இந்தியா
பிரதமர் மோடி ஒரு கோழை: சவால் விடும் ராகுல் காந்தி!


பிரதமர் நரேந்திர மோடி ஒரே மேடையில் ஐந்து நிமிடம் என்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய வருவாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்து மோடியை கோழை எனவும் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகவும் ஆவேசமாக பேசி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மோடி நீங்கள் 56 இஞ்ச் மார்பளவு கொண்டவர்கள் என்று கூறுகிறீர்கள். தேசப் பாதுகாப்பு மற்றும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து ஐந்து நிமிடங்களுக்கு விவாதிக்கலாம். உங்களுக்குச் சவால் விடுகிறேன். என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? மோடி என்னுடன் ஒரே மேடையில் விவாதம் செய்ய வருவாரா? பிஜேபிக்குச் சவால் விடுகிறேன். அவருக்குப் பயம் இருக்கிறது. மோடி ஒரு கோழை என ராகுல் ஆவேசமாக கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, மோடியிடம் யாராவது எழுந்து நின்று கேள்வி கேட்டால் உடனடியாக ஓடி விடுவார். அவர் முகத்தில் பயம் அதிகமாக உள்ளது. மக்களைப் பிரிப்பதன் மூலம் இந்தியாவை ஆட்சி செய்ய முடியாது என்பதை இப்போது அறிந்திருப்பார். நரேந்திர மோடியின் படம் முடிந்துவிட்டது என்று கடுமையாக தாக்கி பேசினார்.
இந்தியா
மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: ஈபிஎஸ்-க்கு பதிலாக கலந்து கொண்டது யார்?


இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் அவர் காணொளி மூலம் ஆலோசனை செய்து கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து அறிவுரைகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழகத்தின் சார்பில் இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பதிலாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஈபிஎஸ் அவர்களுக்கு சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.30 லட்சத்திற்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளதால் உடனடியாக கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
காலில் விழக்கூட தயார், ஆக்சிஜன் கொடுங்கள்: மத்திய அரசிடம் கெஞ்சும் மாநில அமைச்சர்!


கொரோனா நோயாளிகள் ஒரு பக்கம் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகமாகிக் கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதற்கு ஆக்சிஜன் இல்லாத நிலை பல மருத்துவமனைகளில் உள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசிடம் ஆக்சிஜன் சிலிண்டருக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மத்திய அரசின் காலில் விழுவதற்கு தயாராக இருக்கிறேன், தயவுசெய்து ஆக்சிஜனை கொடுங்கள் என்று கூறியுள்ளது பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோயாளிகளின் உயிரைக் காக்க எங்கள் அரசு தீவிரமாக போராடி வருகிறது. இந்த நேரத்தில் தாழ்மையான முறையில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஆக்சிஜன் பெறுவதற்காக மத்திய அரசின் காலில் விழுவதற்கு கூட தயார் என்று கூறியுள்ளார்.
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் உரிமை மத்திய அரசின் கையில் உள்ளதால் மத்திய அரசை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மாநிலத்தில் போதுமான ஆட்சியை வழங்க மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா
திருடி சென்ற தடுப்பூசி மருந்துகளை மன்னிப்பு கடித்ததோடு திருப்பி கொண்டு வந்து வைத்த திருடர்கள்!


நேற்று ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 1710 கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த தடுப்பூசி மருந்துகள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்தது.
கொரோனா தடுப்பூசி மருந்துகள் திருடு போனதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒருவருக்குக்கூட கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மருந்துகள் இல்லாத நிலை இருந்தது. இது குறித்த செய்தி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனது தவறை உணர்ந்த திருடர்கள் மீண்டும் திருடிய மருந்துகளை திரும்ப மருத்துவமனையிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அதுமட்டுமின்றி மன்னிப்புக் கடிதமும் எழுதி வைத்துள்ளனர். பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி மருந்துகளை திருடியதற்காக வருந்துகிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
CSK உடையில் தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?