இந்தியா
பிரதமர் மோடியின் அடுத்த வெளிநாட்டு பயணம்.. எந்த நாட்டுக்குத் தெரியுமா?


இந்தியப் பிரதமர்களில் அதிக வெளிநாடு பயணங்கள் செய்ததாக விமர்சிக்கப்பட்டு வரும் பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு பயணம் செல்லும் திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
வங்க தேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க உள்ள மோடி, மார்ச் 26-ம் தேதி வங்க தேசம் செல்கிறார்.
1971-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து, வங்க தேசம் என்ற தனிநாடாக உருவாகியதற்கான 50வது ஆண்டு கொண்டாட்டம் கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்கவே பிரதமர் மோடி வங்க தேசம் செல்கிறார்.
பின்னர் வங்க தேச முதல்வர் ஷேக் ஹசினா, பிரதமர் மோடி இருவரும் சேர்ந்து டாக்கா – மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி வரையிலான ரயில் சேவையைத் தொடங்கி வைக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கு தொடங்கிய பிறகு எந்த வெளிநாடு பயணங்களையும் மேற்கொள்ளாமல் இருந்து வந்த பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக வெளிநாடு பயணம் செல்வது இதுவே முதல் முறையாகும்.
இந்தியா
மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தை திடீரென ரத்து செய்த பிரதமர் மோடி: என்ன காரணம்?


மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்து விட்டது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே நடைபெற உள்ள நிலையில் தற்போது அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பிரதமரின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியா
அனைவருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: உ.பி முதல்வர் ஆதித்யநாத் அறிவிப்பு!


நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் எதிர்பாராத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிர் காக்கும் ஆக்ஸிஜன் சப்ளைக்கும், தடுப்பூசிக்கும் தேசியத் திட்டம் ஒன்று அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், தங்கள் மாநிலத்தில் 18 வயதை எட்டிய அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 3.14 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் 2,104 பேர் இறந்துள்ளனர். இப்படியான சூழலில் உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளது.
‘உத்தர பிரதேசத்தை கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக உருவாக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். இதன்மூலம் கொரோனா தோல்வி அடையும், இந்தியா வெல்லும்.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க, பிரதமர் மோடி உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் இந்த அறிவிப்பு நாட்டில் தடுப்பூசி போடும் நடவடிக்கையை மேலும் அதிகரிக்கும். இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவல் விரைவாக தடுக்கப்படும்’ என்று முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இந்தியா
‘பிச்சை எடுங்க, திருடுங்க…’- ஆக்ஸிஜன் தட்டுப்பாடு; கடுப்பில் மத்திய அரசிடம் கறார் காட்டிய நீதிமன்றம்


நாட்டில் பல்வேறு மாநிலங்களில் முறையான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களில் மட்டும் பலர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்ஸிஜன் சப்ளை மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும், இதன் காரணத்தால் பல கொரோனா நோயாளிகள் உயிரிழக்க நேரிடும் என்றும் அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு முறையாக ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்பட வேண்டும் எனக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ‘ஒருசில மருத்துவமனைகள்தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியுள்ளன. ஆனால், ஆக்சிஜன் தேவை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாகத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று கண்டிப்புடன் கூறினர்.
மேலும், நீங்கள் உங்களுக்குத் தேவையான இனிமையான நேரத்தைப் பொறுமையாக எடுத்துக் கொள்ளுங்கள். மக்கள் இங்கே மடிந்து கொண்டு இருக்கட்டும். இப்படி ஓர் இக்கட்டான நேரத்தில் வேறெங்கெல்லாம் ஆக்சிஜன் இருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சை எடுங்கள், கடனாகக் கேளுங்கள், இல்லை திருடுங்கள்’ என்று மத்திய அரசைக் காட்டமாக சாடியுள்ளது.
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
கிரிக்கெட்2 days ago
கடைசி ஓவர் வரை போராடிய மும்பை: டெல்லி அணி த்ரில் வெற்றி!
-
சினிமா செய்திகள்1 day ago
ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்: விரைவில் ரிலீஸ்
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/04/2021)