Connect with us

இந்தியா

மே 20-ம் தேதி முதல் ரயில், பேருந்து, விமான போக்குவரத்துக்கு அனுமதி?

Published

on

மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், மே 20-ம் தேதி முதல் ரயில், பேருந்து மற்றும் விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இதை அடுத்து ஜூன் 1-ம் தேதி முதல் வழிப்பாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் போன்ற பொது இடங்களையும் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் இவற்றுக்குக் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்குவது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதற்கிடையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 முறை பிரதமர் மோடி தலைமையில் நிர்மலா சீதாராமன், அமித் ஷா மற்றும் பிற முக்கிய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அதில் கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையை மீட்டெடுப்பதற்காக ஊக்கச் சலுகைகள் வழங்குவதும் குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா

சீரியல் பார்த்து தந்தையை கொன்ற மகன்!

Published

on

சீரியலை பார்த்து கன் தந்தையைக் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

உத்திர பிரதேசம் மதுராஅவை சேர்ந்த 17 வயது சிறுவன், 100 தடவைக்கு மேல் ஒரு கிரைம் சீரயலை பார்த்துவிட்டு, அதுபோலவே தனது தந்தையைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையைக் கொன்ற பிறகு தாயாரின் உதவியுடன், பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, சீரியலில் காட்டியபடி தடயத்தையும் அழித்துள்ளார்கள்.

மகன் மற்றும் தாயாரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், அவர்களிடம் நடத்திய விசாரணை அடுத்து உண்மை தெரியவந்துள்ளது.

Continue Reading

இந்தியா

ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார்? சர்ச்சை ஆன ஆர்டிஐ கேள்வி?

Published

on

கோவிட்-19 தொற்று அதிகம் உள்ள பகுதியை அறிந்து, மக்கள் ஜாக்கிரதையாகப் பயணம் செய்ய உதவும் செயலி ஆரோக்கிய சேது.

கோவிட்-19 ஊரடங்கு காலத்தில், அரசு அலுவலக பணிக்கு வரும் ஊழியர்கள், தங்களது போனில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை நிறுவி இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

அண்மையில் இந்திய அரசின், இந்த ஆரோக்கிய சேது செயலி முறிச்சிக்கு உலக சுகாதார அமைப்பும் பாராட்டியது. இந்த ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்று ஆர்டிஐ மூலமாக, மத்திய மின்னணு அமைச்சகத்திடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலளித்த மத்திய மின்னணு அமைச்சகம், ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்று எங்களுக்குத் தெரியாது என பதில் அளித்துள்ளது. அது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆர்டிஐ கேள்விக்குச் சரியாகப் பதில் அளிக்காத நிலையில், மின்னணு அமைச்சகம், தேசிய தகவல் மையம், நெஜிடி ஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என்று மத்திய தகவல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது என்று MyGov தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங் பதில் அளித்துள்ளார்.

அதில் ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்ற சந்தேகம் வேண்டாம். தேசிய தகவல் மையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இரண்டும் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கினர் என்று தெரிவித்துள்ளார். ஆனால் எந்த தனியார் நிறுவனம் அது என்ற விவரத்தைத் தெரிவிக்கவில்லை.

ஆரோக்கிய சேது செயலி இணையதளமும், தேசிய தகவல் மையம் தான் செயலியை உருவாக்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

இந்தியா

தேர்தல் சோதனையில் சிக்கிய பணம்.. பறித்துச் சென்ற பாஜகவினர்!

Published

on

தெலுங்கானா இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளருக்குச் சொந்தமான இடத்திலிருந்து காவல் துறையினர் கைப்பற்றிய பணத்தை, பாஜகவினர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி துப்பாக்கா. இந்த தொகுதி காலியாக உள்ள நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேவைக்கு அதிகமான பணம் வைத்துள்ளது மற்றும் கொண்டு சென்றால், சரியான ஆவணம் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்.

அப்படி பாஜக வேட்பாளராகப் போட்டியிடும், ரகுநந்தன் ராவ் என்பவருக்குச் சொந்தமான பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 18 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

அப்போது காவல் துறையினரைச் சூழ்ந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் சிலர், காவல் துறையினரிடம் இருந்து 12 லட்சம் ரூபாயை பரித்துச்சென்றுள்ளனர்.

பணத்தை பரித்துச்சென்றவர்களை, கேமரா ஆதாரங்களைக் கொண்டு கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக முக்கிய நிர்வாகி பந்தி சஞ்சய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்6 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (31/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்6 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/10/2020)

தினபலன்6 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (31/10/2020)

வேலை வாய்ப்பு14 hours ago

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு14 hours ago

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு14 hours ago

திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு14 hours ago

மகிழ்ச்சி.. மருத்துவ படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதல்!

வேலை வாய்ப்பு15 hours ago

மத்திய அரசின் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு16 hours ago

மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு16 hours ago

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு12 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ4 days ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ5 days ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ5 days ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்2 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்8 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்8 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்8 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

Trending

%d bloggers like this: