இந்தியா
ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல், டீசல் விலை; பிரதமர் மோடியைப் பாராட்டும் அமைச்சர்!


பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்த விலை உயர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியுள்ளார் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர்.
நாட்டில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த விலை உயர்விற்கு மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும்பான்மையான விகிதம், மத்திய அரசு விதிக்கும் வரிகளுக்கேச் செல்கிறது. இதனால் அந்த வரி விகிதத்தை மத்திய அரசுக் குறைக்க முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ம.பி. கல்வித் துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங்க், ‘ஒரு விதத்தில் பிரதமர் மோடியைப் பாராட்டியே ஆக வேண்டும். அவர் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சார சக்தியைத் தொடர்ந்து ப்ரொமோட் செய்து வருகிறார். இதன் மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறையும்.
மோடிஜி, மின்சார வாகனங்களை நாட்டில் அதிக அளவு பயன்படுத்த வேண்டும் என்னும் நோக்கில் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் எண்ணெய் விலை மேலும் குறையும்.
சர்வதேச சந்தையில் தேவையை முன் வைத்து தான் எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நம் நாட்டில் தேவையைக் குறைத்தோம் என்றால் எண்ணெய் விலையும் குறையும். அதைத் தான் மோடிஜி செய்து கொண்டிருக்கிறார்’ என்று வினோதமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
இந்தியா
பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் ராகுல்; நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்!


தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று திருநெல்வேலி மாவட்டம் சென்று, பல்வேறு பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். தன் பிரச்சாரத்தின் போது அவர், நெல்லை நகரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அது குறித்தான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
திருநெல்வேலியில் வீற்றிருக்கும் திரு நெல்லையப்பர் சுவாமி திருக்கோயிலுக்கு சென்று அவரை வழிப்பட்டார். அங்கு நம் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை அளிக்கப்பட்டது.#TNwithRahulGandhi#VaangaOruKaiPaappom pic.twitter.com/1kKOZyQQcl
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) February 28, 2021
கூட்டங்களில் ராகுல் காந்தி பேசியதாவது:-
தமிழகம் சிரித்தால் நானும் சிரிப்பேன், மகிழ்வேன். தமிழக முதல்வரை ஊழல் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்ததைப் போல,தமிழக மக்களையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி நினைக்கின்றார். தமிழக முதல்வர் தமிழ் மக்களுக்கு தான் அடிபணிய வேண்டுமே தவிர மோடிக்கு அல்ல. தமிழக முதல்வர் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டை ஆள வேண்டும். அவர் மோடிக்கு அடிபணிந்திருக்கக் கூடாது. தமிழக மக்களை மதிக்கும்படியான அரசு உருவாக நாங்கள் உங்களுக்கு உதவியாக இருப்போம்.
கல்வியானது எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். அது பணக்காரர்களுக்கு மட்டுமானது அல்ல. நாம் ஒன்றாக சேர்ந்து ஒரு புதிய திசையை, ஒரு புதிய பாதையை தமிழகத்திற்கு காண்பிப்போம். மேலும் தமிழக இளைஞர்களின் முழு திறனையும் பயன்படுத்தி நாட்டின் பிற பகுதிகளுக்கும் நல்வழி காட்டுவோம்.
அனைத்து மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை மதிக்கக் கூடிய தேசத் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள்.#TNWithRahulAnna#VaangaOruKaiPaappom pic.twitter.com/fjeA5jvx4z
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) February 27, 2021
சீன உற்பத்தியின் சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அது சிறு மற்றும் நடுத்தர வணிகர்களை பெருக்குவதன் மூலம் தான் நடைபெறும். இந்த நாட்டில் வேர்வையும், உழைப்பையும் மனதையும் செலுத்தி வேலை செய்பவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை. மாறாக தூங்கி கொண்டு இருப்பவனுக்கு எல்லாம் கிடைக்கின்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியா
ஒரு லிட்டர் பால் விலை ரூ.100.. வேளான் சட்டம் எதிராக புதிய உத்தியைக் கையில் எடுத்த விவசாயிகள்!


வேளான் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹரியானா விவசாயிகள் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் என அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வரத் துடிக்கும் வேளான் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் செயல்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வேளான் சட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஹரியானாவின் ஹிசாரில் உள்ள பஞ்சாயத்து ஒன்று, அரசு பால் கூட்டுறவு நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் அளிக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுள்ளது.
இந்த பால் விலை உயர்வு அரசு கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கு மட்டும்தான். பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் பால் 55 முதல் 60 ரூபாய்க்குள் விற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா
தனியார் மருத்துவமனைகளில் இவ்வளவு விலைக்குதான் கொரோனா தடுப்பூசி விற்கணும்: மத்திய அரசு உத்தரவு


நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு, இலவசமாக செலுத்தி வருகின்றது. இந்நிலையில் கூடிய விரைவில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என்று தகவல் வந்துள்ளது. அப்படி விற்பனைக்கு வரும் தடுப்பூசியை எவ்வளவு ரூபாய்க்குள் விற்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவுப்படி, 250 ரூபாய்க்குள்ளாகவே கொரோனா தடுப்பூசி விற்கப்பட வேண்டும். அதே நேரத்தில் நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை முதல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதைத் தாண்டி நோயுற்று இருப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிடுகிறது மத்திய அரசு. இப்படியான சூழலில் தான், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள விருப்பப்படும் மக்கள், தாங்கள் விரும்பும் தனியார் மருத்துவமனைகளை தேர்வு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அரசு வழிகாட்டியுள்ளது.
இதுவரை அரசு மருத்துவமனைகளைத் தவிர, நாட்டில் உள்ள 10,000 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல், நாட்டில் உள்ள 1.15 கோடி முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் உள்ள 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைப் போட இலக்கு வைத்துள்ளது இந்திய அரசு. ஆனால், கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் முதற்கட்டத்திலேயே பல முன்களப் பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக முறையான சோதனைகளை நிறைவு செய்யாத பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள சுகாதார ஊழியர்களே பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் வெறும் 11 சதவீதம் பேரே கோவாக்ஸின் மருந்துக்கு ஆர்வம் காட்டியுள்ளனர்.
-
சினிமா செய்திகள்2 days ago
நயன்தாரா படத்தில் நாயகி ஆனார் ‘செல்லம்மா’ பட பாடகி: ஹீரோ யார் தெரியுமா?
-
ஆரோக்கியம்1 day ago
பாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
-
தமிழ்நாடு2 days ago
முதல்வர் வேட்பாளர் நான் தான்: கமல் அறிவிப்பால் சரத்குமார் அதிர்ச்சியா?
-
தமிழ்நாடு2 days ago
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா: தேர்தலிலும் போட்டி!