Connect with us

இந்தியா

நடந்து முடிந்த அஞ்சல் தேர்வு ரத்து: தமிழக எம்பிக்களுக்கு அடிபணிந்தது மத்திய அரசு!

Published

on

கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு கடந்த ஞாயிற்று கிழமை தமிழகத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இதற்கு நிலவி வரும் எதிர்ப்பு காரணமாக அந்த தேர்வை தற்போது ரத்து செய்து அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் எழுத முடியும் என அஞ்சல் துறை சுற்றறிக்கை வெளியிட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், அஞ்சல் தேர்வை நடத்தலாம் ஆனால் தேர்வு முடிவை வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி கடந்த ஞாயிற்று கிழமை அஞ்சல் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையிலும், மக்களவையிலும் இது தொடர்பாக தமிழக எம்பிக்கள் குரல் கொடுத்தனர். மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் இது தொடர்பாக விவாதம் நடத்தி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்ந்து அமளியிலும் ஈடுபட்டனர் தமிழக எம்பிக்கள். இதனால் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது விளக்கம் அளித்த மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த ஞாயிற்று கிழமை நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு விரைவில் ரத்து செய்யப்படும். ரத்து செய்யப்படும் தேர்வானது விரைவில் மீண்டும் நடத்தப்படும். அப்போது இந்த தேர்வானது தமிழ் மட்டுமல்லாமல் இதர அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என தெரிவித்தார். தமிழக எம்பிக்கள் மக்களவையில் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையிலேயே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்தியா

கொரோனா தடுப்பு பணிக்கு நிதியுதவி அளியுங்கள்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்!

Published

on

கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரிடர்களின் போது மக்களை காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும். பொதுமக்கள் நிதியுதவி வழங்க, பிம் கேர்ஸ் என்ற வங்கி கணக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த வங்கி கணக்கிற்கு நேரடியாகவும், யூபிஐ மூலமாகவும், பிம், போன்பே, அமேசான் பே, கூகுள் பே, பேடிஎம், மோபிகுவிக் போன்ற சேவைகள் மூலமாக நிதியுதவி அளித்து, கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க பொது மக்களால் உதவி செய்ய முடியும்.

Image

தமிழக அரசுக்கு நேரடியாக உதவ வேண்டுமெனில் https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணைப்பிற்குச் செல்லவும்.

Image

Continue Reading

இந்தியா

கொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்!

Published

on

தென் இந்தியாவில் கேரளாவை அடுத்து கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வீடு அருகே 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

எனவே அவசரமாக எடியூரப்பா தனது வீட்டை காலி செய்து, வேறு வீட்டுக்கு மாறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்களூரு டாலர் காலணியில் உள்ள வீட்டிலிருந்து அரசு இல்லமான காவிரி பவனுக்கு எடியூரப்பா செல்ல உள்ளாராம்.

Continue Reading

இந்தியா

அரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்!

Published

on

கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. எனவே திறந்திருக்கும் கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி உள்ளது என்று வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஆய்வு செய்து வந்துள்ளனர்.

அதை அறியாத காவலர் ஒருவர், 144 தடை உத்தரவு இருக்கும் போது, கடை முன்பு கூட்டமாகக் கூடி இருக்கிறார்கள் என்று வந்த வேகத்தில் அடித்து வெளுத்துக்கட்டியுள்ளார்.

பின்னர் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், சமாதானம் ஆன காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
வேலை வாய்ப்பு5 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா9 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா7 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு8 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா9 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா1 year ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு8 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்1 year ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு8 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

வீடியோ செய்திகள்2 weeks ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்2 weeks ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்2 weeks ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்3 weeks ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்3 weeks ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்3 weeks ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending