Connect with us

பிற விளையாட்டுகள்

ஆசிய விளையாட்டு பெண்கள் ஹெப்டத்லானில்இந்தியா வரலாற்று சாதனை!

Published

on

ஆசிய விளையாட்டு வரலாற்றில் பெண்கள் ஹெப்டத்லானில், 6000 புள்ளிகளை கடந்த 5வது வீராங்கனை என்ற பெருமை பெற்றார் ஸ்வப்னா பர்மான்.

இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 11 வது நாளான இன்று தடகளப் போட்டிகளில் இந்திய வீரர்கள் புதிய சாதனை படைத்து வருகின்றனர்.

 

இதில் பெண்களுக்கான ஹெப்டத்லான் பந்தயம் 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய 7 விளையாட்டுக்களை உள்ளடக்கியது. இந்த போட்டியில் பங்கேற்க இந்தியாவைச் சேர்ந்த இரு வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் நேற்று நடந்த 4 போட்டிகளில் வென்று ஸ்வப்னா பர்மன் முன்னிலை வகுத்துவந்தார். இதனைத் தொடர்ந்து இன்று நடந்த 2 போட்டிகளிலும் முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6.40 மணிக்கு நடந்த கடைசி பந்தயமான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஸ்வப்னா சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்று சாதனைப் படைத்தார்.

இதில் 100 மீ., ஓட்டத்தில் 981 புள்ளிகள் பெற்று 5வது இடம், உயரம் தாண்டுதலில் 1003 புள்ளிகளுடன் முதலிடம், குண்டு எறிதலில் 707 புள்ளிகள் பெற்று 2வது இடம் , 200 மீ., ஓட்டத்தில் 790 புள்ளிகளுடன் 7வது இடம், நீளம் தாண்டுதலில் 865 புள்ளிகள் பெற்று 2வது இடம், ஈட்டி எறிதல் 872 புள்ளிகள் பெற்று முதலிடம், 800 மீ., ஓட்டத்தில் 808 புள்ளிகள் பெற்று 4வது இடம் என மொத்தமாக 6026 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கதை வென்றார்.

இதில் சீனாவின் வாங் குயிங்லிங் 5954 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும், ஜப்பானின் யுகி யாமாசாகி 5873 புள்ளிகள் பெற்றுவெண்கலப் பதக்கமும் வென்றனர். இதன் மூலம் ஆசிய விளையாட்டு பெண்கள் ஹெப்டத்லானில், முதல் முறையாக தங்கம் வென்று இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் வரலாற்றில் புதிய சாதனைப் படைத்துள்ளார்..

இன்று நடந்த தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்குக் கிடைக்கும் 2 வது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற விளையாட்டுகள்

பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

Published

on

பிரபல அமெரிக்க கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோபி பிரயன்ட் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

41 வயதான கோபி பிரயன்ட் ஒரு தணியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் மரணம் அடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க கூடைப்பந்தாட்ட சம்மேளன சாம்பியன் போட்டி வரலாற்றில் 5 முறை சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டவர் கோபி பிரயன்ட். 18 தடவைகள் என்பிஏ அனைத்து-நட்சத்திர வீரராகவும் தெரிவானார். உலகின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் கோபி பிரயன்ட் உடன் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அதில் கோபி பிரயன்ட் மகளும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

கோபி பிரயன்ட் உடலுக்கு சக விளையாட்டு நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.

Continue Reading

பிற விளையாட்டுகள்

பல ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ள இந்திய அணி: ரசிகர்கள் உற்சாகம்!

Published

on

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டு என்றால் எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அது கிரிக்கெட் மட்டுமல்லாம் எந்த விளையாட்டாக இருந்தாலும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால் சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி உள்பட எந்த இந்திய விளையாட்டு வீரர்களும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாமல் உள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடாமல் இருந்த நிலையில் வரும் செப்டம்பர் 14,15 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை தொடருக்கான போட்டிகளில் இந்திய டென்னிஸ் வீரர்கள் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சார்பாக 6 வீரர்கள், உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. 55 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்திய டென்னிஸ் அணி முதன்முறையாக பாகிஸ்தான் செல்ல உள்ளதால் இந்திய டென்னிஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Continue Reading

சினிமா செய்திகள்

பாட்மிண்டன் அணியின் ஓனரானார் டாப்ஸி!

Published

on

டாப்ஸி, பாட்மிண்டன், அணி, உரிமையாளர், ஓனர், Tapsee, Badminton, Team, Owner, pune

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. வந்தான் வென்றான், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்த டாப்ஸி, பாலிவுட்டுக்கு சென்றார். பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் பிங்க் படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில், சமீபத்தில் வெளியான மன்மர்ஜியான் மற்றும் முல்க் படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன.

இந்நிலையில், கிரிக்கெட்டுக்கு எப்படி ஐபிஎல் போட்டியோ, அதே போன்று பாட்மிண்டனுக்கும் இந்தியாவின் பல மாநில அணிகள் மோதும் பிரிமியர் பாட்மிண்டன் போட்டி, கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.

5வது சீசன் பாட்மிண்டன் பிரிமியர் லீக் போட்டி, இந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இளம்வயது முதலே பாட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட டாப்ஸி, தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புனே அணியை வாங்கியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஷாரூக்கான், பிரீத்தி ஜிந்தா போன்ற நடிகர்கள் வாங்கியுள்ள நிலையில், தற்போது, கபடி, பேட்மிண்டன் என விளையாட்டு துறைகளில் நடிகர்களின் கவனம் செல்ல துவங்கியுள்ளது.

Continue Reading




பல்சுவை18 mins ago

சுவையான பால் பாயசம் செய்வது எப்படி?

பர்சனல் ஃபினாஸ்1 hour ago

பிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா?

வேலை வாய்ப்பு1 hour ago

கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு5 hours ago

சென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்6 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (19/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்6 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/09/2020)

வேலை வாய்ப்பு22 hours ago

10 ஆம் வகுப்புத் தேர்ச்சி / MBA படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை22 hours ago

மருத்துவ குறிப்புகள்..!

வேலை வாய்ப்பு23 hours ago

நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியா23 hours ago

ரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: