Connect with us

இந்தியா

ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு;மத்திய அரசு அறிவிப்பு!

Published

on

டெல்லி: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், வெளியிட்ட அறிக்கையில், ஆண்டுக்கு இரு முறை ஆன்-லைன் மூலமாக நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த தேர்விற்கு பல்வேறு எதிர்ப்புகள் தொடர்ந்து வருகின்றன.

இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆகும். இந்நிலையில் நடப்பாண்டு முதல் நீட் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும், ஆண்டிற்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து கடுமையான எதிர்ப்புகள் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எழுந்தன. மேலும் நீர் தேர்வு, எழுத்து தேர்வு மூலமாகவே, நடைபெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.

இதையடுத்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அதுவும், எழுத்துத் தேர்வு மூலமாக நடைபெறும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பழைய அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

2018 நவம்பர் 1ம் தேதியிலிருந்து 30ம் தேதிவரை நீட் தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அட்மிட் கார்டுகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும் மே 5ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் ஜூன் 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ இதுவரை நீட் தேர்வை நடத்திய நிலையில், இனிமேல் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) தேர்வை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ கடந்த வருடம் நடத்திய நீட் தேர்வு பெரும் குழறுபடிகளை உள்ளடக்கியிருந்தது. தமிழில் மொழியாக்கம் செய்ததிலும் பெரும் தவறுகள் நடந்தன. சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை, சிபிஎஸ்இ செயல்பாட்டுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்தியா

இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது..? இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

Published

on

இந்தியாவில் மிக மகிழ்ச்சியான மாநிலம் என்ற பட்டத்தை தொழில்துறை வளர்ச்சியே இல்லாத மிசோரம் பெற்றுள்ளது.

இந்தியாவின் பிரபல நிர்வாகத் திறனுக்கான நிபுணர் ராஜேஷ் பில்லனியா, இந்தியாவின் முதல் மகிழ்ச்சியான மாநிலங்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார். இதற்காக மார்ச் முதல் ஜூலை 2020-க்கு இடையில் 16,950 நபர்களுடன் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது.

கடைசியாகக் கிடைத்த முடிவில் மிசோரம், பஞ்சாப், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் டாப் 5 இடத்தை பிடித்துள்ளன.

36 மாநில மக்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த ஆய்வு முடிவில் 3.29 மகிழ்ச்சி மதிப்பெண்ணுடன், தமிழ்நாடு 29-வது இடத்தை பிடித்துள்ளது. தென் இந்தியாவில் புதுச்சேரி, தெலுங்கானா (9), ஆந்திர பிரதேசம் (11), கேரளா (14), கர்நாடகா (16) ஆகிய மாநிலங்கள் டாப் 20 மகிழ்ச்சியான மாநிலங்களுக்குள் வந்துள்ளன.

சட்டிஷ்கர், உத்தரகாண்ட், ஒடிசா, மேகாலயா, கோவா ஆகிய மாநிலங்களில் கடைசி 5 இடத்தை பிடித்துள்ளன. எப்போது தீவிரவாதிகள் பிரச்சனை, குண்டு வெடிப்பு என பரபரப்பாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் கூட தமிழ்நாட்டை விட மகிழ்ச்சியாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

India's 36 States Happiness Report 2020

India’s 36 States Happiness Report 2020

கோவிட்-19, சம்பளம், ஆன்மீகம், கட்டமைப்பு என பல்வேறு படிகளின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்குப் பதில் அளித்த தரவுகளை வைத்து இந்த முடிவு பெறப்பட்டுள்ளது.

முழு ஆய்வு நீங்களே பாருங்கள்:

Continue Reading

இந்தியா

இந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை

Published

on

இந்தியாவில் 59.7 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு நடந்து தான் செல்கிறார்கள் என்று தேசிய புள்ளியில் அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

பள்ளிக்கு 57.9 சதவீத ஆண் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். ஆண் மாணவர்களை விடச் சற்று அதிகமாக 62.1 சதவீத மாணவிகள் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர்.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மாணவர்கள் என்று பிரித்துப் பார்த்தாலும் ஆண் மாணவர்களை விடப் பெண் மாணவர்களே அதிகளவில் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர். நகர்ப் புறங்களில் 61.4 சதவீத ஆண் மாணவர்களும், 66.5 சதவீத பெண் மாணவர்களும் நடந்து செல்கின்றனர். இதுவே கிராமப்புறம் என்று பார்த்தால், 57.9 சதவீத ஆண் மாணவர்களும் 62 சதவீத பெண் மாணவர்களும் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர்.

பள்ளிக்கு நடந்து செல்வதற்கு அடுத்தபடியாக 12 சதவீத பள்ளி மாணவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். கிராமப் புறங்களில் 11.3 சதவீத மாணவர்களும், நகர்ப் புறங்களில் 15.3 சதவீத மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் போதும் நகர்ப்புற மாணவர்களை விட கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பஸ் பாஸ் பயன்படுத்தி பள்ளிக்குச் செல்கின்றனர்.

கிராமப்புறங்களில் 92.7 சதவீத மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. நகர்ப்புறங்களில் 87.2 சதவீத மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. நடுநிலைப் பள்ளிகளும் கிராமப்புற மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் அதிகளவில் கிடைக்கிறது. இதுவே மேல்நிலைப் பள்ளிகள் என்று பார்த்தால் நகர்ப்புற மாணவர்களுக்குத் தான் 1 கிலோ மீட்டர் இடையில் அதிக பள்ளிகள் உள்ளன.

Continue Reading

இந்தியா

ரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்!

Published

on

விரைவில் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்த வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் பயணிகளிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் நிலையங்களைச் சர்வதேச தரத்தில் உயர்த்த முடிவு செய்துள்ள, இந்தியன் ரயில்வேஸ் அதற்காக ரயில் நிலையம் பயன்பாட்டுக் கட்டணத்தை டிகெட் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் 7000 ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், முதற்கட்டமாக அவற்றில் 15 சதவீத ரயில் நிலையங்களில் (1000) மட்டும் இந்த பயன்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, பயணிகளில் அதிகளவில் கூடும் ரயில் நிலையங்களில் இந்த கட்டணம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயில் டிக்கெட் கட்டணத்துடன் பயன்பாட்டுக்கா கட்டணமும் இணைக்கப்படலும், டிக்கெட் கட்டணத்தில் பெரிய மாறுதல் இருக்காது என்று இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்துள்ளது.

Continue Reading




வேலை வாய்ப்பு25 mins ago

கடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 hour ago

புதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு2 hours ago

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை3 hours ago

தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா!

சினிமா செய்திகள்4 hours ago

ஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வேலை வாய்ப்பு4 hours ago

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

டிவி4 hours ago

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்15 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்15 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)

கேலரி23 hours ago

அக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்2 weeks ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: