com/a0bX6JNGak
— IndianPremierLeague (@IPL) April 22, 2021
கோலி இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளிலும் இந்தியாவுக்குத் தலைமை தாங்கிய போதும் மிக அரிதாகவே டாஸ் வெல்வார். இதனால் தான் அவர் அப்படியான ஒரு கருத்தைக் கூறினார். இந்நிலையில் இது குறித்தான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரைப் பொறுத்த வரையில், ஆர்.சி.பி நல்ல ஃபார்மில் உள்ளது. அதே நேரத்தில் ராயல்ஸ் வெற்றிக்காக திணறி வருகிறது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது.
கிரிக்கெட்
டாஸ் வென்ற பெங்களூரு, பேட்டிங் செய்ய தயாராகும் ராஜஸ்தான்!


இன்று நடைபெற உள்ள ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சற்றுமுன் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி டாஸ் வென்ற நிலையில் அவர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்
இதனை அடுத்து ராஜஸ்தான் அணியின் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது. இன்றைய போட்டியில் பெங்களூரு அணி வென்றால் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ராஜஸ்தான் அணி வென்றால் 4 புள்ளிகளுடன் குறைந்த பட்சம் 5-வது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
பெங்களூரு: விராத் கோஹ்லி, படிக்கல், மாக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷாபஸ் அகமது, ஜேமிசன், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், ரிச்சர்ட்சன், சிராஜ், சாஹல்,
ராஜஸ்தான் அணி: பட்லர், வோஹ்ரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் டூபே, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேட்டியா, ஸ்ரேயா கோபால், சேட்டன் சகாரியா, முஸ்தபா ரஹ்மான்
கிரிக்கெட்
220 ரன்கள் அடித்தும் டென்ஷனான மேட்ச்: சிஎஸ்கே த்ரில் வெற்றி!


நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடி 220 ரன்கள் எடுத்தும் அந்த இலக்கை கொல்கத்தா அணி நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் 221 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி முதல் 5 விக்கெட்டுகளை 35 ரன்களுக்கு இழந்துவிட்டது. ஆனால் அதன்பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் மற்றும் ரஸல் அதிரடியாக விளையாடினார்கள். அதன் பின்னர் பேட் கம்மின்ஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியதால் ஒரு கட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெறும் நிலையில் இருந்தது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
கிரிக்கெட்2 days ago
கடைசி ஓவர் வரை போராடிய மும்பை: டெல்லி அணி த்ரில் வெற்றி!
-
சினிமா செய்திகள்1 day ago
ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்: விரைவில் ரிலீஸ்
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/04/2021)