இந்தியா
“மோடிஜி… மோடிஜி… என் தொகுதியில பிரச்சாரம் பண்ணுங்க”- ரிக்வஸ்ட் வைக்கும் திமுக வேட்பாளர்


‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று புகழப்படும் கார்த்திகேய சிவசேனாபதி, வரும் தேர்தலில் திமுக சார்பில் தொண்டமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வித்தியாசமான ஓர் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
Dear prime minister Mr Narendra Modi … pls campagian for Mr S.P.Velumani, local administration minister. I am the dmk candidate against him and it will be very useful for me if you support him . Thank you sir . @MahuaMoitra @narendramodi @SPVelumanicbe @DMKEnvironWing @arivalay
— Karthikeya Sivasenapathy (@ksivasenapathy) March 31, 2021
தொண்டமுத்தூர் தொகுதியில் கார்த்திகேய சிவசேனாபதிக்கு எதிராக அதிமுக தரப்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி களமிறக்கப்பட்டு உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையில் தொண்டமுத்தூர் தொகுதியில் கடும் போட்டி இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் கார்த்திகேய சிவசேனாபதி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கோரிக்கையை ட்விட்டர் மூலம் வைத்துள்ளார். அவர், ‘அன்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களே… தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கும் எஸ்.பி.வேலுமணிக்கு தயவு செய்து நீங்கள் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் தான் அவருக்கு எதிராக நிற்கும் திமுக வேட்பாளர் ஆவேன். அவருக்கு நீங்கள், உங்கள் ஆதரவைக் கொடுத்தால் எனக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி சார்’ என்று கிண்டல் கலந்த தொனியில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா
தோனியின் அம்மா அப்பாவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல விஐபிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெற்றோருக்கு ஒரு கொரோனா செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தோனி பெற்றோர்கள் ராஞ்சியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர்களது உடலில் ஆக்சிஜன் லெவல் சரியாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிக்காக மும்பையில் இருக்கும் தல தோனி விரைவில் அவரது பெற்றோரை நேரில் சென்று சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
இந்தியா
உஷார்.. புதுச்சேரியில் ஏப்ரல் 23 முதல் 26 வரை முழு ஊரடங்கு..!


கொரோனா தொற்று பரவல் காரணமாகப் புதுச்சேரியில் ஏப்ரல் 23 முதல் 26 வரை முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் இரவு நேர ஊடரங்கு மட்டும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ஏப்ரல் 23 முதல் 26 வரை முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 1.2 சதவீதத்தை விட அதிகம் ஆகும்.
சென்ற ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தொடங்கப்பட்டது. பின்னர் சில மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கு அளிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
இந்தியா
உபி மாநிலத்தில் திடீர் லாக்டவுன் அறிவிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி


உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஒரு சில கட்டுப்பாடுகள் மற்றும் நோய் தடுப்பு ஊசி போடுவதை அதிகரிக்கலாம் என்றும் லாக்டவுன் தேவையில்லை என்றும் அம்மாநில உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் திடீரென உத்தரப்பிரதேச மாநிலத்தில் சற்றுமுன் லாக்டவுன் குறித்த அறிவிப்பு வெளி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வார இறுதி நாட்களில் அதாவது வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை லாக்டவுன் என உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கும் ஊரடங்கு திங்கட்கிழமை காலை 7 மணிவரை அமல்படுத்தப்படும் என்றும் இந்த ஊரடங்கு நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது
வெள்ளி இரவு முதல் திங்கள் காலை வரை முழு ஊரடங்கு என்பதால் இரண்டு நாட்கள் முழுவதும் வீட்டிலேயே பொதுமக்கள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிப்பு உள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு அவர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சினிமா செய்திகள்2 days ago
ஏப்ரல் 23ல் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகிறதா எம்ஜிஆர் மகன்?
-
சினிமா செய்திகள்2 days ago
காரக்குழம்பு சாப்பிட கனியின் வீடுதேடி சென்ற சிம்பு: வைரல் புகைப்படங்கள்!
-
இந்தியா2 days ago
பார்வையற்ற தாய்.. ரயில் தண்டாவாளத்தில் தவறி விழுந்த சிறுவன்.. காப்பற்றிய ரயில்வே ஊழியர்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!