இந்தியா
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை!


பொதுவாக தூக்கு தண்டனைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிப்பதால் பல பெரிய குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளுக்கு தற்போது ஆயுள் தண்டனை தான் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆசிரியருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதை பலரும் பாராட்டி, வரவேற்று வருகின்றனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி பள்ளியில் படிக்கும் 4-வயது சிறுமியை மகேந்திர சிங் கோண்ட் என்ற ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டு, இந்த வழக்கில் சாத்னா கூடுதல் மாவட்ட விசாரணை நீதிமன்றம் அனைத்து கட்ட விசாரணையையும் முடித்துள்ளது.
விசாரணைக்கு பின்னர் ஜபல்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசிரியர் மகேந்திர சிங் கோண்டுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். மாவட்ட நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதன்படி வரும் மார்ச் 2-ஆம் தேதி காலை 5 மணிக்கு மகேந்திர சிங் கோண்ட் தூக்கிலிடப்பட உள்ளார்.
இந்தியா
காலில் விழக்கூட தயார், ஆக்சிஜன் கொடுங்கள்: மத்திய அரசிடம் கெஞ்சும் மாநில அமைச்சர்!


கொரோனா நோயாளிகள் ஒரு பக்கம் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகமாகிக் கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதற்கு ஆக்சிஜன் இல்லாத நிலை பல மருத்துவமனைகளில் உள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசிடம் ஆக்சிஜன் சிலிண்டருக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மத்திய அரசின் காலில் விழுவதற்கு தயாராக இருக்கிறேன், தயவுசெய்து ஆக்சிஜனை கொடுங்கள் என்று கூறியுள்ளது பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோயாளிகளின் உயிரைக் காக்க எங்கள் அரசு தீவிரமாக போராடி வருகிறது. இந்த நேரத்தில் தாழ்மையான முறையில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஆக்சிஜன் பெறுவதற்காக மத்திய அரசின் காலில் விழுவதற்கு கூட தயார் என்று கூறியுள்ளார்.
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் உரிமை மத்திய அரசின் கையில் உள்ளதால் மத்திய அரசை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மாநிலத்தில் போதுமான ஆட்சியை வழங்க மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா
திருடி சென்ற தடுப்பூசி மருந்துகளை மன்னிப்பு கடித்ததோடு திருப்பி கொண்டு வந்து வைத்த திருடர்கள்!


நேற்று ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 1710 கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த தடுப்பூசி மருந்துகள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்தது.
கொரோனா தடுப்பூசி மருந்துகள் திருடு போனதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒருவருக்குக்கூட கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மருந்துகள் இல்லாத நிலை இருந்தது. இது குறித்த செய்தி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனது தவறை உணர்ந்த திருடர்கள் மீண்டும் திருடிய மருந்துகளை திரும்ப மருத்துவமனையிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அதுமட்டுமின்றி மன்னிப்புக் கடிதமும் எழுதி வைத்துள்ளனர். பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி மருந்துகளை திருடியதற்காக வருந்துகிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்தியா
கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: 12 நோயாளிகள் பரிதாப பலி!


கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருபக்கம் கொத்துக்கொத்தாக உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கொரோனா வைரசால் பாதித்தவர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தினால் பலரும் ஆண்டு வருகின்றனர். இந்த நிலையில் சமயத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 12 நோயாளிகள் பலியாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்ற மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 12 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவமனையில் ஏற்படும் விபத்துக்களால் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
CSK உடையில் தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?