இந்தியா
இன்று காலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி ராக்கெட்!


பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது என்ற தகவல் இந்தியாவின் மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது.
19 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கவுண்ட்-டவுன் ஏற்கனவே தொடங்கியுள்ளது.
அமேசோனியா -1 உள்பட 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாயும் இந்த ராக்கெட்,
சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று காலை சரியாக 10.24 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் முதன்முதலாக வணிக ரீதியில் இந்த ராக்கெட் விண்ணில் பாய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா
JEE 2021 ஏப்ரல் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.. அடுத்த அறிவிப்பு எப்போது?


கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த EE (Main) 2021 தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அகில இந்தியப் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்படுவது JEE (Manin) நுழைவுத் தேர்வு. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவரமாக அதிகரித்து வருகிறது.
எனவே ஏப்ரல் 27, 28 மற்றும் 30-ம் தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற இருந்த JEE (Main) 2021 தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
JEE (Main) தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை 15 நாட்களில், தேர்வு எப்போது என்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
📢 Announcement
Given the current #covid19 situation, I have advised @DG_NTA to postpone the JEE (Main) – 2021 April Session.I would like to reiterate that safety of our students & their academic career are @EduMinOfIndia‘s and my prime concerns right now. pic.twitter.com/Pe3qC2hy8T
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) April 18, 2021
இந்தியா
கும்பமேளா சென்று வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்.. ஒடிசா அரசு அதிரடி!


ஒடிசாவிலிருந்து கும்பமேளா சென்று வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் என்று அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
கும்பமேளா சென்று வந்தால் தனிமைப்படுத்தல் மட்டுமல்லாமல் RT-PCR சோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தல் வீடு அல்லது, தற்காலிக மருத்துவ மையங்களில் செய்துகொள்ளலாம் என்று ஒடிசா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் கூறியுள்ளார்.
இந்தியா
கொரோனா பரவல் எதிரொலி: இன்று இரவு பிரதமர் அவசர ஆலோசனை


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்தியாவில் நேற்று இரண்டு லட்சத்தை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை செய்ய உள்ளார். பல்வேறு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை உள்ளதாகவும் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி தொடர்பாக அவர் இந்த அவசர ஆலோசனையில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.
அவசர ஆலோசனை முடிவுக்கு பின் பிரதமர் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சினிமா செய்திகள்2 days ago
விருகம்பாக்கம் வீட்டிற்கு வந்தது விவேக் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு விரைவில் ஏற்பாடு!
-
சினிமா செய்திகள்1 day ago
விவேக் மறைவு குறித்து அரசியல் பிரபலங்களின் இரங்கல்கள்!
-
கிரிக்கெட்2 days ago
விக்கெட் எடுத்தவுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடிய பிராவோ! வைரல் வீடியோ
-
கிரிக்கெட்2 days ago
நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் நேரடியாக 2வது இடம்: சி.எஸ்.கே சாதிக்குமா?