Connect with us

உலகம்

பிலிப்பைன்ஸை தாக்கியது சக்தி வாய்ந்த ’மங்குட்’ புயல்-பீதியில் மக்கள்!

Published

on

அமெரிக்காவை அடுத்து பிலிப்பைன்ஸை மங்குட் புயல் தாக்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மங்குட்’ என்ற புயல் இன்று கடுமையாக தாக்கியது. அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் ஃப்ளோரன்ஸ் புயலை விட இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த புயல் என கருதப்படுகிறது.

புயல் காரணமாக பிலிப்பைன்சஸின் வடக்கு கடற்கரை பகுதியில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மணிக்கு 285 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. மின்சாரம் தடைபட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸின் லுசான் தீவு மிகுந்த சேதத்தை சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்களில் கடும் சேதத்தை விளைவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் ‘கையான்’ என்ற புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

இதேபோன்று இந்த ‘மங்குட்’ புயலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இப்புயலினால் 40 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுருத்தப் பட்டிருக்கிறது.

‘மங்குட்’ புயல் பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது. அது இன்று மாலை ஹாங்காங் பகுதியில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

உலகம்

சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்!

Published

on

சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகளை அவர்கள் வீட்டிற்கே பார்சல் செய்து அனுப்புகிறது, தாய்லாந்து தேசிய பூங்கா.

பாங்காக் அருகில் உள்ள காவ் யை தேசிய பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளே நுழையும் முன்பே அவர்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

பின்னர் உள்ளே செல்லும் அவர்கள், குப்பைகளை வீசி சென்றால் அதை சிசிடிவி மூலம் கண்காணித்து, அந்த சுற்றுலா பயணிகளின் வீட்டிற்கே பேக் செய்து அனுப்புகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கவ் யாவ் தேதிய பூங்கா நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் குப்பைகளை வீச பயப்படுவதாகவும் கூறுகின்றனர்.

Continue Reading

உலகம்

ஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்!

Published

on

சர்வதேச புகழ் பெற்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பலியல் ரீதியாக ராகிங் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகக் கல்லூரிக்கு வரும் முதலம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வது நடைபெறும். இதற்கு எதிரக கடுமையான சட்டங்களும் அமலில் உள்ளன.

இப்போது கொரோனா காலம் என்பதால், கல்லூரிகளில் பாடங்கள் ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. அதை பின்பற்றும் மாணவர்கள் ராகிங்கையும் ஆன்லைனில் நடத்திய சம்பவம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களை ஆடைகளைக் கலைய வைத்து, ஆபாசப் படங்கள் போன்று எல்லாம் ராகிங் செய்துள்ளனர். இதை அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் பிற மாணவர்களுக்கும், ராகிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continue Reading

இந்தியா

அதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்!

Published

on

செப்டம்பர் மாதம் புதிய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பில் இந்தியா தான் முதலிடம் என்ற தகவல் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்ட நாடுகள், இறந்தவர்கள் நாடுகளின் பட்டியலை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 1 முதல் 15 வரையில், இந்தியாவில் அதிகபட்சமாக 13,08,991 நபர்களை கொரோனா பாதித்துள்ளது. தொடர்ந்து அடுத்த இடங்களில் அமெரிக்கா (5,57,657), பிரேசில் (4,83,299), அர்ஜெண்டினா (1,54,298), ஸ்பெயின் (1,30,872) ஆகிய நாடுகள் உள்ளன.

அதேபோல செப்டம்பர் 1 முதல் 15 தேதி வரையில் இந்தியாவில் (16,307) தான் கொரோனா பாதிப்புகளால் அதிகளவில் இறந்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா (11,461), பிரேசில் (11,178), மெக்சிகோ (6,891), கொலம்பியா (3,759) ஆகிய நாடுகள் உள்ளன.

 

Continue Reading




தமிழ்நாடு3 hours ago

ஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

தமிழ்நாடு4 hours ago

விஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்5 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்5 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)

வேலை வாய்ப்பு22 hours ago

கடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு23 hours ago

புதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு23 hours ago

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை24 hours ago

தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா!

சினிமா செய்திகள்1 day ago

ஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வேலை வாய்ப்பு1 day ago

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்2 weeks ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: