Connect with us

பிற விளையாட்டுகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி:இந்தியாவுக்கு 7வது தங்கம்!

Published

on

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று முதல் தடகளப் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதில் முதல் பதக்கமாக தஜிந்தர்பால் சிங் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் அவர் 20.75 மீட்டர் தூரம் குண்டு எறிந்து ஆசிய விளையாட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த தஜிந்தர்பால் சிங் தூர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இவருக்கு அடுத்த இடங்களை சீனாவின் லியு யாங் 19.52 மீட்டர் எறிந்து இரண்டாவது இடத்தையும்,கஜகஸ்தானின் இவான் இவானோவ் 19.40 மீட்டர் குண்டு வீசியதால் மூன்றாவது இடத்தை பிடித்தனர். இந்த போட்டியில் ஆறு முறை குண்டு வீச வாய்ப்பு கிடைக்கும். ஆறு முயற்சிகளில் எது அதிக தூரமோ அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில், முதல் முயற்சியில் 19.96 மீட்டர் வீசினார் தஜிந்தர்பால் சிங். அந்த தூரத்தை இறுதி வரை எந்த ஒரு வீரராலும் முறியடிக்க முடியவில்லை.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – 2018 இல் தனது ஐந்தாம் வாய்ப்பில் 20.75 மீட்டர் தூரம் வீசி ஆசிய விளையாட்டில் சாதனை படைத்துள்ளார்.ஆறாம் வாய்ப்பில் 20.00 மீட்டர் வீசினார். இந்த சாதனை மூலம் இந்தியாவுக்கு தஜிந்தர்பால் சிங் ஏழாவது தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்தத் தொடரில் இந்திய அணிக்கு கிடைக்கும் 7வது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்தியா 5 வெள்ளி,17 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்கள் பெற்று 8வது இடத்தில் உள்ளது.

பிற விளையாட்டுகள்

பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

Published

on

பிரபல அமெரிக்க கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோபி பிரயன்ட் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

41 வயதான கோபி பிரயன்ட் ஒரு தணியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் மரணம் அடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க கூடைப்பந்தாட்ட சம்மேளன சாம்பியன் போட்டி வரலாற்றில் 5 முறை சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டவர் கோபி பிரயன்ட். 18 தடவைகள் என்பிஏ அனைத்து-நட்சத்திர வீரராகவும் தெரிவானார். உலகின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் கோபி பிரயன்ட் உடன் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அதில் கோபி பிரயன்ட் மகளும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

கோபி பிரயன்ட் உடலுக்கு சக விளையாட்டு நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.

Continue Reading

பிற விளையாட்டுகள்

பல ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ள இந்திய அணி: ரசிகர்கள் உற்சாகம்!

Published

on

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டு என்றால் எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அது கிரிக்கெட் மட்டுமல்லாம் எந்த விளையாட்டாக இருந்தாலும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால் சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி உள்பட எந்த இந்திய விளையாட்டு வீரர்களும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாமல் உள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடாமல் இருந்த நிலையில் வரும் செப்டம்பர் 14,15 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை தொடருக்கான போட்டிகளில் இந்திய டென்னிஸ் வீரர்கள் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சார்பாக 6 வீரர்கள், உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. 55 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்திய டென்னிஸ் அணி முதன்முறையாக பாகிஸ்தான் செல்ல உள்ளதால் இந்திய டென்னிஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Continue Reading

சினிமா செய்திகள்

பாட்மிண்டன் அணியின் ஓனரானார் டாப்ஸி!

Published

on

டாப்ஸி, பாட்மிண்டன், அணி, உரிமையாளர், ஓனர், Tapsee, Badminton, Team, Owner, pune

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. வந்தான் வென்றான், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்த டாப்ஸி, பாலிவுட்டுக்கு சென்றார். பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் பிங்க் படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில், சமீபத்தில் வெளியான மன்மர்ஜியான் மற்றும் முல்க் படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன.

இந்நிலையில், கிரிக்கெட்டுக்கு எப்படி ஐபிஎல் போட்டியோ, அதே போன்று பாட்மிண்டனுக்கும் இந்தியாவின் பல மாநில அணிகள் மோதும் பிரிமியர் பாட்மிண்டன் போட்டி, கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.

5வது சீசன் பாட்மிண்டன் பிரிமியர் லீக் போட்டி, இந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இளம்வயது முதலே பாட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட டாப்ஸி, தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புனே அணியை வாங்கியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஷாரூக்கான், பிரீத்தி ஜிந்தா போன்ற நடிகர்கள் வாங்கியுள்ள நிலையில், தற்போது, கபடி, பேட்மிண்டன் என விளையாட்டு துறைகளில் நடிகர்களின் கவனம் செல்ல துவங்கியுள்ளது.

Continue Reading




வேலை வாய்ப்பு1 hour ago

10 ஆம் வகுப்புத் தேர்ச்சி / MBA படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை2 hours ago

மருத்துவ குறிப்புகள்..!

வேலை வாய்ப்பு2 hours ago

நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியா2 hours ago

ரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்!

வணிகம்3 hours ago

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பேடிஎம் என்ன காரணம்!

வேலை வாய்ப்பு4 hours ago

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு4 hours ago

மத்திய அரசின் கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு5 hours ago

8 ஆம் வகுப்பு தேர்ச்சி/ MCA/ MBA/ M.Com/ M.Sc (Any Degree) படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்5 hours ago

நயன்தாரா உடன் விக்‌னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா?

சினிமா செய்திகள்6 hours ago

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா? பெண்ணா?

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: