இந்தியா
இஸ்ரோவின் முயற்சிக்கு வாழ்த்துக் கூறிய நாசா!

நிலவின் தென் பகுதியில், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தரையிறக்கும் செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், இந்தியாவின் இந்த முயற்சி புதிய உத்வேகத்தை அளித்துள்ளது, எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் இணைந்து செயல்படுவோம் என்று நாசா தங்களோடு டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Space is hard. We commend @ISRO’s attempt to land their #Chandrayaan2 mission on the Moon’s South Pole. You have inspired us with your journey and look forward to future opportunities to explore our solar system together. https://t.co/pKzzo9FDLL
— NASA (@NASA) September 7, 2019
சென்ற ஜூலை மாதம் 22-ம் தேதி நிலவை நோக்கி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் விக்ரம் என்ற, நிலவில் ஆராய்ச்சி செய்வதற்கான லேண்டர் ஒன்றும் அனுப்பப்பட்டது.
அது சரியாகச் செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1:55 மணிக்கு நிலவின் தென் பகுதியில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டது. இதை இந்தியர்கள் உட்பட உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கிவந்த நேரத்தில், சரியாக நிலவில் தரையிறங்க 2 நிமிடங்கள் இருக்கும் போது கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிரதமர் மோடி இடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
காதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது?

மேற்கத்திய நாடுகளில் பொதுவெளியில் முத்தம் கொடுப்பது சாதாரண ஒன்று. ஆனால் நம்மூரில் பொதுவெளியில் முத்தம் கொடுப்பது என்று காம உணர்ச்சியைத் தூண்டும் ஒன்றாகவும், கேவலமான ஒன்றாகவும் கருதப்படுகிறது.
இப்படி ஒரு சம்பவம் சென்ற வாரம் டெல்லி மெட்ரோ ரயிலில் நடந்தேறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மெட்ரோல் ரயிலில் அதிகம் பயணிக்கும் ஒரு நகரம் டெல்லி. அதில் நிறைய காதல் ஜோடிகளும் பயணிப்பார்கள். அப்படிதான் சென்ற வாரம் ரயிலில் பயணித்த இளம் காதல் ஜோடி இருவர் மார்டன் பேர்வழிகள். பார்ப்பதற்கு பெரும் வீட்டு பிள்ளைகள் போன்று இருந்த அவர்கள் திடீரென உதட்டில் முத்தம் கொடுக்க தொடங்கிவிட்டார்.
ஏதோ காதல் உணர்ச்சியில் தெரியாமல் செய்கிறார்கள் என்று பார்த்தால், திரைப்படங்களில் பார்ப்பது போன்று நீண்ட நேரம் முத்தம் கொடுத்திருந்துள்ளனர்.
அதை பார்த்த ஆண்கள், பெண்கள் மற்றும் ரயில் பயணிகள் முகம் சுளிக்க ஒருவர் மொபைலில் வீடியோவாக பதிவேற்றி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த மக்கள் நாடு எங்கே போய்க்கொண்டு உள்ளது என்று புலம்பல்களைக் கொட்ட ஆரம்பித்துள்ளனர். சிலர் காரசாரமாக விமர்சித்தும் வருகின்றனர்.
ஆனால், இப்படி டெல்லி மெட்ரோவில் நடைபெறுவது முதல் முறையல்ல. பல முறை நடைபெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்தியா
டெல்லி தீ விபத்து: 43 பேர் இறப்பு; பிரதமர் இரங்கல், நிவாரண நிதி அறிவிப்பு!

டெல்லியில் அனாஜ் மண்டி என்ற இடத்தில், இன்று காலை நடைபெற்ற தீவிபத்தில் 43 நபர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்தில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி இரங்கள் தெரிவித்துள்ளார்.

The fire in Delhi’s Anaj Mandi on Rani Jhansi Road is extremely horrific. My thoughts are with those who lost their loved ones. Wishing the injured a quick recovery. Authorities are providing all possible assistance at the site of the tragedy.
— Narendra Modi (@narendramodi) December 8, 2019

இன்று காலை டெல்லியில் நடைபெற்ற தீ விபத்து கொடூரமானது. தீவிபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

PM @narendramodi announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the tragic fire in Delhi.

PM has also approved Rs. 50,000 each for those seriously injured in the fire.
— PMO India (@PMOIndia) December 8, 2019

மேலும் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Extremely sad to hear the tragic news about fire in Delhi’s Anaz Mandi. My thoughts and prayers are with affected families. Wishing an early recovery to those injured. The local authorities are doing their best to rescue people and provide help.
— President of India (@rashtrapatibhvn) December 8, 2019

இந்தியா
FastTag என்றால் என்ன? டிசம்பர் 1-ம் தேதிக்குள் இதை ஏன் நீங்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும்?

ஜிஎஸ்டி வந்தது முதல் நாடு முழவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள Toll-Wayகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர் கதையாக உள்ளது.
இதனால் ஏற்படும் டிஃபாக்-ஐ குறைக்க மத்திய அரசு வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் FastTag கட்டாயம் இருக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.
வாகனங்களில் FastTag இருந்தால் Toll-Wayகளில் வரிசையிலில் நிற்காமல் ரேடியோ ஃபீரிக்வன்சி மூலம் என்ன வாகனம் வருகிறது என்று கண்டறிந்து, அந்த வாகனத்திற்கான கட்டணம் நேரடியாக வங்கி கணக்கிலிருந்து செலுத்தப்பட்டு நொடியில் Toll-Way-ஐ கடந்து செல்ல முடியும்.
வங்கி கணக்கு வேண்டாம் என்றால் அதற்கான பிரத்யேக கார்டில் ப்ரீபெய்டாக ரீசார்ஜ் செய்தும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
FastTag-ஐ வாங்குவது எப்படி?
FastTag-ஐ பேடிஎம் மற்றும் பிற ஏஜெண்ட்கள் மூலமாக வாங்க முடியும்.
உங்கள் வாகனத்திற்கு FastTag வாங்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?
1) வாகன பதிவு சான்றிதிழ்
2) வாகன உறிமையளரின் பாஸ்போர்ட் போட்டோ
3) வாகன உரிமையாளரின் முகவரி மற்றும் அடையாள ஆவணங்கள்
FastTag-ஐ வக்கி கணக்குடன் இணைப்பது எப்படி?
வங்கிகளில் FastTag-க்கு என சிறப்பு படிவங்கள் வழங்கப்படும். அந்த படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் FastTag வங்கி கணக்குடன் இணைக்கப்படும்.
FastTag ரீசார்ஜ் செய்வது எப்படி?
FastTag கணக்கு வழங்கியவர்களின் இணையதளம் மூலமாக டெபிட்/கிரெடிட்/ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி, இணையதள வங்கி சேவை அல்லது பிம் யூபிஐ மூல்மாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.
FastTag வாங்க கட்டணம் எவ்வளவு?
முதல் முறைய FastTag வாங்கும் போது 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ரீஃபண்டபள் டெபாசிட் செலுத்த வெண்ட்டும். அது FastTag கணக்கை மூடும் போது திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

தினபலன்2 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)

சினிமா செய்திகள்3 days ago
பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா!

தினபலன்3 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (08/12/2019)

தினபலன்21 hours ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)