இந்தியா
‘இந்தா வச்சிக்கோ!’- புரூஸ் லீ போல ஒற்றைக் கையில் புஷ்-அப் எடுத்து மிரளவைத்த ராகுல்- வைரல் வீடியோ


தமிழகத்தில் தொடர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சென்று பல்வேறு பொதுக் கூட்டங்களில் பேசினார்.
அந்த வகையில் அவர் இன்று பேசியுள்ளதாவது:
நிதிச் சுமை, ஆள் பற்றாக்குறை என்று பல்வேறு அதிகாரிகள் எதிர்த்த போதும், குழந்தைகளின் கல்விதான் முக்கியம் என்று விடாப்பிடியாக நின்று, சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கியவர் காமராஜர்.
தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த காரணம் கொண்டும் நாம் வழிவிட்டுவிட கூடாது. தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் பாதுகாப்பது ஒரு இந்தியனாக எனது கடமை. இவ்வாறு ராகுல் பேசினார்.
தொடர் சுற்றுப் பயணத்தால் களைப்படைந்த ராகுல், ஓர் இடத்தில் பன நுங்கு விற்பதைப் பார்த்து நின்றுள்ளார். திடீரென்று அவர் இறங்கி மக்களோடு மக்களாக நுங்குவை ரசித்துச் சாப்பிட்டார். அது குறித்தான வீடியோ:
மக்களோடு மக்களாய் பழகும் எளிமையின் மறு உருவமான தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தெருவோரம் அமைந்த நுங்கு கடைக்குச் சென்று நுங்கு சாப்பிட்டு மகிழ்ந்தார்.#TNwithRahulGandhi#VaangaOruKaiPaappom pic.twitter.com/rakC5cAEsy
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) March 1, 2021
அதேபோல கன்னியாகுமரியில் இருக்கும் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுலை, மாணவர்கள் சிலர் ‘உங்களால் புஷ்-அப்’ எடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு ராகுல், ‘தாராளமாக’ என்றுள்ளார்.
ராகுலுடன் புஷ்-அப் எடுக்க வந்த மாணவி, ‘வாங்க முதலில் 15 புஷ்-அப்களை எடுப்போம்’ என்று சவால் விட்டுள்ளார். ராகுல் மாணவியை முந்திக் கொண்டு மின்னல் வேகத்தில் பாடி-பில்டர் போல புஷ்-அப்களை எடுத்து முடித்தார். தொடர்ந்து அவர் ஒற்றைக் கையில் புரூஸ் லீ போலவும் புஷ்-அப் எடுத்துக் காட்டி அசத்தினார்.
அது குறித்த வைரல் வீடியோ:
#WATCH: Congress leader Rahul Gandhi doing push-ups and ‘Aikido’ with students of St. Joseph’s Matriculation Hr. Sec. School in Mulagumoodubn, Tamil Nadu pic.twitter.com/qbc8OzI1HE
— ANI (@ANI) March 1, 2021
இந்தியா
‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..?’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்


கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் எதிர்பாராத பாதிப்புகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் உயர் காக்கும் ஆக்ஸிஜன் சப்ளை தீர்ந்து போயுள்ளன. இதனால் பலர் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் இந்திய பல மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை ஏற்றுமதி செய்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த அதிர்ச்சிகர தகவலைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது கறார் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
‘நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பதும்” பேரதிர்ச்சியளிக்கிறது.
இதுபோதாது எனத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுள்ள நேரத்தில் – மாநிலத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு டிரான்ஸ்பர் செய்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
அண்டை மாநில சகோதரர்களும் நம் சகோதரர்களே என்றாலும் – தமிழகத்தில் ஆக்சிஜன் நிலவரம் எப்படியிருக்கிறது என்ற அடிப்படைக் கேள்வியைக் கூட இங்குள்ள தலைமைச் செயலாளரிடமோ அல்லது காபந்து சர்க்காரிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ள மத்திய அரசுக்கு மனமில்லை. கொரோனா நோய்த்தொற்று மேலாண்மையில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் மத்திய பா.ஜ.க. அரசு திணறுவது மட்டுமின்றி – மாநில அரசுகளை “கிள்ளுக்கீரைகளாக” நினைக்கும் போக்குடன் நடந்து கொள்வது கெடுவாய்ப்பானதாகும்.
நேற்றுவரை ஆக்சிஜன் கையிருப்பு இருக்கிறது என்று கூறி வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாக வரும் செய்திகளுக்குக் காரணம் – மத்திய பா.ஜ.க. அரசின் நிர்வாக அலட்சியமா அல்லது நிர்வாக தோல்வியா? தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் கண்களுக்குத் தெரிந்ததா – கொரோனாவில் செத்துமடியும் மக்களின் உயிர் – கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்படும் மக்கள் அவருக்கு முக்கியமாகத் தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. நிர்வாகத்தில் “உலக மகா நிபுணர்” என்று பிரச்சாரம் செய்து கொண்டு வரப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்?’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்தியா
’என் கடைசி குட்மார்னிங் இதுதான்’: இறப்பதற்கு முன்பே ஃபேஸ்புக்கில் பதிவு செய்த பெண் டாக்டர்!


இதுதான் எனது கடைசி குட்மார்னிங் என பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பதிவு செய்த பெண் டாக்டர் ஒருவரின் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த மனிஷா யாதவ் என்ற பெண் டாக்டர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மோசமான மோசமாக நடந்ததை அடுத்து அவர் தனது ஃபேஸ்புக்கில் இதுதான் என்னுடைய கடைசி குட்மார்னிங் ஆக இருக்கும் எனக்கே தெரிகிறது, என்னுடைய மரணம் அருகில் வந்துவிட்டது என்று இருப்பினும் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். என்னுடைய உடலுக்குத் தான் அழிவே தவிர ஆத்மாவுக்கு அழிவில்லை, ஆத்மா என்றும் அழிவில்லாதது என்று பதிவு செய்துள்ளார்.
டாக்டர் மனிஷா ஜாதவ்வின் இந்த பேஸ்புக் பதிவு செய்த 36 மணி நேரத்தில் அவர் மரணமடைந்து விட்டார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாக அவரது மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் தனது மரணத்தை முன்கூட்டியே கணித்து பேஸ்புக்கில் பதிவு செய்து அவரது பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
இந்தியாவில் கொரோனாவின் Triple Mutation வகை; வருகிறது அடுத்த ஆபத்து


நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2,000 பேர் இறந்துள்ளார்கள். கொரோனா தொற்று ஆரம்பித்தது முதல் இந்தியாவில் ஒரே நாளில் இத்தனை பேர் இத்தொற்று காரணமாக மரணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில் ‘டிரிபிள் மியூடேஷன்’ என்னும் புதிய வகை கொரோனா பரவல் நாட்டில் சில இடங்களில் உருவாகியுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இந்தப் புதிய வகை கொரோனா மூலம், மூன்று வகை கோவிட் வைரஸ்கள் இணைந்து புதிய வகை தொற்றாக உருவெடுத்துள்ளதாக தகவல். இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மேலும் கடுமையானதாக மாற்றும் என்று அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இந்தப் புதிய வகை கொரோனா தொற்று ஏற்கெனவே தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இந்திய அளவிலும், உலக அளவிலும் கொரோனாவில் அதிவேகப் பரவலுக்கு காரணம் இப்படி தொற்று உருமாறி பரவுவது தான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தப் புதிய வகை கொரோனா தொற்றை, தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் சமாளிக்குமா என்கிற முக்கியமான கேள்வி எழுப்பப்படுகிறது. பொதுவாக வைரஸ் தொற்றானது, அதிகமாக பரவும் போது, புதிய உரு கொண்டு இன்னும் வீரியமாக பரவப் பார்க்கும். அந்த நிலையில் தான் தற்போது கோவிட்-19 வைரஸ் தொற்று உள்ளது. எனவே, டிரிபிள் மியூடேஷன் கொரோனா தொற்றும் அதிவேகமாக பரவ வாய்ப்புள்ளது. இந்தப் புதிய கொரோனா, தடுப்பு மருந்துகளைத் தாண்டியும் உடலில் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அதன் தாக்கம் மற்றும் வீரியம் எந்தளவுக்கு இருகுகம் என்பதை இப்போது கணித்து சொல்லி விட முடியாது என்று விஞ்ஞஞானிகள் கூறுகின்றனர்.
-
கிரிக்கெட்2 days ago
மொயின் அலி, ஜடேஜா அபார பந்துவீச்சு: மீண்டும் 2ஆம் இடம் பிடித்த சிஎஸ்கே!!
-
வணிகம்2 days ago
நகை வாங்க சரியான நேரம் (20/04/2021)!
-
சினிமா செய்திகள்2 days ago
படப்பிடிப்பு தொடங்கும் முன் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய உதயநிதி!
-
சினிமா செய்திகள்2 days ago
பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா?