செய்திகள்
பொதிகையில் சமஸ்கிருதம்!


பொதிகை சேனலில் சமஸ்கிருத மொழியில் செய்தி வாசிப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்திக்கு ஒதுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை 15 நிமிடங்கள் சமஸ்கிருத வாராந்திர செய்தி தொகுப்பிற்கு ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தமிழர் வாழ்விற்கும் பண்பாட்டிற்கும் முற்றிலும் தொடர்ப்பில்லாத ஒன்றாக உள்ளது. எனவே இதனை ஏற்க முடியாது என மதுரையில் உள்ள ஒருவரால் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மனு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, மதுரை கிளை நிர்வாக நீதிபதி சுந்தரேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனு தாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம். வேறு சேனலையும் மாற்றிக் கொள்ளலாம், இதனைவிட முக்கிய பிரச்சனைகள் பல உள்ளன. தேவையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து மனுதாரர் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
தமிழ்நாடு
திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்: உத்தேச பட்டியல்!


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன என்பதும், இன்னும் ஓரிரு நாளில் இரண்டு கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை முடித்து விடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து பேசி முடித்துவிட்ட திமுக, அடுத்ததாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட ஒருசில கட்சிகளுடன் இன்றும் நாளையும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 176-178 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு
நெல்லையில் சாலையோர கடையில் டீ குடித்த ராகுல்காந்தி: வைரல் புகைப்படம்!


காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் அவரது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இது குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி அவரது தந்தை ராஜீவ் காந்தியை போகவே மக்களிடம் மிக நெருக்கமாக பழகி வருவதும், பொதுமக்களில் ஒருவராக சகஜமாக இருப்பதும் மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்த இந்திய வீரர் டாப்-3ல் நுழைந்தார்!


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் பட்டியலைப் பொறுத்தவரை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், 891 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதேபோல ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுஷானே 878 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நிலை கொண்டுள்ளார். அவரைத் தொடர்ந்து 4 ஆம் இடத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டும், 5 வது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியும் உள்ளனர்.
India opener Rohit Sharma storms into the top 10 to a career-best eighth position in the latest @MRFWorldwide ICC Test Player Rankings for batting 💥
Full list: https://t.co/AIR0KN4yY5 pic.twitter.com/Hqb9uTWnzJ
— ICC (@ICC) February 28, 2021
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து ரன்கள் குவித்து வரும் இந்திய அதிரடி தொடக்க வீரர், ரோகித் சர்மா, 6 இடங்கள் முன்னிலைப் பெற்று 8 வது இடத்தைப் பிடித்துள்ளார். செத்தேஷ்வர் புஜாரா 2 இடங்கள் பின் தங்கி 10 வது இடத்தில் நிலை கொண்டுள்ளார்.
பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவர் 908 புள்ளிகள் பெற்றுள்ளார். அவரை அடுத்து நியூசிலாந்தின் நீல் வாக்னர் 825 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட்டுகளை அள்ளி வரும் சுழற் பந்து வீச்சாளர் அஷ்வின், 823 புள்ளிகள் பெற்று, 4 இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தவிர முதல் 10 பவுலர்களில் இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, 746 புள்ளிகள் பெற்று 9 வது இடத்தில் இருக்கிறார்.
-
சினிமா செய்திகள்2 days ago
நயன்தாரா படத்தில் நாயகி ஆனார் ‘செல்லம்மா’ பட பாடகி: ஹீரோ யார் தெரியுமா?
-
ஆரோக்கியம்2 days ago
பாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
-
தமிழ்நாடு2 days ago
முதல்வர் வேட்பாளர் நான் தான்: கமல் அறிவிப்பால் சரத்குமார் அதிர்ச்சியா?
-
தமிழ்நாடு2 days ago
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா: தேர்தலிலும் போட்டி!