Connect with us

கிரிக்கெட்

வீரர்கள் மட்டுமல்ல, அம்பயர்களும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்!

Published

on

இந்தியாவில் தற்போது ஒரு பக்கம் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஐபிஎல் தொடர் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்திய அரசுக்கும் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் பிசிசிஐக்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மக்கள் கொத்துக்கொத்தாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மடிந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் தேவையா? என்ற குரல் மக்கள் மத்தியிலும் எழுந்து வருகிறது.

அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களில் சிலர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் விலகி சொந்த நாட்டுக்குத் திரும்ப தயாராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து வீரர்கள் மட்டுமின்றி அம்பயர்களும் விலகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐபிஎல் தொடரில் இருந்து இரண்டு நடுவர்கள் விலகி விட்டதாகவும் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த நிதின் மேனன் என்றும் இன்னொருவர் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த பால் ரைபில் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக இவர்கள் இருவரும் தெரிவித்த போதிலும் கொரோனா வைரஸ் பயம் காரணமாக விலகி இருக்கலாம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

கிரிக்கெட்

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கடத்தல்; சிக்கிய மர்மக் கும்பல்!

Published

on

By

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் மெக்கில், கடந்த மாதம் கடத்தப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து அவரைக் கடத்தியவர்களைத் தேடும் பணியில் ஆஸ்திரேலிய காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். சிட்னியின் ஆஸ்திரேலிய போலீஸார், திடீர் சோதனை செய்ததில் ஸ்டுவர்டை கடத்திய கும்பலைச் சேர்ந்த 4 பேரை மடக்கிப் பிடித்தனர்.

50 வயதாகும் ஸ்டுவர்டை, கடந்த மாதம் 14 ஆம் தேதி மர்மக் கும்பலால் கடத்தப்பட்டார். அவரை சில மணி நேரம் துன்புறுத்திய அந்தக் கும்பல் ஸ்டுவர்டை விடுவித்தது. இந்த சம்பவத்தால் மிரண்டு போன ஸ்டுவர்ட், அப்போதிலிருந்து இப்போது வரை பெரிதாக வெளியில் தலை காட்டாமல் இருந்து வருகிறார்.

இந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஸ்டுவர்ட்க்கு நியாயம் கிடைக்க ஆஸ்திரேலிய போலீஸ் முயன்று வந்துள்ளது. அந்த வகையில் சிட்னியில் செய்த திடீர் ரெய்டில் வழக்கில் சம்பந்தமுடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவத்தையொட்டி, எந்த வித தொகையும் கடத்தல் கும்பலுக்கு கொடுக்கப்பவில்லை. ஆனால், பணத்தைக் குறி வைத்து தான் கடத்தல் சம்பவம் நடந்ததாக தெரிகிறது.

 

Continue Reading

கிரிக்கெட்

ரத்து செய்யப்பட்ட ஐபிஎல்- RCB அணியை வைத்து செய்த நெட்டிசன்ஸ்!

Published

on

By

பல வீரர்களுக்கும், அணி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்ததைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த முறை ஐபிஎல் சீசனைப் பொறுத்தவரை 8 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது டெல்லி கேபிட்டல்ஸ். அதைத் தொடர்ந்து தலா 10 புள்ளிகள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

ஆர்.சி.பி அணி இந்த முறை, எப்படியும் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து கோப்பையை முதல் முறையாக தட்டிச் செல்லும் என்று பலரும் ஆருடம் கூறி வந்தனர். இப்படியான சூழலில் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை பொங்கியெழ வைத்துள்ளது.

குறிப்பாக ஆர்.சி.பி அணியை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி, இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே கிண்டல்களுக்கும் கேலிக்கும் வழி வகுத்துள்ளது.

ஆர்.சி.பி அணியை கேலி செய்து வந்த மீம்ஸ்கள்:

Continue Reading

கிரிக்கெட்

ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைப்பு! பிசிசிஐ அறிவிப்பு

Published

on

By

கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று கொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் நேற்றைய போட்டி நிறுத்தப்பட்டது. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டது

இந்த நிலையில் அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே ஐபிஎல் போட்டியை நிறுத்த உத்தரவிட வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் தற்போது பிசிசிஐ இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தவுடன் ஐபிஎல் போட்டி தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Continue Reading
தமிழ்நாடு13 mins ago

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!

இந்தியா39 mins ago

2ஆம் வாய்ப்பாடு கூட தெரியவில்லையா? திருமணத்தை நிறுத்திய மணமகள்!

வேலைவாய்ப்பு46 mins ago

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்2 hours ago

ஃபேஸ்புக், டுவிட்டர் முடக்கம் எதிரொலி: இணையதளம் தொடங்குகிறார் டிரம்ப்!

சினிமா செய்திகள்3 hours ago

கொரோனாவுக்கு பலியான நகைச்சுவை நடிகர் பாண்டு!

தமிழ்நாடு4 hours ago

இன்று முதல் எந்தெந்த கடைகள் எத்தனை மணி நேரம் இயங்க வேண்டும்: தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு4 hours ago

டீ குடித்துவிட்டு மொய் வைக்கலாம்: வித்தியாசமாக கொரோனா நிதி திரட்டிய டீக்கடைக்காரர்!

தமிழ்நாடு4 hours ago

3வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: செஞ்சுரி அடிப்பது எப்போது?

சினிமா செய்திகள்5 hours ago

’ஆட்டோகிராப்’ பாடகர் கோமகன் கொரோனாவுக்கு பலி!

தமிழ்நாடு5 hours ago

இன்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் தமிழக மக்கள்

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending