கிரிக்கெட்
ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச்சை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை!


இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச்சை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. இது கிரிக்கெட் உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கருத்து தெரிவித்துள்ளார் பின்ச்.
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் சென்ற வாரம் சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏல முறையில் எடுத்துள்ளது.
ஏலத்துக்கு 1,097 வீரர்களில் இருந்து 292 பேர் தேர்வு செய்து ஏலப் பட்டியல் உருவாக்கப்பட்டு இருந்தது.
இதில் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல்லை எடுக்க ஐபிஎல் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அவரை ரூ.14 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கியுள்ளது. அதேபோல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இது ஒருபுறம் இருக்க, இங்கிலாந்து வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேஸன் ராய், ஆஸ்திரேலிய வீரர்கள் அலெக்ஸ் கெரே, ஆரோன் பின்ச், வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், இலங்கை வீரர் குஷால் பெரேரா, சாம் பில்லிங்ஸ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன்வரவில்லை. இந்த வீரர்கள் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
ஐபிஎல் அணிகளின் இந்த முடிவு குறித்து பின்ச் கூறுகையில், ‘ஐபிஎல் தொடரில் பங்கெடுத்திருந்தால் அது மிகச் சிறப்பானதாக இருந்திருக்கும். அது ஒரு பிராமதமான தொடர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நான் இந்த முறை எந்த அணியாலும் எடுக்கப்பட மாட்டேன் என்பதை எதிர்பார்த்தே இருந்தேன். தற்போதைக்கு குடும்பத்துடன் நேரம் செலவிடுவது என்பது அவ்வளவு மோசமான விஷயமாக இருக்காது’ என்று கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்துப் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கிரிக்கெட்
INDvENG – 3வது டெஸ்ட் ரிசல்ட்டை சிம்பிளாக கலாய்த்த ஜோ ரூட்- இப்படி சொல்லிப்புட்டாரே!!!


இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த அக்சர் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிவுக்கு வந்துள்ளது பல கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம் மீது அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திப் பேசியுள்ளார்.
3வது போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, 145 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது நாளில் விளையாடிய இங்கிலாந்து அணி, 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 2 – 1 என்று முன்னிலைப் பெற்றுள்ளது. அடுத்தப் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘இரு அணிகளுமே மூன்றாவது டெஸ்டுக்காக பயன்படுத்தப்பட்ட விக்கெட்டில் திணறினோம். இதைப் போன்ற ஆட்டத்தை வைத்து எங்களது திறமையை மதிப்பிட முடியாது. இந்தப் போட்டியில் எனக்கே 5 விக்கெட்டுகள் கிடைத்தன. அதை வைத்துப் பார்த்தாலே இந்த பிட்ச் எந்தளவுக்கு இருந்திருக்கிறது என்பது.
இன்னும் ஒரு போட்டி மட்டுமே இருக்கும் நிலையில், மூன்றாவது டெஸ்டை மனதில் வைத்து அதை அணுக மாட்டோம். அந்தப் போட்டியில் இந்தியாவைப் போல எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியும்’ என்று கூறியுள்ளார் ஜோ ரூட்.
இங்கிலாந்து அணி வீரர்களும், அந்த அணி நிர்வாகமும் நரேந்திர மோடி மைதான பிட்ச் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் பிட்ச் மாற்றப்பட வேண்டும் என்பது குறித்து அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
கிரிக்கெட்
சீரியஸாக பேசிக் கொண்டிருந்த பாண்டியா – அக்சர் படேல்; நடுவில் புகுந்து கலாய்த்த கேப்டன் கோலி #ViralVideo


இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த அக்சர் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.
3வது போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, 145 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது நாளில் விளையாடிய இங்கிலாந்து அணி, 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 2 – 1 என்று முன்னிலைப் பெற்றுள்ளது. அடுத்தப் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகன் விருதை வென்ற அக்சர் படேலை, இந்திய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பிசிசிஐ சார்பில் நேர்காணல் செய்தார். அப்போது அக்சர் பற்றி பேசிய பாண்டியா, ‘ஒரு நீண்ட கால நண்பனாக அக்சர் படேலின் சர்வதேச டெஸ்ட் அறிமுகத்துக்காக நான் காத்திருந்தேன். அப்படி காத்திருந்த எனக்கு, அக்சர் இப்படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது மிகுந்த மன நிறைவைத் தருகிறது’ என்றார்.
தொடர்ந்து அக்சரிடம், மைதானம் குறித்தும், தன் சொந்த மாநிலத்தில் விளையாடுவது குறித்தும், ஆட்டம் குறித்தும் சீரியஸாக பேசத் தொடங்கினார். அப்போது தூரத்தில் இருந்து உள்ளே வந்த கேப்டன் விராட் கோலி, இருவரின் நேர்காணலிலும் உட்புகுந்து கலாய்த்தார். இதை சற்றும் எதிர்பாராத இருவரும் நேர்காணலைப் பொருட்படுத்தாமல் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
கோலி குறும்புத்தனமாக இப்படி உள்ளே வந்து கேலி செய்தது இணையத்தில் படு வைரலாக மாறி வருகிறது.
கோலி கலாய் வீடியோ இதோ:
DO NOT MISS: @hardikpandya7 interviews man of the moment @akshar2026.👍👍 – By @RajalArora
P.S.: #TeamIndia skipper @imVkohli makes a special appearance 😎@Paytm #INDvENG #PinkBallTest
Watch the full interview 🎥 👇 https://t.co/kytMdM4JzN pic.twitter.com/QLJWMkCNM5
— BCCI (@BCCI) February 26, 2021
கிரிக்கெட்
INDvENG – 2 நாளில் முடிந்த 3வது டெஸ்ட்; குஜராத் பிட்ச்-ஐ கேவலப்படுத்திய யுவ்ராஜ் சிங், இங்கி., ஆஸி., வீரர்கள்!


இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிவுக்கு வந்துள்ளது பல கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம் மீது அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
3வது போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, 145 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது நாளில் விளையாடிய இங்கிலாந்து அணி, 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 2 – 1 என்று முன்னிலைப் பெற்றுள்ளது. அடுத்தப் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
finished in 2 days Not sure if that’s good for test cricket !If @anilkumble1074 and @harbhajan_singh bowled on these kind of wickets they would be sitting on a thousand and 800 ?🤔However congratulations to 🇮🇳 @akshar2026 what a spell! congratulations @ashwinravi99 @ImIshant 💯
— Yuvraj Singh (@YUVSTRONG12) February 25, 2021
இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்தும் நரேந்திர மோடி பிட்ச் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ‘இரண்டு நாட்களில் டெஸ்ட் முடிந்தது நல்லதுதானா என்று எனக்குத் தெரியவில்லை. இதைப் போன்ற விக்கெட்டுகளில் அனில் கும்ப்ளேவும் ஹர்பஜன் சிங்கும் பந்து வீசியிருந்தால் அவர்கள் 1000 மற்றும் 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருப்பர்’ என்று தெரிவித்துள்ளார்.
அவரைப் போலவே இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன், ‘இந்தப் போட்டி மிகுந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்தவையாக இருந்தது. ஆனால் இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற விக்கெட் கிடையாது’ என்று சாடியுள்ளார்.
Entertaining .. YES .. but this is a awful pitch for Test cricket .. !!!! Complete lottery on day 2 !! #INDvENG
— Michael Vaughan (@MichaelVaughan) February 25, 2021
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக், ‘அடுத்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடி இருந்தால், அணிகள் அடிக்கும் ரன்கள் இன்னும் குறைவாக இருக்கும். ஜோ ரூட்டுக்கு 5 விக்கெட்டுகள் கிடைக்கும் போது, இந்த பிட்ச்சின் தராதரம் தெரிகிறது’ என்று விமர்சித்துள்ளார்.
இப்படி பலரது விமர்சனக்குத்துக்கும் உள்ளான குஜராத் பிட்ச், அடுத்தப் போட்டிக்கு மாற்றப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
-
கிரிக்கெட்2 days ago
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
-
டிவி2 days ago
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!
-
டிவி2 days ago
தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 5… எப்போது முதல் தெரியுமா?
-
சினிமா செய்திகள்2 days ago
கே.ஜி.எஃப் படத்தை எல்லாம் மறந்துவிடுவீர்கள்… தளபதி 65 அப்டேட் கொடுத்த நெல்சன்!