Connect with us

இந்தியா

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: மாநிலங்களவையில் கடும் அமளி!

Published

on

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலங்களவையில் இது தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பில், காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் உள்நாட்டு பாதுகாப்புப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே அது சட்டமன்றத்துடன் கூடிய தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்படுகிறது. மேலும் லடாக் பகுதியைத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருவதால், லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகச் செயல்படும் என கூறினார் அமித் ஷா.

இந்த அறிவிப்பை கேட்ட அடுத்த நொடியிலேயே மாநிலங்களவையில் அமளி வெடித்தது. எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு காஷ்மீர் பிரிக்கப்படுவதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக காஷீர் பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

மேலும் பிடிபி எம்பிக்கள் அரசியல் சாசன நகலை கிழிக்க முயன்றதால் அவையில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், பாஜக அரசியலமைப்பு சட்டத்தையே கொன்றுவிட்டது என ஆவேசமாக பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமித் ஷா, நாடாளுமன்றத்தில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதை இனி ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது. இந்தப் பிரிவின் மூலம் மூன்று குடும்பங்கள் ஜம்மு காஷ்மீரில் சுரண்டலில் ஈடுபட்டது என குறிப்பிட்டார்.

இது தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட அறிக்கையில், 370-வது சட்டப்பிரிவை நீக்கும் உத்தரவு உடனே அமலுக்கு வருகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அரசியல் சட்டத் திருத்தங்கள் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும். இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார்.

இந்தியா

மோடியின் அறிவுரையை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கிய ப.சிதம்பரம்!

Published

on

மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில், 2013-ம் ஆண்டு மோடி தனக்குக் கூறிய அறிவுரையை, ப.சிதம்பரம் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கினார்.

2013-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், பொருளாதாரம் சரிந்த போது, அன்று குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, “பொருளாதாரம் சிக்கலில் உள்ளது, இளைஞர்களுக்கு வேலை தேவை.

போட்டி அரசியலை தவிர்த்து, பொருளாதாரத்துக்கு அதிக நேரத்தை ஒதுக்குங்கள். கையில் இருக்கும் வேலையில் கவனம் செலுத்துங்கள்” என்று கூறியிருந்தார்.

நேற்று அதே அறிவுரையை ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமனுக்கு வழங்கினார்.

Continue Reading

இந்தியா

கேரளாவை தாக்கிய கொரொனா வைரஸ்!

Published

on

சீனாவிலிருந்து பரவி வருவதாகக் கூறப்படும் கொரொனா வைரஸ், இந்தியாவில் கேரளாவில் ஒருவரை தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வரும் மாணவர் ஒருவர் கேரளா திரும்பியுள்ளார்.

அந்த மாணவரின் உடலில் கொரொனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, அந்த மாணவருக்கு கொரொனா வைரஸ் தாக்கப்பட்டு இருந்தாலும் உடல் நிலை சீராகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் அந்த மாணவரை மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த தகவலை இந்தியச் சுகாதார அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

Continue Reading

இந்தியா

உலகின் மோசமான டிராஃபிக் கொண்ட 5 நகரங்கள் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்!

Published

on

2019-ம் ஆண்டில் உலகின் மோசமான டிராஃபிக் கொண்ட நகரங்கள் பட்டியலை நெதர்லாந்தை சேர்ந்த டாம் டாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தை இந்தியாவின் சிலிகான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரு பெற்றுள்ளது.

அது மட்டுமல்லாமல் டாப் 5 மோசமான டிராஃபிக் நகரங்கள் பட்டியலில் மும்பை 4வது இடத்தையும், புனே 5வது இடத்தையும் பிடித்துள்ளன.

பிற நகரங்களுடன் ஒப்பிடும் போது, 2019-ம் ஆண்டு பெங்களுருவில் வசிக்கும் மக்கள், 243 மணி நேரம் கூடுதலாக ட்டிராஃபிக்கில் சிக்கி தவித்துள்ளார்கள்.

Continue Reading




வேலை வாய்ப்பு3 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா7 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா6 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு6 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா7 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்6 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்7 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்1 week ago

ரூ.3000க்கு விலை போன ஒரு டஜன் அல்போன்சா மாம்பழம்

வீடியோ செய்திகள்1 week ago

ஷிகாரா திரைப்படத்தை உருக்கமாக பார்த்த அத்வானி வீடியோ வைரல்

வீடியோ செய்திகள்1 week ago

கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

வீடியோ செய்திகள்1 week ago

பாவிக்கு எதுக்கு மரியாதை கொடுத்தீங்க -நடிகை ஆவேசம்

வீடியோ செய்திகள்1 week ago

சீன வங்கிகளுக்கு அனில் அம்பானி ரூ.710 கோடி செலுத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

வீடியோ1 week ago

யோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்!

வீடியோ செய்திகள்2 weeks ago

பிகிலேலேய்… வருமானவரி முக்கியம் ..! விஜய்யை சிக்க வைத்த விசிறிகள்

வீடியோ செய்திகள்2 weeks ago

விமானத்தில் இருந்து குதித்து வானில் நடைபயின்ற இளைஞர்

வீடியோ செய்திகள்2 weeks ago

ஹர்பஜன் சிங் படத்தில் Bigg boss லாஸ்லியா

வீடியோ செய்திகள்2 weeks ago

சீனாவுக்கு போனால் இந்தியாவுக்கு வராதீங்க…. மத்திய அரசு அதிரடி தடை…

Trending