இந்தியா
கொரோனா தடுப்பூசி குறித்த இந்த 5 வதந்திகளை நம்பாதீர்கள்..!- அரசாங்கம்


கொரோனா தடுப்பூசி குறித்துப் பல விதமான வதந்திகளும் கட்டுக் கதைகளும் மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் சில விளக்கங்களை வெளியிட்டுள்ளார்.
- கொரோனா தடுப்பூசி என்பது மற்ற உலக நாடுகளை விட இந்தியாவில் மிகவும் செயல் திறன் குறைந்ததாகத் தான் உள்ளது எனக் கூறுவது கட்டுக்கதை. உண்மையில் இந்தியாவில் வழங்கப்பட உள்ள கொரோனா தடுப்பூசி மிகவும் வீரியமும் துல்லியமும் நிறைந்தது.
- புதிதாக இரண்டாம் கட்டமாகப் பரவும் கொரோனாவுக்கு கோவிட்-19 க்கு என தயார் செய்த தடுப்பூசி பயன் தராது எனச் சொல்வது கட்டுக்கதை. உண்மையில், கொரோனா தடுப்பூசி புதியதாகப் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்தாது என்பதற்கான எந்த ஆதரமும் கிடையாது.
- கொரோனா தடுப்பூசி ஒரு ஆண் அல்லது பெண்ணின் குழந்தை பிறக்க வைக்கும் திறனைக் குறைக்கும் என்பது கட்டுக்கதை. உண்மையில், அப்படி எதுவும் நடக்காது. கொரோனா தடுப்பூசி கருவுறுதலுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது.
- கொரோனா தடுப்பூசி போட்டால் மீண்டும் காய்ச்சல் வரும் என்பது கட்டுக்கதை. உண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டால் ஊசி போட்ட வலி வரும். பொதுவாக ஊசி போட்டாலே ஒரு சிலருக்கு காய்ச்சல் வரும். அது போன்ற காய்ச்சல் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கும் வரும்.
- கொரோனாவுக்கு எதிராகப் பணியாற்றியவர்களுக்கே முதலில் தடுப்பூசி வழங்கப்படும் என்பது இல்லை. உண்மையில் முதல் நிலை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை காட்டலாம் என்றே அரசு சொல்லியது.
இந்தியா
இரண்டாவது டோஸ் எடுத்து கொண்ட அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியது. இதனை அடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும் மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவும் கொரோனா வைரஸ் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது.
தற்போது ஒரு சில மாநிலங்கள் தவிர தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்ட நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இரண்டாம் டோஸ் போடும் பணி தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி உள்பட பலர் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் அவருக்கு நேற்று காய்ச்சல் இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பூசி இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்ட பின்னரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா
கொரோனா வைரஸ்: தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இதனை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டு தற்போது பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவி வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் மிக வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக 500க்கும் குறைவான கொரோனா பாதிப்பில் இருந்த தமிழகம் நேற்று 500 தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50ஆக உயர்வு: உயர்வுக்கு ரயில்வே நிர்வாகம் அளித்த விளக்கம்!


சமீபத்தில் குறுகிய தூர ரயில் கட்டணத்தை உயர்த்திய ரயில்வே நிர்வாகம் தற்போது கட்டணம் ரூபாய் 50 என உயர்த்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் ’கொரோனா காலத்தில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ஒரு சில ரயில் நிலையங்களில் மட்டும் பிளாட்பார கட்டணம் ரூ.50 என உயர்த்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மும்பை கோட்டத்தில் உள்ள 78 ரயில் நிலையங்களில் 7 ரயில்களில் மட்டும்தான் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூபாய் 50 என உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 10 ரூபாயாக இருந்த பிளாட்பார கட்டணம் 50 ரூபாய் என உயர்ந்துள்ளது மிகவும் அதிகம் என்றும் இதனை உடனடியாக ரயில்வே நிர்வாகம் வாபஸ் வாங்க வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் தான் இந்த பிளாட்பார கட்டண உயர்வு என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – “இந்தியா ரொம்ப டஃப்புங்க..!”- புலம்பும் பென் ஸ்டோக்ஸ்
-
சினிமா செய்திகள்2 days ago
பிரபல நடிகருக்காக சிம்பு பாடிய பாடல் இன்று ரிலீஸ்: குவியும் வாழ்த்துக்கள்!
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – 5 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடும் இந்தியா – ஒரு ரன்னில் அரைசதம் மிஸ் செய்த ரோகித்!
-
Uncategorized2 days ago
ஓட்டுநர் உரிமம் பெற இனி RTOஅலுவலகம் செல்லத் தேவையில்லை!