Connect with us

இந்தியா

காங்கிரஸின் உண்மையான சக்தி எது தெரியுமா?- சொல்கிறார் ராகுல் காந்தி

Published

on

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், கேரளா வயநாடு எம்.பி-யுமான ராகுல் காந்தி, காங்கிரஸின் உண்மையான சக்தி எது என்பது குறித்துப் பேசியுள்ளார்.

இளைஞர் காங்கிரஸ் அமைப்பு சார்பில் டெல்லியில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் ராகுல் காந்தி,  ‘காங்கிரஸின் தொண்டா்கள்தான் கட்சியின் உண்மையான சக்தி. இளைஞா் காங்கிரஸ் சிறந்த வகையில் அா்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றது. நாடு முழுவதும் கட்சியின் கொள்கைகளுக்காகப் போராடி வருகின்றனா்.

இதற்காக இந்த அமைப்பின் நிா்வாகிகளுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது நம்பிக்கையின் அா்த்தம் என மகாத்மா காந்தி கூறுவது வழக்கம். இன்றைக்கு நாட்டுக்கு இதுபோன்ற நம்பிக்கை தேவைப்படுகிறது. நாட்டில் உள்ள சுரண்டப்படும், நலிவுற்ற பிரிவினருக்கு நாம் அனைவரும் குரல் கொடுப்பது கடைமையாகும். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிா்த்து இளைஞா் காங்கிரஸ் குரல் கொடுக்கும்’ என்றாா்.

Advertisement

இந்தியா

கணவருக்கு பெட் வேண்டும் என முதல்வர் அலுவலகம் முன் போராடிய பெண்!

Published

on

By

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் எந்த மருத்துவமனையிலும் பெட் இடமில்லை என்று கூறுவதாகவும் எனவே தனது கணவருக்கு பெட் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் முதல்வர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவர் இருக்கும் ஆம்புலன்சை கர்நாடக மாநில முதல்வர் அலுவலகம் முன் நிறுத்திய அந்த பெண் தனது கணவருக்கு எப்படியாவது பெட் ஏற்பாடு செய்யுங்கள் என்றும் அதற்குரிய பணத்தை நான் உடனே கட்டி விடுகிறேன் என்று கெஞ்சி அழுது கொண்டிருந்தார்.

இதனை அடுத்து முதல்வர் அலுவலக அதிகாரிகள் அந்த பெண்ணின் கணவருக்கு உடனடியாக பெட் ஏற்பாடு செய்தனர். ஆனால் அந்த பெண்ணின் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் கொரோனாவால் பலியானார் என்பது சோகமான தகவல் ஆகும். முதல்வர் அலுவலகம் முன் தனது கணவருக்கு பெட் வேண்டும் என்று அந்தப் பெண் கெஞ்சிக் கூத்தாடி கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

இந்தியா

சுவிட்சர்லாந்தில் இருந்து வந்தது 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள்: இந்தியாவுக்கு குவியும் உதவிகள்!

Published

on

By

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இந்தியாவுக்கு உலக நாடுகளின் உதவிகளும் குவிந்து கொண்டே வருகிறது. ஏற்கனவே அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவை இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை வழங்கி உதவி செய்துள்ளன.

அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 50 வென்டிலேட்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்று அதிகாலை இந்தியாவுக்கு வந்துள்ளது.

இந்த ஆக்சிசன் செறிவூட்டிகள் உடனடியாக தேவையான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த 3000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நோயாளிக்ளின் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

மேலும் ஒரு சில நாடுகளிலிருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் வென்டிலேட்டர் வந்து கொண்டிருப்பதாகவும் அவை வந்த உடன் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுபவம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Continue Reading

இந்தியா

2ஆம் வாய்ப்பாடு கூட தெரியவில்லையா? திருமணத்தை நிறுத்திய மணமகள்!

Published

on

By

இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியவில்லை என்பதால் திருமணத்தை பாதியிலேயே நிறுத்திய மணமகள் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மஹோபா என்ற பகுதியில் இளம் பெண் ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருமணம் குறித்த சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மணமகன் எழுதப்படிக்க தெரியாதவர் என்ற தகவல் மணமகளுக்கு கிடைத்தது.

உடனே இதை உறுதி செய்வதற்காக மணமேடையிலேயே மணமகனை இரண்டாம் வாய்ப்பாடு சொல்லும்படி கூறினார். ஆனால் மணமகன் இரண்டாம் வாய்ப்பாடு கூறுவதற்கு திணறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் இரண்டாம் வாய்ப்பாடு என்ற அடிப்படை கூட தெரியாத ஒருவரை எப்படி நான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற கேள்வி எழுப்பி உடனடியாக திருமணத்தை நிறுத்தினார். இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மணமகளை சமாதானப்படுத்த மணமகன் வீட்டினர் மற்றும் மணமகள் வீட்டினர் எவ்வளவோ முயற்சி செய்தும் படிப்பறிவில்லாத ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற தனது முடிவில் மணமகள் உறுதியாக இருந்ததால் திருமணம் நின்று போனது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Continue Reading
வேலைவாய்ப்பு8 mins ago

சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு14 mins ago

தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள்: கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவிப்பு

வேலைவாய்ப்பு22 mins ago

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு31 mins ago

பால் விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து, ரூ.2000 நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சினிமா செய்திகள்44 mins ago

சிஎஸ்கே வீரருக்கும் உதவி செய்த நடிகர் சோனுசூட்! 10 நிமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆக்சிஜன்!

வேலைவாய்ப்பு1 hour ago

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு1 hour ago

இந்த நேரத்தில் உங்கள் ஆட்சி நம்பிக்கை தருகிறது: முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து

வேலைவாய்ப்பு2 hours ago

பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்2 hours ago

பாக்யராஜ் குடும்பத்தினர்களுக்கு கொரோனா: சாந்தனு அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு2 hours ago

நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending