Connect with us

கிரிக்கெட்

பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்தியா.. புரிந்த சாதனைகள் என்னென்ன?

Published

on

ஆசிய கோப்பை, கிரிக்கெட், இந்தியா, வெற்றி, பாகிஸ்தான், சாதனை, Asia Cup 2018, India, thrashed, Pakistan, records broken

ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. அதில் இந்தியா பாகிஸ்தானை 9 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழந்து 237 ரன்கள் எடுத்து இருந்தது.

பின்னர் 238 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி விளையாடத் துவங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிக்கர் தவான் மற்றும் ரோகித் ஷார்மா இருவரும் சதம் அடித்தனர்.

இந்நிலையில் இந்தப் போட்டியின் போது நடைபெற்ற சாதனைகள் பற்றி இங்குப் பார்க்கலாம். ரோகித் ஷர்மா ஒரு நாள் போட்டிகளில் 7,000 ரன்களைக் கடந்துள்ளார். 181 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் ஷர்மா வேகமாக இந்த இலக்கினை எட்டியதில் 5 இடத்தினைப் பிடித்துள்ளார். ஆம்லா 150 போட்டிகளில் 7,000 ரன்களைக் கடந்து முதல் இடத்தினைப் பிடித்துள்ளார். இந்தியர்களுக்கு இடையில் வீராட் கோஹ்லி, கங்குலியை அடுத்து ரோகித் மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளார்.

ஆசிய கோப்பை போட்டிகளில் துவக்க ஆட்டக்கார்களாக இறங்கி 210 எடுத்த இரண்டாம் ஜோடி என்ற சாதனையினை ரோகித், தவான் கூட்டணி படைத்துள்ளது. இதற்கு முன்பு விராத் மற்றும் ரஹானே கூட்டணி 213 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

ஒரு நாள் போட்டிகளில் சவுரவ் கங்குலி, விராட் கோலி மற்றும் சச்சின் டெண்ட்டுல்கரை அடுத்து அதிகச் செஞ்சுரி எடுத்த வீரராக ரோகித்(19) உள்ளார்.

நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 14 சதங்கள் அடித்துள்ள யுவராஜ் சிங்கை பின்னுக்குத் தள்ளி இடது கை பேட்ஸ்மேஙளில் இரண்டாம் அதிகச் சதம் அடித்த வீரராகத் தவான் சாதனை புரிந்துள்ளார்.

ஐசிசி சாம்ப்பியன்ஸ் ட்ரோப்பி, ஐசிசி உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பைகளில் குறைந்தது இரண்டு செஞ்சுரி அடித்த சாதனையும் தவான் செய்துள்ளார்.

ஆசிய கோப்பைகளில் ரோகித் – தவான் இணை 8 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. துவக்க ஆட்டக்கார்களாக இருவரும் 3,846 ரன்களை இந்திய அணிகளுக்காக அளித்துள்ளனர். 2013-ம் ஆண்டு 178 ரன்கள் பெற்றதே இவர்கள் இணையின் அதிகபட்சமாக இருந்த நிலையில் இந்தப் போட்டியில் 210 ரன் எடுத்துள்ளனர்.

தோணியை அடுத்து ஒரு நாள் போட்டிகளில் 300 சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையும் ரோகித் ஷர்மாவிற்குக் கிடைத்துள்ளது. ரோகித் – தவான் இணை 13 வது முறையாகச் செஞ்சிரிகளை அடித்துள்ளனர். அதிகபட்சமாக 21 எனச் சச்சின் – கங்குலி இணை கூட்டணி உள்ளது.

கிரிக்கெட்

தோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்!

Published

on

அபுதாபில் உள்ள ஷேக் ஜயித் மைதானத்தில் முதல் போட்டியில், மும்பை இந்தியன் அணியை எதிர்த்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

டாஸ் வென்ற தோனி, இரண்டாம் பாதியில் பனியில் பந்து வீசுவது கடினமாக இருக்கும், எனவே பவுளிங் தேர்வு செய்வதாகக் கூறினார். மைதானத்தையும் வானிலையையும் முன்பே கணித்திருந்த தோனியின் முடிவு பலராலும் வரவேற்கப்பட்டது.

முதலில் பேட்டிங் ஆட தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ரோகித் ஷர்மா, டீ காக் இருவரும் கலம் இறங்கினர். சாஹர் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரோகித் ஷர்மா அதிரடி காட்டினார்.

ஆனால் 10 பந்துகளுக்கு 12 ரன் அடித்து இருக்கும் போது, 4வது ஓவரில் 4 பந்தை சாவ்லா வீசிய பந்தில் சாம் குர்ரனிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக ரோகித் ஷர்மா விளையாடினர். அவரை தொடர்ந்து டீ காக் அதிரடியாகத் தனது அட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், 20 பந்துகளுக்கு 33 ரண்கள் எடுத்திருந்த டீ காக், சாம் குர்ரன் போட்ட பந்தில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளீயேரினார். அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணீயில் சவுரப் திவாரி மட்டும் 31 பந்துகளில் 41 அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 162 ரன்களை மும்பை இந்தியன்ஸ் எடுத்து இருந்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க அட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். ஷேன் வாட்சன் 5 பந்துகளுக்கு 4 ரன் அடித்து இருக்கும் போது போல் வீசிய பந்தில் எல்.பி.டபள்யு ஆகி வெளியேறினார். முரளி விஜய் 7 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே அடித்து இருந்த நிலையில் ஜேம்ஸ் பாட்டிசன் பந்தில் எல்.பி.டபள்யு ஆகி வெளியேறினார்.

பின்னர் ஜோடி செர்ந்த டூபிசிஸ், அம்பத்தி ராயுடு அணி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தன. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 48 பந்துகளுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் சாஹர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். டூபிளிசிஸ் 44 பந்துகளுக்கு 58 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ரவீந்தர ஜடேஜா 5 பந்துகளுக்கு 10 ரன்களும், சாம் குர்ரன் 6 பந்துகளுக்கு 18 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தோனி இரண்டு பந்துகள் எதிர்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டம் இழக்காமலிருந்தார்.19 ஓவரின் 2வது பந்தில் 166 ரன்கள் அடித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐபிஎல் 2020-ன் முதல் போட்டியில் வெற்றியுடன் தங்களது வீர நடையை சென்னை சூப்பர் கிங்ஸ் அடி எடுத்து வைத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இரண்டாம் போட்டியில் டெல்லி டேர்டெவில் அணியும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.

Continue Reading

கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்!

Published

on

ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த 10 பேட்ஸ்மேன் யார் என்ற புதிய பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

முதல் இரண்டு இடத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் விராட் கோலி (871), ரோகித் சர்மா (855) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணி வீரரி பாபர் ஆசாம் (829), 4வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ராஸ் டெய்லர் (818), 5வது இடத்தில் தென் ஆபிரிக்காவின் டூப்ளீசிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


பந்துவீச்சு பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 719 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தை ஆஸ்திரேலியாவின் டிரெண்ட் போல்ட் பிடித்துள்ளார்.

Continue Reading

கிரிக்கெட்

ஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்?

Published

on

ஐபிஎல் 2020 தொடர் 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த அணிகளில் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

முதலிடத்தில் 1,135 சிக்சர்களுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது.

இரண்டாம் இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 1,095 சிக்சர்களை அடித்துள்ளது.

பஞ்சாப் அணி 975 சிக்சர்களுடன் 3வது இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 975 சிக்சர்களை அடித்து 4வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி 929 சிக்சர்களுடம் 5வது இடத்திலும், டெல்லி அணி 887 சிக்சர்களுடன் 6வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 679 சிக்சர்களிடன் 7வது இடத்திலும், ஐதரபாத் அணி 531 சிக்சர்களுடன் 8வது இடத்தையும் பிடித்துள்ளன.

ஐபிஎல் 2020-ல் எந்த் அணி அதிக சிக்சர்கள் அடிக்கும் என்பதை கமெண்ட் பண்ணுங்க.

Continue Reading
வேலை வாய்ப்பு15 hours ago

மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு15 hours ago

தமிழக அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்16 hours ago

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (25/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/09/2020)

வேலை வாய்ப்பு2 days ago

சென்னை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு2 days ago

ஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

தமிழ்நாடு2 days ago

விஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)

வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்2 weeks ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்4 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்7 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்7 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்7 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: