Connect with us

இந்தியா

காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் காந்தி சூடான பதில்: எங்களை சுதந்திரமாக பயணம் செய்ய விட்டாலே போதும்!

Published

on

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ நீக்கிய மத்திய அரசு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரத்ரேசங்களாக அவற்றை பிரித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் கடந்த 10-ஆம் தேதி பேசிய ராகுல் காந்தி, காஷ்மீரில் வன்முறை நடைபெறுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அங்கு என்ன நடக்கிறது என பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.

இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக், ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய கட்சியின் இளம் தலைவர். அவரிடம் இருந்து மிகவும் முதிர்ச்சியடைந்த அறிக்கையை எதிர்பார்க்கிறேன். ராகுல் காந்தியை காஷ்மீருக்கு வந்து பார்வையிடுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். ஜம்மு-காஷ்மீர் அரசுக்க்கு சொந்தமான விமானத்தை டெல்லிக்கு அனுப்புகிறோம். அதில் பயணித்து காஷ்மீருக்கு வாருங்கள். இங்கு நிலைமை மிகவும் சீராகத்தான் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்வீர்கள் என்றார்.

இந்நிலையில் இதற்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, நானும் எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவும் உங்களின் அழைப்பை ஏற்று ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை பார்வையிட வருகிறோம். இதற்காக நீங்கள் எங்களுக்கு விமானம் அனுப்ப வேண்டியதில்லை. ஆனால், அங்கு சுதந்திரமாக பயணம் செய்து மக்களையும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும் நமது ராணுவ வீரர்களையும் நாங்கள் சந்திப்பதை நீங்கள் உறுதிப்படுத்தினால் போதும் என சூடாக பதிவிட்டுள்ளார்.

இந்தியா

ரயில்களில் உணவு கட்டணம் அதிகரிப்பு… பயணிகள் அதிர்ச்சி!

சதாப்தி, ராஜ்தானி, டூரண்டோ ரயில் உணவு கட்டணம் அதிகரிப்பு.

Published

on

இந்தியன் ரயில்வே நிர்வாகம் சதாப்தி, ராஜ்தானி, டூரண்டோ ரயில்களில் உணவு கட்டணத்தை அதிகரித்து அறிவித்துள்ளது.

இந்த உணவு கட்டணங்கள் ரயில் பெட்டிகள் வகுப்பை பொறுத்து மாறும்.

முதல் ஏசி மற்றும் ஈஸி பெட்டிகளில் டீ 35 ரூபாய், காலை சிற்றுண்டி 140 ரூபாய், மதிய சாப்பாடு மற்றும் இரவு உணவு 245 ரூபாய் என அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று 2 மற்றும் 3ம் வகுப்பு ஏசி, சேர் கார் வகுப்பு பெட்டிகளின் உணவு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இதனால் பிற ரயில்களிலும் விரைவில் உணவு கட்டணம் உயர்த்த வாய்ப்புள்ளது என பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Continue Reading

இந்தியா

இன்று வெளியாக உள்ள 3 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள்!

Published

on

இன்று சபரிமலை மற்றும் ரஃபேல் மறுசீராய்வு வழக்கு மற்றும் தேர்தலின் போது காங்கிரஸ் தரப்பால் காவலாளி திருடன் என்று மோடியை எதிர்த்துச் செய்த பிரச்சாரம் மீதான அவதூறு வழக்கு உள்ளிட்ட 3 முக்கிய தீர்ப்புகள் வெளியாக உள்ளன.

சென்ற ஆண்டு சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. ஆனாலும் அதை முறையாகச் செயல்படுத்த முடியாதவாறு தடுத்த இந்து அமைப்புகளை அதற்கு எதிரான மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நடப்பு ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் கேரள அரசும் உள்ளது. ஆனால் இந்த மறுசீராய்வு வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

அடுத்ததாக இந்திய விமானப்படைக்கு 36 ரஃபேல் விமானங்கள் வாங்கியதற்கான ஒப்பந்தம் வழங்கியில் பாஜக அரசு ஊழல் செய்துள்ளது என்று தொடரப்பட்ட வழக்குக்கு, அப்படி ஊழல் நடைபெறவில்லை என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.

மூன்றாவதாக மக்களவை தேர்தல் 2019 சமயத்தில் இந்த நாட்டின் காவலாளி நான் என்று பிரதமர் மோடி கூறியதை விமர்சித்து, காவலாளி ஒரு திருடன் இன்று காங்கிரஸ் தரப்பால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது., இந்த வழக்கின் மீதான விசாரணையும் முடிந்து இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

இந்தியா

‘Where is my Train’ செயலியை பயன்படுத்தி ரயிலில் திருடிய கும்பல் கைது!

Published

on

ரயில் பயணிகள் அதிகளவில் பயன்படுத்தும் ‘Where is my Train’ சென்ற செயலியைப் பயன்படுத்தி திருடும் கும்பலைச் சேர்ந்0த நபர் ஒருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ரயில் புறப்படும் நேரம், சேரும் நேரம், எங்கு இருக்கிறது என்ற இவர்களை நேரலையாக அளிக்கும் செயலி ‘Where is my Train’.

இந்த செயலியை பயன்படுத்தி ரயில் எங்கு இருக்கிறது என்று தெரிந்துகொண்ட கும்பல் ஒன்று, தெலுங்கான மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ரயில் சிக்னலை மாற்றி கொள்ளை அடித்து வந்துள்ளனர்.

இப்படி தொடர்ந்து சிக்னல் மாற்றி கொள்ளை அடிப்பதை அறிந்த ரயில்வே காவல் துறையில் அதில் தொடர்புடைய பாலாஜி ஸ்ரீரங் ஷிண்டே என்ற நபரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.

விரைவில் இந்த கொள்ளை கும்பல் முழுவதும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
சினிமா6 hours ago

சார்லஸ் ஏஞ்சல்ஸ் (Charlie’s Angels) விமர்சனம்… தேவதைகளை அப்டேட் செய்தவர்கள் கொஞ்சம் கதை… ஆக்‌ஷனையும் அப்டேட் செய்திருக்கலாம்…

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (18/11/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/11/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/11/2019)

விமர்சனம்1 day ago

முதல் பாதியில் வரும் 2 சண்டை… 3 பாட்டு… 250 வசனங்களை பொறுத்துக்கொண்டால் சங்கத்தமிழன் உங்களை கவருவான்…

விமர்சனம்1 day ago

போர்டு வி பெர்ராரி (Ford v Ferraari)… இந்த வார ரேஸில் வெற்றி பெற்றது போர்டு வி பெர்ராரி தான்…

Doctor Sleep Movie Review In Tamil
விமர்சனம்1 day ago

டாக்டர் ஸ்லீப் விமர்சனம்… (Doctor Sleep) பெயரை பார்த்து கொஞ்சம் உஷாராகியிருக்கவேண்டும்…

weekly prediction, வாரபலன்
வார பலன்2 days ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் நவம்பர் 17 முதல் 23 வரை )

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (17/11/2019)

பர்சனல் ஃபினாஸ்2 days ago

வாகனம் தொலைந்துவிட்டதா? உங்களிடம் இது இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது தெரியுமா?

வேலை வாய்ப்பு7 days ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா4 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா3 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

இந்தியா4 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு3 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு4 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்3 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்4 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

Uncategorized1 month ago

பெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா? ‘பிகில் டிரெய்லர்’ வெறித்தனம்!!!

வீடியோ1 month ago

ஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்!

வீடியோ2 months ago

விஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2!

வீடியோ2 months ago

பிகில் ‘உனக்காக’ பாடல்!

வீடியோ3 months ago

பிகில் – வெறித்தனம் பாடல்!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ3 months ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ4 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ5 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ5 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ5 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

Trending