Connect with us

இந்தியா

ஜன் தன் சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு 2-ம் கட்டமாக ரூ.500 வழங்கும் தேதி அறிவிப்பு!

Published

on

மத்திய அரசு ஜன் தன் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.500 வழங்கும் தேதிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தொடரப்பட்டு வரும் ஊடரங்கால், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்திற்காக ஜன் தன் சேமிப்பு கணக்குகளுக்கு மூன்று தவணையாக 500 ரூபாய் வழங்கப்படும் என்று மார்ச் மாதம் 26-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.

ஏப்ரல் மாதத்திற்கான 500 ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், மே 4-ம் தேதி முதல் பணத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிவாரண பணத்தை ஜன் தன் வங்கி கணக்கிலிருந்து எடுக்க விரும்பும் பெண்கள், வங்கி கணக்கு எண்ணின் கடைசி வரிசை படி குறிப்பிட்ட தேதிகளில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரதான் மந்திரி ஜன் தன் சேமிப்பு கணக்கு எண் 0 மற்றும் 1 என்று முடியும் போது மே 4-ம் தேதியும், 2 ல்லது 3 என்ற எண்களுடன் முடியும் சேமிப்பு கணக்கு எண் வைத்துள்ளவர்கள் மே 5-ம் தேதியும், 5 அல்லது 4 என்று முடியும் சேமிப்பு கணக்கை வைத்துள்ளவர்கள் மே 6-ம் தேதியும், 6 அல்லது 7 என்று முடியும் கணக்கை வைத்துள்ளவர்கள் மே 8-ம் தேதியும், 8 அல்லது 9 என்று முடியும் கணக்கை வைத்துள்ளவர்கள் மே 11-ம் தேதியும் பணத்தை பெறலாம்.

மேலே குறிப்பிட்ட தேதிகளை பணத்தை பெறவில்லை என்றால் மே 12-ம் தேதி முதல் எந்த தேதிகளில் வேண்டுமானாலும் வங்கி கிளை அல்லது ஏடிஎம் மையங்கள் சென்று பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20.5 கோடி ஜன் தன் சேமிப்பு கணக்குகளுக்கு ஏப்ரல் மாதம் 500 ரூபாய் அளித்ததன் மூலம் மத்திய அரசுக்கு 10,025 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இன்னும் மே மற்றும் ஜூன் மாதத்திற்கு ஜன் தன் சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு 500 ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

ரயில் டிக்கெட் பி.என்.ஆர் நிலையை வாட்ஸ்ஆப் வழியாகத் தெரிந்துகொள்வது எப்படி?

Published

on

ரயில் பயண அனுபவத்தை இன்னும் மெருகேற்ற, வாட்ஸ்ஆப் மூலம் ரயில் டிக்கெட் பி.என்.ஆர் நிலையை அறியும் முறையை ரெயிலோஃபை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய சேவையின் மூலமாக பி.என்.ஆர் நிலை மட்டுமல்லாமல் ரயில் தாமதம், ரயில் எங்கு உள்ளது, அடுத்த ரயில் நிலையம் என்ன போன்ற விவரங்களையும் வாட்ஸ்ஆப் செயலி மூலம் பெற முடியும்.

ரயில் டிக்கெட் பி.என்.ஆர் நிலை மற்றும் பிற ரயில் பயண விவரங்களை வாட்ஸ்ஆப் செயலி மூலம் பெறுவது எப்படி?

1) முதல் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
2) வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்த பிறகு “+91-9881193322” என்ற ரேயிலோஃபை மொபைல் எண்ணை உங்கள் போனில் சேமித்துக்கொள்ள வேண்டும்.
3) பின்னர் வாட்ஸ்ஆப் செயலியில் இருந்து, ரேயிலோஃபை மொபைல் எண்ணிற்கு 10 இலக்க பி.என்.ஆர் எண்ணை அனுப்ப வேண்டும்.
4) பி.என்.ஆர் எண்ணை அனுப்பிய உடன், வாட்ஸ்ஆப் மூலம் பி.என்.ஆர் மற்றும் பிற ரயில் பயணம் குறித்த தகவல்களைப் பெற முடியும்.

ரெயிலோஃபையின் இந்த புதிய சேவையானது செப்டம்பர் 2020-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Continue Reading

இந்தியா

டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்த விவசாயிகள் சங்கம்!

Published

on

மத்திய அரசின் புதிய வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லி புறநகர்ப் பகுதியில் போராட்டம் நடித்து வரும் விவசாயிகள் சங்கங்கள், டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

டெல்லியில் செல்லும் அனைத்து சாலைகளையும் அடைக்கும் வகையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளான் சட்டங்களுக்கு எதிரான இந்த போராட்டம் தொடர்ந்து 9வது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு விவசாயிகள் சங்கங்களுடன் செய்த பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்ததை அடுத்து இந்த நாடு தளியை பந்த்துக்கு விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

விவசாயிகள் சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே, வர்த்தக மற்றும் உணவு அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வர்த்தக அமைச்சர் சோம் பிரகாஷ் மற்றும் பலர் ஈடுபட்டனர்.

மத்திய அரசுடனான விவசாயிகளின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஒருவேலை இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் சங்கங்கள் சமாதானம் ஆனால் பந்த் ரத்தாக வாய்ப்புள்ளது.

ஆனால் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் விடாப்பிடியாக உள்ளதால், நாடு தழுவிய பந்த் நடைபெறவே அதிக வாய்ப்புள்ளது.

Continue Reading

இந்தியா

எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படாது: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Published

on

தாய் மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்குவதற்காக விரைவுக்குழு அமைத்து மத்திய உயர் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில், உயர்மட்ட ஆலோசனை குழு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உயர்கல்வித் துறை செயலாளர் தலைமையில் விரைவுக்குழுவை அமைத்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழு தாய் மொழியில் தொழில்நுட்ப கல்வியை அமைப்பது குறித்து பல்வேறு தரப்பினர் வழங்கிய ஆலோசனைகளைப் பரிசீலித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படாது. இதனால் ஆங்கில அறிவு இல்லை என்ற அச்சத்தால், தொழில்நுட்ப கல்வியை தவிர்க்கும் மாணவர்கள் பயனடைவார்கள் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Continue Reading




இந்தியா11 mins ago

ரயில் டிக்கெட் பி.என்.ஆர் நிலையை வாட்ஸ்ஆப் வழியாகத் தெரிந்துகொள்வது எப்படி?

வேலை வாய்ப்பு25 mins ago

கிழக்கு மத்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

தினபலன்40 mins ago

புதுச்சேரியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!

இந்தியா46 mins ago

டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்த விவசாயிகள் சங்கம்!

வேலை வாய்ப்பு56 mins ago

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 hour ago

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு2 hours ago

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு2 hours ago

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு3 hours ago

டிகிரி படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்3 hours ago

மாஸ்டர் திரைப்பட ட்ரெயலர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வைரல் செய்திகள்7 days ago

மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!

வீடியோ3 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ3 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ4 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ4 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ1 month ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ1 month ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ1 month ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

Trending

%d bloggers like this: