இந்தியா
இன்னமும் ஆளுநர் மாளிகையில் குடியிருக்கும் கிரண் பேடி… புதிய சர்ச்சை!


புதுவை ஆளுநர் மாளிகையை இன்னமும் காலி செய்யாமல் குடியிருந்து வரும் முன்னாள் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராகப் புது சர்ச்சை எழுந்துள்ளது.
புதுச்சேரி ஆளுநராகப் பதவி வகித்து வந்த கிரண் பேடியை சில நாட்களுக்கு முன்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியைவிட்டு நீக்கினார். அதன் பின்னர் புதுச்சேரி ஆளுநர் ஆக தெலங்கானா ஆளுநர் தமிழிசை நியமிக்கப்பட்டார். புதுச்சேரியை கூடுதல் பொறுப்பாக தெலங்கானா அளுநர் தமிழிசை ஏற்றுக் கொண்டுள்ளார்.
புதுவை ஆளுநர் மாற்றப்பட்டால் அடுத்த ஆளுநர் பதவி ஏற்கும் போது பழைய ஆளுநர் ராஜ் நிவாஸ் மாளிகையைவிட்டு காலி செய்துவிட வேண்டும். ஆனால், தமிழிசை ஆளுநராகப் பொறுப்பேற்று இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரையில் புதுவை ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸ் மாளிகையைவிட்டு கிரண் பேடி இதுவரையில் காலி செய்யவில்லை. இது புது வித சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், ஆளுநர் மாளிகையில் போடப்பட்டிருந்து ஐந்து அடுக்கு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் ஆளுநர் மாளிகையை காலி செய்துவிட்டனர். மாளிகையைச் சுற்றி போடப்பட்டிருந்த வேலிகளும் இன்று அகற்றப்பட்டுவிட்டன.
இந்தியா
திடீரென 30% உயர்ந்த லாரி வாடகை: அதிர்ச்சியில் பொதுமக்கள்


கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும், சமையல் கேஸ் விலையும் உயர்ந்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி இருந்தனர். குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்துகொண்டே வந்தது.
இந்த நிலையில் திடீரென இன்று நள்ளிரவு முதல் லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தப்படும் என லாரி வாடகை சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா
கொரோனா தடுப்பூசியில் ஆர்வமின்மை: 24×7 தடுப்பூசி போட்டுக் கொள்ள புதிய திட்டம்!


கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் நாட்டு மக்கள் தொடர்ந்து ஆர்வமின்மையை வெளிப்படுத்தி வரும் நிலையில், மக்கள் மத்தியில் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துச் செல்ல மத்திய அரசு, புதிய வித திட்டம் ஒன்றை அமல் செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில், கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நிறைவுசெய்யாத நிலையில் உள்ளதால், அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த ஐயம் மருத்துவர்களாலும், அறிவியல் அறிஞர்களாலும் எழுப்பப்படுகின்றன.
முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு, இலவசமாக செலுத்தி வருகின்றது. இந்நிலையில் கூடிய விரைவில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என்று தகவல் வந்துள்ளது. அப்படி விற்பனைக்கு வரும் தடுப்பூசியை எவ்வளவு ரூபாய்க்குள் விற்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது.
கடந்த திங்கட் கிழமை முதல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதைத் தாண்டி நோயுற்று இருப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிடுகிறது மத்திய அரசு. இப்படியான சூழலில் தான், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள விருப்பப்படும் மக்கள், தாங்கள் விரும்பும் தனியார் மருத்துவமனைகளை தேர்வு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அரசு வழிகாட்டியுள்ளது. இதுவரை அரசு மருத்துவமனைகளைத் தவிர, நாட்டில் உள்ள 10,000 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல், நாட்டில் உள்ள 1.15 கோடி முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் உள்ள 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைப் போட இலக்கு வைத்துள்ளது இந்திய அரசு. ஆனால், கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் முதற்கட்டத்திலேயே பல முன்களப் பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக முறையான சோதனைகளை நிறைவு செய்யாத பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள சுகாதார ஊழியர்களே பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் வெறும் 11 சதவீதம் பேரே கோவாக்ஸின் மருந்துக்கு ஆர்வம் காட்டியுள்ளனர்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‘ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. மக்கள், தாங்கள் விருப்பப்படும் எந்நேரத்திலும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகள் தாங்கள் விரும்பும் எந்நேரத்திலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம். இதன் மூலம் மக்கள் அதிகமாகக் கூடுவது தவிர்க்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட் கிழமையன்று மட்டும், பிரதமர் நரேந்திர மோடி உட்பட நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டனர்.
இந்தியா
ஐந்தில் ஒரு வெற்றி கூட இல்லை: டெல்லி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு!


டெல்லி நகராட்சியில் நடைபெற்ற வார்டு இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது என்றும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் 5 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. 5 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாஜகவுக்கு ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
டெல்லியில் கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராத மத்திய பாஜக அரசுக்கு கிடைத்த தண்டனையாகவே இது கருதப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தோல்வியுற்ற நிலையில் தற்போது டெல்லியிலும் அதே பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, பொருளாதார தேக்கம் மற்றும் விவசாயிகள் போராட்டம் ஆகியவையே இந்த தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. இதே தோல்வி வரும் 5 மாநில தேர்தலில் எதிரொலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
-
இந்தியா1 day ago
தினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்!
-
தமிழ்நாடு1 day ago
எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா?
-
இந்தியா1 day ago
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா?
-
இந்தியா2 days ago
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்!