Connect with us

இந்தியா

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

Published

on

பீகாரில் சிறுமி ஒருவரை 6 பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு போய் வலுக்கட்டாயமாக இரண்டு நாட்கள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் ஊர் பஞ்சாயத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கே தண்டனை வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் கயா மாவட்டத்தில் சாலை அருகே நின்று கொண்டிருந்த சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு போய் ஊர் பஞ்சாயத்து கட்டிடத்தின் மேல்பகுதியில் வைத்து இரண்டு நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுமியை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.

இதனை கண்டு பெண் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் சிறுமி மீட்கப்பட்டார். பின்னர் கூட்டப்பட்ட பஞ்சாயத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்து ஊரை சுற்றி வரவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. காரணம் சிறுமியை சீரழித்தவர்கள் பஞ்சாயத்தாரின் உறவினர்கள் என்பதால்.

இந்த அநியாயமான தீர்ப்பை எதிர்த்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறை பஞ்சாயத்தில் தீர்ப்பளித்த 5 பேரையும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஒருவரையும் கைதுசெய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 5 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தியா

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலவரம் வெடிக்க மோடியுடன் இருக்கும் இவர்தான் காரணமா?

Published

on

By

குடியரசு தினவிழா அன்று டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் கலவரம் வெடிக்க, முக்கிய காரணமாக இருந்த பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து பற்றிப் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய வேளான் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியான, உத்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜனவரி 26-ம் தேதி மத்திய அரசை எதிர்த்து டெல்லி மாநகரில் டிராக்டர் பேரணி நடத்தினர். அதில் கலவரம் வெடித்தது. அதற்கு நடிகர் தீப் சிங் தலைமையிலான போராட்டக் குழுவினர் தான் காரணம் என்றும் கூறப்பட்டது. அதை செங்கோட்டையில் சீக்கியர்களின் கொடியை ஏற்றியவுடன் தீப் சிங் சித்துவும் உறுதி செய்தார். எனவே இவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கிய உடன் அதற்கு முதல் ஆளாக ஆதரவு அளித்தவர் தீப் சிங் சித்து. ஆனால் போராட்டங்கள் தொடங்கிய ஒரு சில வாரங்களில் தீப் சித்து ஒரு பாஜக ஆதரவளர் என்று விவசாய சங்கங்கள் அவரை ஒதுக்கின. ஒரு விவசாய சங்கம் மட்டும் அவருக்கு அதாரவு அளித்தது.

இந்நிலையில் தீப் சிங் சித்து ஒரு பாஜக ஏஜெண்ட். அவர் ஒரு போராட்டக்குழுவைத் தவறாக வழிநடத்தினார். அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சில விவசாயிகள் சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகின.

தீப் சிங் சித்து பல்வேறு பஞ்சாபி மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். சென்ற மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் சன்னி தியோலுக்கு ஆதரவாக இவர் பிரச்சாரமும் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் எல்லாம் இவருக்குத் தொடர்பு உள்ளதற்கான படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீப் சிங் சித்துவை பயன்படுத்தி விவசாயிகள் போராட்டத்தை பாஜக திசை திருப்புகிறதா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர்.

Continue Reading

இந்தியா

ஆன்லைன் ரம்மி விளையாட்டல் தொடரும் தற்கொலைகள்: சிக்கலில் விராட் கோலி, தமன்னா..!

Published

on

By

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பான வழக்கு ஒன்றின் கீழ் விராட் கோலி, தமன்னா ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கேரள உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கின் கீழ் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடுபவர்கள் பலர் உழைத்து சம்பாதித்த பணம் மொத்தையும் இழப்பதோடு சிலர் உயிரையும் விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோர் விளையாட்டை நோக்கி மக்களைக் கவர்கின்றனர் என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

இந்த வாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு விளம்பரத் தூதர்களாக செயல்படும் விராட் கோலி, தமன்னா, அஜு வர்கீஸ் ஆகியோருக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் கூட திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 21 லட்ச ரூபாயை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

Continue Reading

இந்தியா

டிராக்டர் பேரணியால் வெடித்த வன்முறை; போராட்டத்தில் பின்னடைவா..? – இன்று விவசாயிகள் முக்கிய முடிவு

Published

on

By

டெல்லியில் நேற்று, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘டிராக்டர் பேரணி’ நடத்தினார்கள் விவசாயிகள். இந்தப் பேரணியால் போலீஸ் தரப்புக்கும் விவசாயிகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த மோதலினால் ஒரு விவசாயி மரணமடைந்தார்.

மத்திய அரசு, சென்ற ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வைத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல குடியரசு தினமான இன்று ‘டிராக்டர் பேரணி’ நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தன.

பேரணிக்கு டெல்லி போலீஸிடம் அனுமதி கேட்டது விவசாயிகள் தரப்பு. முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்த போலீஸ், பின்னர் மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படா வண்ணம் ஒரு பாதையில் பேரணி நடத்திக் கொள்ளலாம் என்று கூறி அனுமதி வழங்கியது. அதன்படி மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்பு முடிந்தவுடன், நேற்று மதியம் 12 மணிக்கு மேல் விவசாயிகளின் பேரணி நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில விவசாய சங்கங்கள் காலை 8 மணிக்கே போலீஸ் விதித்திருந்த தடையை மீறி பேரணி செல்ல ஆரம்பித்தனர். இதனால் இரு தரப்புக்கும் பல்வேறு இடங்களில் மோதல் வெடித்தது. இதன் உச்சக்கட்டமாக விவசாயிகள், டெல்லியின் செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.

தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து விவசாய சங்கங்களின் தலைவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளனர். தங்கள் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்தும் விவசாய சங்கங்கள் இன்று முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

டெல்லியில் மீண்டும் அசம்பாவித சம்பங்கள் நடந்துவிடக் கூடாது என்னும் நோக்கில் மத்திய உள்துறை அமித்ஷாவும் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். அதன்படி, தலைநகர் டெல்லியில் மேலும் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்படுவார்கள் எனத் தகவல் வந்துள்ளது.

Continue Reading
செய்திகள்25 mins ago

ரஜினிக்கு டூப்பாக நான் இருக்க மாட்டேன்… கட்சி ஆரம்பிப்பேன்…

சினிமா செய்திகள்38 mins ago

தனது அடுத்த படத்தின் கதையை ஓகே செய்த ரஜினிகாந்த்… கதை இதுதான்…

சினிமா செய்திகள்47 mins ago

‘சூர்யா-40’ படத்தில் ஹீரோயின் ஆன சிவகார்த்திகேயன் பட நாயகி..!

வேலைவாய்ப்பு49 mins ago

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

இந்திய ரயில்வேயின் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

இந்திய வனவியல் ஆராய்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

M.Sc படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்2 hours ago

ஹீரோ ஆகும் நடிகர் முரளியின் இளைய மகன்..!- தளபதி விஜய் குடும்பத்தில் இன்னொரு நாயகன்

வேலைவாய்ப்பு2 hours ago

மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு9 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ5 days ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ2 weeks ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ2 weeks ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ2 weeks ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ2 weeks ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 weeks ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ3 weeks ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 weeks ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 weeks ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி1 month ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending