செய்திகள்
உதகையில் குறிஞ்சி திருவிழா-மக்கள் கோலாகல கொண்டாட்டம்!


பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ திருவிழா உதகையில் கோலாமாக தொடங்கியுள்ளது.
உதகையில் குறிஞ்சி பூ திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் களை கட்டியது. விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் நடனங்கள் இடம்பெற்றன.
இவர்களைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விழாவில் படுகர் இன மக்களும், தங்களது கலாச்சார நடனங்களை ஆடி பாடி மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் பவானி, சின்னக்குன்னூர், சோலூர், நடுவட்டம், கீழ்கோத்தகிரி, கல்லடி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மலைகள் முழுவதும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்கும்.
அதே போன்று இந்தாண்டு நீலகிரியில் குறிஞ்சி மலர்கள் அதிகளவில் பூத்து குலுங்கின. இதனால் பூ பூத்துள்ள பகுதிகள் முழுவதும் ஊதா வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டது போல சௌந்தர்யமாக காட்சியளிக்கின்றன.
குறிஞ்சி விழாவில் அதிமுக MP அர்ஜுனன், மாவட்ட ஆட்சியர் திவ்யா, குன்னூர் MLA சாந்திராமு ஆகியோர் படுகர் இன மக்களோடு நடனமாடி மகிழ்தனர்.
குறிஞ்சி பூக்களை காண்பது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். இரண்டாம் சீசனுக்காக வரும் சுற்றுலா பயணிகள் இந்த அபூர்வ குறிஞ்சி மலர்களை கண்டு களிக்கும் வகையில் சிறப்பு பேரூந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர் திவ்யா தெரிவித்தார்.
கிரிக்கெட்
ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகலா? அதிர்ச்சி தகவல்


ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பேரர்ச்சியாக உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் நடராஜன் விளையாடி வருகிறார். அவர் முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய நிலையில் திடீரென அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காயம் பெரிதாக இருப்பதாகவும் ஒரு வாரம் அவர் எழுந்து நிற்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சேர்ந்த ஐதராபாத் அணியின் அதிகாரி ஒருவர் கூறியபோது நடராஜன் காயம் குறித்து அறிக்கை இன்னும் எங்களுக்கு வரவில்லை என்றும் அந்த அறிக்கை வந்தவுடன் அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து பிசிசிஐயிடம் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் இதுகுறித்து கூறிய போது நடராஜனை நாங்கல் மிகவும் எதிர்பார்க்கின்றோம் என்றும், ஆனால் துரதிஸ்டவசமாக அவரது காயம் அதிகம் இருப்பதால் அவர் அணியில் இணைவது சந்தேகம்தான் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசார வாதம்!


ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாமா? என மக்களிடம் கருத்து கேட்டு நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என்றும் ஆக்சிஜனுக்காக திறக்கப்படும் ஸ்டெர்லைட் ஆலை அதன்பிறகு தாமிர உற்பத்திக்கும் வழி வகுத்து விடும் என்றும் அந்த ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்றும் போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா
காலில் விழக்கூட தயார், ஆக்சிஜன் கொடுங்கள்: மத்திய அரசிடம் கெஞ்சும் மாநில அமைச்சர்!


கொரோனா நோயாளிகள் ஒரு பக்கம் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகமாகிக் கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதற்கு ஆக்சிஜன் இல்லாத நிலை பல மருத்துவமனைகளில் உள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசிடம் ஆக்சிஜன் சிலிண்டருக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மத்திய அரசின் காலில் விழுவதற்கு தயாராக இருக்கிறேன், தயவுசெய்து ஆக்சிஜனை கொடுங்கள் என்று கூறியுள்ளது பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோயாளிகளின் உயிரைக் காக்க எங்கள் அரசு தீவிரமாக போராடி வருகிறது. இந்த நேரத்தில் தாழ்மையான முறையில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஆக்சிஜன் பெறுவதற்காக மத்திய அரசின் காலில் விழுவதற்கு கூட தயார் என்று கூறியுள்ளார்.
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் உரிமை மத்திய அரசின் கையில் உள்ளதால் மத்திய அரசை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மாநிலத்தில் போதுமான ஆட்சியை வழங்க மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
CSK உடையில் தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?