Connect with us

செய்திகள்

தேனி அருகே குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை-தொடரும் அவலம்!

Published

on

கம்பம் பகுதியில் 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளிவாசல் அருகே உள்ள சமையன்தெருவை சேர்ந்தவர் அழகுதுரை. இவர், கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் குற்றப் பிரிவு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயமணி. இவர்களுடைய மகள் தேஜாஸ்ரீ (8), மகன் கார்த்தி விஸ்வநாதன் (3). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தேஜாஸ்ரீ 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அழகுதுரை, வேலைக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்ததை அடுத்து அழகுதுரை கதவை தட்டிப்பார்த்து திறக்காததால் சந்தேகம் அடைந்த அழகுதுரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் விட்டத்தில் ஜெயமணி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குழந்தைகளை தேடியபோது அவர்கள் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜெயமணி உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு ஜெயமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தமிழ்நாடு

சென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்!

Published

on

சென்னை அம்பத்தூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவுக்காக கொண்டு வரப்பட்டு இருந்த கேஸ் பலூன் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் பாடியில், பாஜக விவசாயிகள் அணி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் போது 2 ஆயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டு இருந்தது.

பாடி சிவன்கோவில் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாஜக விவசாய அணி துணைத் தலைவர் முத்து ராமன் பங்கேற்றார். அவரை வரவேற்று பட்டாசு வெடித்ததில், தீ பலூன் மீது விழுந்து வெடித்தது.

அப்போது அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிறிய தீ காயங்களுடன் உயிர் தப்பினர். இதனை அடுத்துக் காவல் துறையினர் செய்த விசாரணையில், அனுமதி இல்லாமல் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, முறையான பாதுகாப்பு வசதி இல்லாமல் கேஸ் பலூன் பறக்கத் திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

கேஸ் பலூனில் ஹீலியம் கேஸ் பதிலாக ஹைட்ரஜன் கேஸ் நிரப்பப்பட்டு இருந்திருக்கலாம். அதனால் தான் தீ பற்றி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Continue Reading

இந்தியா

ரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்!

Published

on

விரைவில் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்த வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் பயணிகளிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் நிலையங்களைச் சர்வதேச தரத்தில் உயர்த்த முடிவு செய்துள்ள, இந்தியன் ரயில்வேஸ் அதற்காக ரயில் நிலையம் பயன்பாட்டுக் கட்டணத்தை டிகெட் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் 7000 ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், முதற்கட்டமாக அவற்றில் 15 சதவீத ரயில் நிலையங்களில் (1000) மட்டும் இந்த பயன்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, பயணிகளில் அதிகளவில் கூடும் ரயில் நிலையங்களில் இந்த கட்டணம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயில் டிக்கெட் கட்டணத்துடன் பயன்பாட்டுக்கா கட்டணமும் இணைக்கப்படலும், டிக்கெட் கட்டணத்தில் பெரிய மாறுதல் இருக்காது என்று இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்துள்ளது.

Continue Reading

இந்தியா

உலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா!

Published

on

By

உலக வங்கி ஒவ்வொரு ஆண்டும் மனித மூலதன குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது.

உலகம் முழுவதும் 174 நாடுகளில் கல்வி அறிவு பெற்ற குழந்தைகள் மற்றும் அவர்களது ஆரோக்கிய நிலையை வைத்து, உலக வங்கியின் மனித மூலதன குறியீடு பட்டியல் தயாரிக்கப்படும்.

அந்த வகையில் 2020-ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள மனித மூலதன குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 116வது இடத்தை பிடித்துள்ளது.

மனித மூலதன மேம்பாட்டில் இந்தியாவின் பங்கு இந்த ஆண்டு 0.49 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பங்கு 0.41%, வங்க தேசம் பங்கு 0.46% ஆக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பு குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் குழந்தைகளின் கல்வி அறிவு மற்றும் ஆரோக்கியம் அதிகரித்து இருந்தது.

ஆனால் கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு குழந்தைகள் பள்ளிகளில் சேருவது, ஆரோக்கியம் போன்றவற்றில் பல்வேறு நாடுகள் பின்னடைவைச் சந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading




பர்சனல் ஃபினாஸ்1 hour ago

பிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா?

வேலை வாய்ப்பு1 hour ago

கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு5 hours ago

சென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்6 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (19/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்6 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/09/2020)

வேலை வாய்ப்பு22 hours ago

10 ஆம் வகுப்புத் தேர்ச்சி / MBA படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை22 hours ago

மருத்துவ குறிப்புகள்..!

வேலை வாய்ப்பு23 hours ago

நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியா23 hours ago

ரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்!

வணிகம்23 hours ago

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பேடிஎம் என்ன காரணம்!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: