இந்தியா
குடிபோதையில் 11 வயது மகனை கொளுத்திய தந்தை! உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!


ஹைதராபாத்தில் குடிபோதையில் பெற்ற மகனையே கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குஹட்பல்லியைச் சேர்ந்த பாலு என்பவர் கடந்த ஞாயிறன்று வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது 11 வயது மகன் சரண் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் அவனுக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில், சரண் சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்ற மகன் என்றும் பாராமல் அடித்து உதைத்துள்ளார். பின்பு பீடியும் தீப்பெட்டியும் வாங்கி வரச் சொல்லியுள்ளார். சரணும் பயத்துடன் தந்தை கேட்டதை வாங்கிக் கொடுத்துள்ளான்.
அதன்பிறகும் ஆத்திரம் குறையாமல், குடிபோதையில் மகன் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். சரணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சரணை மீட்டு 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தியா
மகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; ஒரே பள்ளியில் 225 மாணவர்களுக்கு தொற்று!


மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பள்ளியில் 225 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மாணவர்களைத் தவிர நான்கு ஆசிரியர்களுக்கும் பள்ளியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அந்தப் பள்ளி கன்டெய்ன்மென்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதன் கிழமையான நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 8,800 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 4 மாதங்களில் இல்லாத வகையிலான அதிகரிப்பு இது. இந்நிலையில் இனி வரும் நாட்களில் மாநில மக்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் உருமாறிய புது வகை கொரோனா மிக அதிக வேகத்தில் பரவி வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு பள்ளியையே மூடும் அளவக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
மீண்டும் உயர்ந்தது சமையல் கேஸ் சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் 3 முறை!


கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இந்த மாதம் மட்டும் ஏற்கனவே சமையல் கேஸ் சிலிண்டர் விலை இரண்டு முறை உயர்ந்துவிட்டது. ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்
ஏற்கனவே இந்த மாதம் அதாவது பிப்ரவரி மாதத்தில் ரூபாய் 25 மற்றும் ரூபாய் 50 என இரண்டு முறை 75 ரூபாய் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் 710 ரூபாய் என்றிருந்த சிலிண்டரின் விலை 785 என்று அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்
ஒரே மாதத்தில் மூன்று முறை சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி அதிகரிப்பின் காரணமாக ஒரு பக்கம் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உடனடியாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது
இந்தியா
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!


இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக புதுவகை கொரோனா வைரஸ் தொற்று கிடு கிடுவென பரவி வருகிறது. இந்த புதுவகை தொற்று முன்பை இருந்த கொரோனா தொற்றை விட மிக அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பு சில நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இந்த புதிய உருமாறிய கொரோனா தொற்று மூலம் நாட்டில் சுமார் 7,000 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று அதிர்ச்சியளிக்கும் தகவலைத் தந்துள்ளது CCMB விஞ்ஞானிகள் அமைப்பு. இப்படி உருமாறிய கொரோனா தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சிகர தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு, இந்த கொரோனா தொற்று இருக்கும் 9 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
அந்த வகையில் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மூ – காஷ்மீருக்கு வல்லுநர் குழுவை அனுப்பி, உருமாறிய கொரோனா தொற்றுப் பரவல் குறித்து ஆய்வு நடத்த அறிவுறுத்தியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் விதிமுறைகளை முடுக்கிவிடவும், அதிக சோதனைகளை மேற்ளொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது நாட்டில் இருக்கும் கொரோனா ஆக்டிவ் கேஸ்களில் 75 சதவீதம் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் மட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு மாநிலங்களில் கடந்த சில வாரமாக ஆக்டிவ் கேஸ் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இன்று மட்டும் மகாராஷ்டிராவில் 6,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைப் போலவே கேரளாவில் 4,034 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
சினிமா செய்திகள்2 days ago
13 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவுக்கு வரும் இயக்குநர்… வடிவேலுவுக்கு அழைப்பு..!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி… வெறித்தனமாக பயிற்சி செய்யும் ‘தல’ அஜித்!