இந்தியா
விலை உயர்ந்த, குறைந்த பொருட்கள் எவை எவை… மத்திய பட்ஜெட் Rewind…


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை (பிப்ரவரி 1) மக்களவையில் 2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள இந்த சூழலில் பல்வேறு வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. பொதுமக்கள் மட்டுமல்லாது பொருளாதார நிபுணர்களும் பட்ஜெட் அறிக்கையில் என்னென்ன சிறப்பு அறிவிப்புகள் வெளியாக உள்ளன எனக் கூர்ந்து கவனித்து வந்தனர்.
அதுமட்டுமல்ல இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏப்ரல் தொடங்கும் நிதியாண்டிற்கான பட்ஜெட் “முன்னர் வெளியானதை போலவே” இருக்கும் என்று சீதாராமன் தெரிவித்திருந்தார். இதன் மற்றொரு சிறப்பு சுதந்திர இந்திய வரலாற்றில் வெளியாகும் முதல் காகிதமில்லாத பட்ஜெட்டாகும். சீதாராமன், 2019 ஆம் ஆண்டில் வாசித்த தனது முதல் பட்ஜெட்டில், ‘பாஹி-கட்டா’ என்ற பாரம்பர்ய சிவப்பு துணியால் ஆன தோல் சூட் கேசில் பட்ஜெட் ஆவணங்களை கொண்டுவந்தார். தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டேப்லெட்-இல் மாற்றி கொண்டுவந்தார். நாம் அறிந்த வகையில் இதை தவிர வேறு எந்த மாற்றமும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது குறைந்துள்ளது என்பதை பார்ப்போம்
விலை அதிகரித்துள்ள பொருட்கள் : எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மொபைல், சார்ஜர், ஜெம்ஸ், தோல்லான சூ-க்கள்
விலை குறைந்துள்ள பொருட்கள் : இரும்பு, தகரம், நைலான் துணிகள், காப்பர் பொருட்கள், காப்பீடு, மின்சாரம், இரும்பு பொருட்கள்
தனியாருக்கு விற்கப்பட உள்ளவை
2022ம் ஆண்டுக்குள்ள் எல்.ஐ.சி பங்குகள் மக்களுக்கு விற்பனை செய்யபடும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஐடிபிஐ வங்கி தவிர மேலும் இரண்டு வங்கிகள், ஏர் இந்தியா, பிபிசிஎல், கான்கார் உள்ளிட்ட சில அரசு நிறுவனங்களும் தனியார் துறைக்கு 2022ம் ஆண்டிற்குள் விற்பனை செய்யப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ அமைப்பு வெளியிட்டுள்ள இந்த தேர்வு முடிவுகளை ctet.nic.in என்ற இணையதள முகவரியில் அறியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 12.47 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில் 4.14 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரண்டாம் தாளில் 11.04 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில் 2.39 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியா
முகேஷ் அம்பானி வீட்டின் முன் வெடிபொருட்களுடன் கார்: கொலை செய்ய திட்டமா?


இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவராகிய முகேஷ் அம்பானியின் வீட்டின் முன் வெடிபொருட்களுடன் கூடிய கார் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு இருந்துவரும் நிலையில் அவருடைய வீட்டின் அருகே இன்று காலை மர்மமான முறையில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த காரை பாதுகாப்பு படையினர் சோதனை செய்ததில் பயங்கர வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி வீட்டின் முன் பயங்கர வெடி பொருட்களுடன் இருந்த கார் அவரை கொலை செய்ய வந்ததா? என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
‘வெற்றிவேல்…வீரவேல்…’- கோவையில் முழங்கிய பிரதமர் மோடி!


கோவையில் பாஜக பரப்புரையின் போது பிரதமர் மோடி ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழங்கி உள்ளார்.
கோவையில் தமிழகத்துக்கான நலத்திட்டங்களை முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் முன்னிலையில் இன்று மோடி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கோவையில் நடந்த பாஜக பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். வெற்றி வேல்… வீர வேல்… என கூறி பரப்புரையை தொடங்கிய மோடி, “மத்திய அரசின் திட்டத்தால் கோவையில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் பயனடைந்துள்ளன. சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ். தமிழர் திருவிழாக்கள் உலகளவில் புகழ்பெற்றவை. பொறியியல், மருத்துவம் போன்ற துறை படிப்புகளை உள்ளூர் மொழிகளிலேயே பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம் உள்ளூர் இளைஞர்கள் அதிகப் பயன் பெறுவர். தமிழகத்தில் சிறு, குறு தொழில்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
கோவையில் மட்டும் சுமார் 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் திட்டம் மூலம் பயன்பெற்றுள்ளன. ஜவுளித்துறையை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது” என்றார்.
-
கிரிக்கெட்2 days ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்
-
கிரிக்கெட்2 days ago
‘ஏன்டா நீ ஆஸி., கேப்டன்டா… இப்டியா பேசுறது’- ஆரோன் பின்சை வறுத்தெடுத்த மைக்கெல் கிளார்க்
-
கிரிக்கெட்2 days ago
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
-
டிவி2 days ago
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!