இந்தியா
சபரிமலை தீர்ப்பு: வரவேற்கும் மதுரை ஆதீனம்!


கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வரவேற்றுள்ளார். இதனால் கோவிலின் புனிதம் கெடாது என தெரிவித்துள்ளார் அவர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய சில கட்டுப்பாடுகள் உள்ளன. 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் ஆண் பக்தர்களுக்கு அனுமதி உண்டு. பெண்களில் 10 வயதிற்கு மேல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு மாதவிலக்கு வருவதால் தீட்டு எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சந்திரசூட், கன்வில்கர், நரிமன் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. இதில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். மற்ற நான்கு நீதிபதிகளும் ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பளித்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியிருப்பதாவது, சம உரிமையை கொடுத்திருக்கிறது இந்த தீர்ப்பு. சபரிமலைக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் என்று நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சொன்னேன்.
பாகுபாடு பார்க்காமல் அனைத்து வகையான பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிப்பதுதான் நியாயமானது. இதில் கோயிலின் புனிதன் கெடுவதற்கு எந்த வகையான வாய்ப்பும் இல்லை. மாதவிலக்கு பெண்களால் புனிதம் கெடும் என்கிறார்கள். மாதவிலக்கு பெண்கள் கோவிலுக்கு வருவதை எப்படி சோதனை செய்வீர்கள்? பெண் காவலர்களை நியமிப்பீர்களா?.
ஏமாற்றிச்செல்லக்கூடிய பெண்கள் இருக்கலாம் அல்லவா? அதனால் வயது வரம்பு பார்க்காமல் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்கலாம் என்று தீர்ப்பு கொடுத்திருப்பது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனுபவத்தை, ஆற்றலை, முதிர்ச்சியை காட்டுகிறது. கோயிலின் புனிதம் கெடாது என்பதை நான் ஆணித்தரமாக சொல்கிறேன். ஒன்றரை ஆண்டுகள் விசாரணை நடத்தி அனுபத்தின் அடிப்படியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை உண்மையில் பாராட்டுகிறேன் என்றார் அவர்.
இந்தியா
மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: ஈபிஎஸ்-க்கு பதிலாக கலந்து கொண்டது யார்?


இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் அவர் காணொளி மூலம் ஆலோசனை செய்து கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து அறிவுரைகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழகத்தின் சார்பில் இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பதிலாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஈபிஎஸ் அவர்களுக்கு சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.30 லட்சத்திற்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளதால் உடனடியாக கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
காலில் விழக்கூட தயார், ஆக்சிஜன் கொடுங்கள்: மத்திய அரசிடம் கெஞ்சும் மாநில அமைச்சர்!


கொரோனா நோயாளிகள் ஒரு பக்கம் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகமாகிக் கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதற்கு ஆக்சிஜன் இல்லாத நிலை பல மருத்துவமனைகளில் உள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசிடம் ஆக்சிஜன் சிலிண்டருக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மத்திய அரசின் காலில் விழுவதற்கு தயாராக இருக்கிறேன், தயவுசெய்து ஆக்சிஜனை கொடுங்கள் என்று கூறியுள்ளது பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோயாளிகளின் உயிரைக் காக்க எங்கள் அரசு தீவிரமாக போராடி வருகிறது. இந்த நேரத்தில் தாழ்மையான முறையில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஆக்சிஜன் பெறுவதற்காக மத்திய அரசின் காலில் விழுவதற்கு கூட தயார் என்று கூறியுள்ளார்.
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் உரிமை மத்திய அரசின் கையில் உள்ளதால் மத்திய அரசை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மாநிலத்தில் போதுமான ஆட்சியை வழங்க மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா
திருடி சென்ற தடுப்பூசி மருந்துகளை மன்னிப்பு கடித்ததோடு திருப்பி கொண்டு வந்து வைத்த திருடர்கள்!


நேற்று ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 1710 கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த தடுப்பூசி மருந்துகள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்தது.
கொரோனா தடுப்பூசி மருந்துகள் திருடு போனதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒருவருக்குக்கூட கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மருந்துகள் இல்லாத நிலை இருந்தது. இது குறித்த செய்தி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனது தவறை உணர்ந்த திருடர்கள் மீண்டும் திருடிய மருந்துகளை திரும்ப மருத்துவமனையிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அதுமட்டுமின்றி மன்னிப்புக் கடிதமும் எழுதி வைத்துள்ளனர். பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி மருந்துகளை திருடியதற்காக வருந்துகிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
CSK உடையில் தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?