Connect with us

இந்தியா

மக்களே… இனி மாஸ்க் போட்டாதான் பெட்ரோல், டீசல்..!

Published

on

தமிழகத்திலும் இந்தியாவிலும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை, உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனி பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் வேகம் அதிகரிக்க, பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது முக்கியக் காரணம் என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையே கொரோனா தடுப்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாகத் தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று முதல் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்- டீசல் வழங்கப்படும் என்று தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்திய அளவில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.

 

Advertisement

இந்தியா

‘கொரோனா தடுப்பூசி தயாரிக்க 10 நிறுவனங்கள் தயாரா இருக்கு… ஆனா மோடி அரசு அனுமதிக்கல்ல’

Published

on

By

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்க இந்தியாவில் 10 நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், அவற்றுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ரூ.700 முதல் 1,500 வரை தனியார் மருத்துவமனைகள் கட்டணமாக நிர்ணயித்துள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட இது 6 மடங்கு அதிகமாகும்.

சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டை ரூ.700 முதல் 900 வரையிலும், பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவேக்ஸின் மருந்தை ரூ. 1,250 முதல் ரூ. 1,500 வரையிலும் கட்டணமாக வசூலிக்கின்றனர். பெரும்பாலான நாடுகள் தடுப்பூசியை இலவசமாகப் போடுகின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் தனியார் பலன் பெறும் நோக்கில் மத்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மக்கள் தொகை 138 கோடி. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 94 கோடி. இவர்களுக்கு 2 டோஸ்கள் தடுப்பூசிகள் போட 188 கோடி டோஸ்கள் தேவை. கடந்த மே 8 ஆம் தேதி நிலவரப்படி, 2 டோஸ்கள் போட்டவர்கள் 3 கோடி 42 லட்சம். அதாவது, 3.6 சதவிகிதம். 1 டோஸ் மட்டும் போட்டவர்கள் 13 கோடியே 31 லட்சம். ஆக மொத்தம் ஏறத்தாழ 20 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இந்நிலையில், 2 தனியார் நிறுவனங்களின் உற்பத்தியை வைத்துப் பார்க்கிற போது, கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிருக்காக போராடும் மக்களை மத்திய அரசு காப்பாற்றுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும். இன்றைக்குத் தடுப்பூசி போடும் அளவு ஒரு நாளைக்கு 17 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதே நிலை நீடித்தால் 94 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட 1,000 நாட்களாகிவிடும். அதாவது, 3 ஆண்டுகள் ஆகிவிடும்.
முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி டோஸ் போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை மே 1 முதல் 7 ஆம் தேதி வரை தினமும் சராசரி 16.6 லட்சமாக குறைந்துள்ளது. ஏப்ரலில் தினமும் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் அடிப்படையில் பார்த்தால், தற்போது நடைபெற்று வரும் தடுப்பூசி போடும் பணி முடிய இன்னும் 3 மாதங்கள் ஆகும்.

சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி டோஸ் உற்பத்தித் திறன் மாதம் ஒன்றுக்கு 6 கோடியாகவும், பாரத் பயோடெக் தடுப்பூசி டோஸின் உற்பத்தித் திறன் மாதம் ஒன்றுக்கு 2 கோடியாகவும் உள்ளன. தோராயமாக இரு நிறுவனங்கள் மூலம் தினசரி 26 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு ஜூலை மாதம் வரை காத்திருக்க வேண்டும். தடுப்பூசி டோஸ்களை இறக்குமதி செய்வதன் மூலமே இத்தகைய பற்றாக்குறையைப் போக்க முடியும்.

மோடி அரசோ எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி அலட்சியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க 10க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளன. அவர்களது உற்பத்தியை முடுக்கிவிட்டால் மட்டுமே, நாடு முழுவதும் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

கொரானாவின் இரண்டாவது அலையில், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் டோஸ் போட்டவர்களுக்கே இன்னும் இரண்டாவது டோஸ் போடவில்லை. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்றைக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் கலந்த கேள்வி எழுகிறது. எனவே, கடந்த கால மத்திய ஆட்சியாளர்களின் அனுபவத்தை எடுத்துக் கொண்டு, கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு, இனியாவது முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Continue Reading

இந்தியா

கங்கை நதியில் மிதக்கும் நூற்றுக்கணக்கான உடல்கள்: கொரோனாவால் உயிரிழந்தவர்களா?

Published

on

By

கங்கை நதியில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து வருவதை பார்த்து கரையோரம் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோனாவால் நாளுக்கு நாள் பலியாகி வரும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுடுகாட்டில் கொரோனாவால் உயிர் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சில கிராமத்தினர் கொரோனாவால் உயிரிழந்தவர்களை கங்கை நதியில் தூக்கி வீசி வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த பிணங்கள் அழுகி தண்ணீரில் மிதந்து உத்தரப்பிரதேச மாநிலம் வரை வந்து கொண்டிருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து வந்ததால் அந்த பகுதி மக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். இந்த பிணங்கள் எல்லாம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தூக்கி வீசி இருக்கலாம் என்றும் அவர்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

இந்தியா

கொரோனாவை ஒழிக்க 11 லிட்டர் பாலாபிஷேகம் செய்த உபி முதல்வர்: நெட்டிசன்கள் கிண்டல்

Published

on

By

கொரோனா வைரஸை ஒழிக்க உலகில் உள்ள அனைத்து நாடுகளும் விஞ்ஞான மூலம் போராடி வரும் நிலையில் சிவனுக்கு 11 லிட்டர் பாலாபிஷேகம் செய்த உபி முதல்வரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அதிகம் பரவி வரும் மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் நேற்று தனது வீட்டில் ருத்ராபிஷேகம் பூஜை நடத்தினார். கொரோனா வைரஸை விரட்ட நடந்த பூஜையில் சிவனுக்கு 11 லிட்டர் பாலாபிஷேகம் நடத்தியதாகவும் அப்போது வேத மந்திரங்களை பண்டிதர்கள் ஓதியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

பாலாபிஷேகம் மட்டுமின்றி அருகம்புல் 5 லிட்டர் அளவுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகவும் விநாயகர் உள்பட பல கடவுள்களுக்கு இந்த அபிஷேகம் நடந்ததாகவும் இந்த பூஜைக்கு ராமானுஜம் திரிபாதி என்ற பண்டிதர் தலைமை வகித்துதாகவும் கூறப்படுகிறது.

கொரோனாவை விரட்ட இந்த பூஜை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நெட்டிசன்கள் இவற்றை கிண்டலடித்து வருகின்றனர். தடுப்பூசி உள்பட பல மருந்து பொருட்கள் மூலம் கொரோனாவை விரட்ட உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சிவனுக்கு பால் அபிஷேகம் நடத்தி கொரோனாவை விரட்டும் முதல்வர் எங்களுக்கு தேவையில்லை என்று உபி மாநிலத்தைச் சேர்ந்த பலர் சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continue Reading
வேலைவாய்ப்பு10 mins ago

மத்திய அரசு சுகாதார திட்டத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு25 mins ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியா58 mins ago

‘கொரோனா தடுப்பூசி தயாரிக்க 10 நிறுவனங்கள் தயாரா இருக்கு… ஆனா மோடி அரசு அனுமதிக்கல்ல’

தமிழ்நாடு1 hour ago

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பேதமின்றி மக்களுக்காக செயல்படுவோம்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

வேலைவாய்ப்பு2 hours ago

தமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு2 hours ago

நான் எழுதியுள்ள நூல்களை யாரும் வாங்க வேண்டாம்: தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் வேண்டுகோள்

தமிழ்நாடு2 hours ago

‘புதுச்சேரியில் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க பாஜக சதி..!’- குற்றச்சாட்டுகளை அடுக்கிய திருமா

உலகம்3 hours ago

இனிமேல் செய்தியை படிக்காமல் பகிர முடியாது: ஃபேஸ்புக்கில் புதிய வசதி!

தமிழ்நாடு3 hours ago

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

சினிமா செய்திகள்3 hours ago

இன்று முதல் ஓடிடியில் ரிலீஸாகும் நயன்தாரா திரைப்படம்!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending