Connect with us

பிற விளையாட்டுகள்

ஆசிய விளையாட்டு 2018: இந்தியாவுக்கு மேலும் 3 வெள்ளிப் பதக்கம்!

Published

on

ஆசிய விளையாட்டு 2018 தடைதாண்டுதல் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங் மற்றும் தருண் அய்யாசாமி ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. பெண்களுக்கான 3000மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் சுதா சிங் தடதாண்டுதல் போட்டியில் 9 நிமிடம் 40.03 நிமிடங்களில் இலக்கை எட்டி வெள்ளி வென்றார்.

இதனைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீ தடை தாண்டுதல் ஓட்டத்தில் இந்திய வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளிப்பதக்கம் வென்ற தருண் அய்யாசாமி தமிழ்நாட்டை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து நடந்த நீளம் தாண்டுதல் போட்டியிலும் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை நீனா வாராகில் 6.51 மீட்டர் தாண்டி சாதனைப் படைத்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு இதுவரை 7 தங்கம்,13 வெள்ளி,20 வெண்கலம் கிடைத்துள்ளது.

 

பிற விளையாட்டுகள்

பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

Published

on

பிரபல அமெரிக்க கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோபி பிரயன்ட் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

41 வயதான கோபி பிரயன்ட் ஒரு தணியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் மரணம் அடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க கூடைப்பந்தாட்ட சம்மேளன சாம்பியன் போட்டி வரலாற்றில் 5 முறை சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டவர் கோபி பிரயன்ட். 18 தடவைகள் என்பிஏ அனைத்து-நட்சத்திர வீரராகவும் தெரிவானார். உலகின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் கோபி பிரயன்ட் உடன் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அதில் கோபி பிரயன்ட் மகளும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

கோபி பிரயன்ட் உடலுக்கு சக விளையாட்டு நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.

Continue Reading

பிற விளையாட்டுகள்

பல ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ள இந்திய அணி: ரசிகர்கள் உற்சாகம்!

Published

on

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டு என்றால் எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அது கிரிக்கெட் மட்டுமல்லாம் எந்த விளையாட்டாக இருந்தாலும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால் சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி உள்பட எந்த இந்திய விளையாட்டு வீரர்களும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாமல் உள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடாமல் இருந்த நிலையில் வரும் செப்டம்பர் 14,15 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை தொடருக்கான போட்டிகளில் இந்திய டென்னிஸ் வீரர்கள் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சார்பாக 6 வீரர்கள், உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. 55 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்திய டென்னிஸ் அணி முதன்முறையாக பாகிஸ்தான் செல்ல உள்ளதால் இந்திய டென்னிஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Continue Reading

சினிமா செய்திகள்

பாட்மிண்டன் அணியின் ஓனரானார் டாப்ஸி!

Published

on

டாப்ஸி, பாட்மிண்டன், அணி, உரிமையாளர், ஓனர், Tapsee, Badminton, Team, Owner, pune

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. வந்தான் வென்றான், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்த டாப்ஸி, பாலிவுட்டுக்கு சென்றார். பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் பிங்க் படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில், சமீபத்தில் வெளியான மன்மர்ஜியான் மற்றும் முல்க் படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன.

இந்நிலையில், கிரிக்கெட்டுக்கு எப்படி ஐபிஎல் போட்டியோ, அதே போன்று பாட்மிண்டனுக்கும் இந்தியாவின் பல மாநில அணிகள் மோதும் பிரிமியர் பாட்மிண்டன் போட்டி, கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.

5வது சீசன் பாட்மிண்டன் பிரிமியர் லீக் போட்டி, இந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இளம்வயது முதலே பாட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட டாப்ஸி, தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புனே அணியை வாங்கியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஷாரூக்கான், பிரீத்தி ஜிந்தா போன்ற நடிகர்கள் வாங்கியுள்ள நிலையில், தற்போது, கபடி, பேட்மிண்டன் என விளையாட்டு துறைகளில் நடிகர்களின் கவனம் செல்ல துவங்கியுள்ளது.

Continue Reading




வேலை வாய்ப்பு10 hours ago

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

பல்சுவை10 hours ago

அறுசுவையான கேரளா ஸ்பெஷல் “எரிவேரி” செய்வது எப்படி?

வேலை வாய்ப்பு11 hours ago

ஆதார் கார்டு அலுவலத்தில் (UIDAI) வேலைவாய்ப்பு!

பல்சுவை12 hours ago

இந்த காய்கறிகள சாப்பிட்டால் இவ்வளவு நன்மை ஏற்பாடுமா?

சினிமா செய்திகள்13 hours ago

அனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி!

வேலை வாய்ப்பு13 hours ago

M.Sc படித்தவர்களுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்14 hours ago

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக!

பர்சனல் ஃபினாஸ்15 hours ago

சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்!

கிரிக்கெட்18 hours ago

தோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (20/09/2020)

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: