Connect with us

கிரிக்கெட்

பிரபல தமிழ் நடிகையுடன் கிரிக்கெட் வீரர் பும்ரா காதலா?

Published

on

இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மிகச்சிறப்பாக பந்துவீசி வருகிறார். உலகில் உள்ள அனைத்து அணிகளுமே இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள அஞ்சுகிறது. அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக உள்ளது இவரது பந்துவீச்சு.

உலகின் நம்பர் ஓன் பந்துவீச்சாளராக உள்ள பும்ராவும் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரனும் காதலிப்பதாக வெளியாகி உள்ள தகவலுக்கு நடிகை அனுபமா விளக்கம் அளித்துள்ளார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத் திரையுலகில் வலம் வந்துகொண்டிருக்கும் இவர் தன் மீதான கிசுகிசுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். காதலர்கள் அல்ல என தெரிவித்தார். இதற்கு முன்னர் தமிழ், தெலுங்கு திரையுலகில் வலம் வரும் ராஷி கண்ணாவும், பும்ராவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்

ஐபில் தொடங்குவதில் சிக்கல் – கங்குலி!

Published

on

கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், மீண்டும் ஒத்திவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்கூலி, கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதில் கடந்த 10 நாட்களாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எனவே ஐபிஎல் போட்டி குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது.

மேற்கு வங்க அரசு கேட்டுக்கொண்டால், கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள அரைகளை மருத்துவ வசதிக்காகப் பயன்படுத்த அளிக்கத் தயாராக உள்ளோம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

Continue Reading

கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்த இந்தியா!

Published

on

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் படுதோல்வி அடைந்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 273 ரன்கள் எடுத்தது.

274 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று இலக்கை நோக்கி அடுத்து விளையாடத் தொடங்கிய இந்திய அணி 48.3 ஓவரில் 10 விக்கெட்களையும் இழந்து 251 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

இந்திய அணி சார்பாகா ஜடேஜா மட்டும் அதிகபட்சமாக 55 ரன்களை எடுத்தார். மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இந்திய அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியுற்றதால் தொடரை வெல்லும் வாய்ப்பையும் இழந்தது.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டி 11-ம் தேதி நடைபெறும். அதிலாவது இந்திய அணி வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.

Continue Reading

கிரிக்கெட்

தோனியின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

Published

on

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 88 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமலிருந்தார்.

அதன் மூலம் கே.எல்.ராகுல் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர்களில் நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.

கே.எல்.ராகுலுக்கு அடுத்த இடத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டம் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி 85, 79, 68, 56 மற்றும் 50 ஆகிய ரன்களை நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பெற்று இருந்தார்.

Continue Reading




பல்சுவை9 hours ago

பீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்!

சினிமா செய்திகள்10 hours ago

கொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்!

இந்தியா11 hours ago

கொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்!

சினிமா செய்திகள்11 hours ago

இயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்!

வணிகம்12 hours ago

#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

இந்தியா12 hours ago

அரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்13 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/03/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்21 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/03/2020)

இந்தியா22 hours ago

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்.. நீட் தேர்வு ஒத்திவைப்பு!

தமிழ்நாடு23 hours ago

அதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா8 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா7 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு7 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா9 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா1 year ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு8 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்1 year ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு8 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

வீடியோ செய்திகள்2 weeks ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்2 weeks ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்2 weeks ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்2 weeks ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்2 weeks ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending