இந்தியா
சபரிமலைக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன்.. தடுத்து நிறுத்தியது கேரள போலீஸ்!


திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் தொண்டர்களுடன் செல்ல முயன்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் சபரிமலை கோவில் பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டல மாகரம் விளக்கு பூஜைக்காக மீண்டும் கோவில் திறக்கப்பட்டது.
இந்த முறை கோவில் 41 நாட்கள் திறந்து இருக்கும். இது மிக முக்கியமான பூஜையாகும். இந்துத்துவா அமைப்புகள் இந்தமுறையும் பெண்கள் நுழைவிற்கு எதிராக அங்கு போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது அங்கு பொன்.ராதாகிருஷ்ணன் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த மாதமே இதற்காக மாலை போட்டுள்ளார். விரதம் இருந்து பூஜை செய்து அவர் கோவிலுக்கு சென்றுள்ளார். இருமுடி கட்டி இன்னும் சில ஐயப்ப பக்தர்களுடன் அவர் காலையில் தரிசனமும் செய்வதற்காக சபரிமலைக்கு சென்றார்.
இந்தியா
ஆக்சிஜன் சிலிண்டர்களை கூகுளில் தேடும் நெட்டிசன்கள்!


இதுவரை ஆக்சிஜன் சிலிண்டர் என்பதையே பலரும் கேள்விப்பட்டிராத நிலையில் தற்போது திடீரென ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல நெட்டிசன்கள் ஆக்சிஜன் சிலிண்டர் என்றால் என்ன? என்பது குறித்து கூகுளில் தேடி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.30 லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர்களுக்கு செலுத்துவதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கூகுள் தேடுபொறியில் ஆக்சிஜன் தொடர்பான தகவல்களை இந்தியர்கள் தேடி வருவதாக கூகுள் நிறுவனத்தின் ஹிஸ்டரி தெரிகிறது. வரலாறு காணாத ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதை மத்திய அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
இந்தியா
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பொது எதிரியை அழிக்க உதவ தயார்: சீனா அறிவிப்பு


கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான பொது எதிரியை வீழ்த்த இந்தியாவுக்கு உதவ தயார் என சீனா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்தியா சீனாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் மனித இனத்திற்கே எதிரியாக இருப்பது கொரோனா வைரஸ். மனித குலத்தின் இந்த பொது எதிரியான கொரோனா வைரஸை ஒழிக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏராளமான உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் ஆகியவற்றிடம் இருந்து ஆக்சிஜன் வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளதாகவும் சீனாவின் இந்த அறிவிப்பு குறித்து இந்தியா பரிசீலனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா
மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: ஈபிஎஸ்-க்கு பதிலாக கலந்து கொண்டது யார்?


இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் அவர் காணொளி மூலம் ஆலோசனை செய்து கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து அறிவுரைகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழகத்தின் சார்பில் இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பதிலாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஈபிஎஸ் அவர்களுக்கு சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.30 லட்சத்திற்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளதால் உடனடியாக கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!