இந்தியா
சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!


ஏற்கனவே சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகம் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டுமென லாரி உரிமையாளர்கள் சங்கம் சமீபத்தில் நாடு தழுவிய போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் சுங்கச்சாவடி கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளதாக வெளிவந்திருக்கும் அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் இந்த புதிய கட்டணம் அமல் ஆனது என்பதால் பல்வேறு சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் நடந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் ஏற்கனவே மத்திய அரசுக்கு பல்வேறு அதிருப்திகள் இருந்து வரும் நிலையில் தற்போது சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி இருப்பது பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்தியா
சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உபி அரசின் நிபந்தனை!


கொரனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் போக்குவரத்துக்கள் நிறுத்தப்படலாம் என்றும் வதந்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் பல புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி கடந்த சில நாட்களாக சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்திற்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை தாங்களே வீட்டிற்குள் 7 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் இது கட்டாயம் என்றும் அம்மாநில அரசு நிபந்தனை விதித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கடந்த சில நாட்களாக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறனர். அவ்வாறு திரும்பிக் கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கொரோனா தொழிலாளர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு


தங்க நகை கடைகளில் ஹால்மார்க் முத்திரை குத்தி விற்பனை செய்துவரும் நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் லீனா நந்தன் அவர்கள் ’தங்க நகைகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்று கூறியுள்ளார். நகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை ஏற்கனவே பலமுறை ஒத்தி போடப்பட்டு உள்ளதாகவும், எனவே ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை இட வேண்டும் என்றும் கூறினார்.
சென்னை உள்பட பல நகரங்களில் இன்னும் ஒரு சில கடைகளில் ஹால்மார்க் முத்திரை இல்லாமல் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் ஆனால் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து அவ்வாறு இனிமேல் விற்பனை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் ஹால்மார்க் முத்திரை இடப்பட்டு உள்ளதா என்பதை அறிந்து தங்க நகைகளை வாங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு தங்க நகை கடைக்காரர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா
அதிகரிக்கும் கொரோனா: மேலும் ஒரு மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு!


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்திலும் நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் நாளை முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், இரவு நேர ஊரடங்கின்போது யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திரையரங்குகள் நீச்சல் குளங்கள் ஆகியவை முற்றிலும் மூடப்பட வேண்டும் என்றும் உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி என்றும் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி என்றும் ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.
-
சினிமா செய்திகள்2 days ago
’கர்ணன்’ படத்தில் இந்த தவறு நடந்துள்ளது: உதயநிதி டுவிட்
-
கிரிக்கெட்2 days ago
IPL – முதன்முதலாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் செய்த காரியத்தைப் பாருங்க!
-
சினிமா செய்திகள்2 days ago
உடனடியாக இரத்தம் தேவை: இயக்குனர் அட்லியின் டுவிட்டால் பரபரப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
விஷ்ணுவிஷால்-ஜூவாலா கட்டா திருமண அழைப்பித இணையத்தில் வைரல்!