Connect with us

இந்தியா

இனி இந்தியா வராமலே புதுப்பிக்கலாம்.. அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு வந்த நற்செய்தி

Published

on

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இந்திய இந்திய வெளிநாட்டவர்கள் இனி இந்தியாவில் வழங்கப்பட்ட சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை (IDP) உள்நாட்டிலேயே புதுப்பித்துக்கொள்ள முடியும்.

இந்திய அரசாங்கம் கடந்தாண்டு மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டது, அதன்படி இந்தியர்கள் யாரேனும் வெளிநாடுகளில் இருக்கும் போதே அவர்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமம் (Permit ) காலாவதியாகிவிட்டால் அங்குள்ள இந்திய தூதரகங்கள் மூலமே அவற்றை புதுப்பித்துக்கொள்வதற்கான நடைமுறையை அறிவித்தது. இதற்கு முன்பு இப்படியான வழிமுறைகள் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து அபுதாபியில் இருக்கும் இந்திய தூதரகம் அங்கிருக்கும் இந்திய குடிமக்களுக்கு அவர்களுடைய சர்வதேச ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வசதி பிப்ரவரி 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian expats in UAE can now renew their IDP at Indian Embassy in Abu Dhabi

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் இந்த சேவையை வழங்க அனுமதிக்கும் இந்திய அரசாங்கத்தின் முடிவின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அபுதாபியில் இருக்கும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்த சேவையை பெற விரும்புவோர், வேலை நாட்களில் தூதரகத்தில் வந்து பெற்றுக்கொள்ளலாம். ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 08:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தூதரகத்தில் இந்தியர்கள் புதுப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாறு படைத்த இந்திய மாணவி.. மாணவர் அமைப்புக்கான தேர்தலில் வெற்றி

சர்வதேச ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க செல்வோர், அவர்களின் பாஸ்போர்ட், இந்தியாவில் வழங்கப்பட்ட டிரைவிங் லைசன்ஸ், மற்றும் காலாவதியான சர்வதேச ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும். ஆவணங்களின் நேரடி சரிபார்ப்பிற்குப் பிறகு, விண்ணப்பதாரர்கள் முறையாக நிரப்பப்பட்ட இதர தூதரக சேவை படிவத்தை (EAP-II) சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்களுக்கும் ஐவிஎஸ் குளோபல் எனும் அவுட்சோர்சிங் நிறுவனம் மூலம் இதே சேவையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அணைத்து பகுதியில் உள்ளவர்களுக்கும் ஒரே மாதிரியான ஆவணங்கள் மற்றும் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தூதரக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Also Read: தந்தையால் சிறைவைக்கப்பட்ட துபாய் ஆட்சியாளரின் மகள்? ஆதாரங்களை கேட்கும் பிரிட்டன்.. என்ன நடக்கிறது?

எவ்வளவு செலவாகும்?

அவர்கள் தூதரக சேவைக் கட்டணமாக 40 திர்ஹம் மற்றும் இந்திய சமூக நல நிதியம் (ICWF) கட்டணமாக 8 திர்ஹம் வழங்க வேண்டும். விண்ணப்பதாரர் மத்திய அமைச்சகத்தின் பரிவஹான் இணையதள பக்கத்தில் இதற்காக வழங்கிய ரசீதுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும் மற்றும் அதே தளத்தில் தேவையான ஐடிபி கட்டணங்களையும் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் மூலம் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பிறகு, விண்ணப்பதாரர்களின் முகவரிக்கே நேரடியாக அவர்களின் புதுப்பிக்கப்பட்ட சர்வதேச ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் சென்று சேர்ந்துவிடும். இதில் அங்குள்ள தூதரகங்களின் பங்கு என்பது ஆவணங்களை சமர்பிப்பதற்கான வழிமுறையை எளிதாக்கப்பட்டுள்ளதே தவிர மற்ற விவரங்கள் அனைத்தும் இந்தியாவில் இருக்கும் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மூலமே முறையாக மேற்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்தியா

மேற்குவங்கத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கைது: என்ன காரணம்?

Published

on

By

மேற்கு வங்கத்தில் தமிழக பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கொல்கத்தா சென்றர். அப்போது அவர் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அனுமதியின்றி போராட்டம் செய்ததாக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே தமிழக பாஜகவினர் தமிழகத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த வன்முறைக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில் பாஜக மகளிர் தேசிய அணி தலைவர் என்ற முறையில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவிற்கு சென்று போராட்டம் நடத்தினார்.

சமீபத்தில் நடந்த வன்முறையில் 12 பேர் உயிரிழந்ததாகவும் இதனை கண்டித்து போராட்டம் நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் வானதி ஸ்ரீனிவாசன், பாஜக எம்பி ரூபா கங்குலி, மேற்கு வங்க மாநில பாஜக மகளிர் அணித் தலைவர் அக்னிமித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த போராட்டம் அனுமதி இன்றி நடத்தப்பட்டுள்ளதாக வானதி ஸ்ரீனிவாசன் உள்பட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

Continue Reading

இந்தியா

நிழலுலக தாதா சோட்டோராஜன் கொரோனாவுக்கு பலி!

Published

on

By

மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பில் இருந்த நிலையில் சற்று முன்னர் அவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியும் பாகிஸ்தானில் வசித்து வருபவருமான தாவூத் இப்ராஹிம் நெருங்கிய கூட்டாளி சோட்டா ராஜன். இவர் கொலை கொள்ளை ஆள்கடத்தல் உள்பட பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு அதிரடியாக சோட்டாராஜன் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோட்டா ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோட்டா ராஜன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சோட்டா ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continue Reading

இந்தியா

கணவருக்கு பெட் வேண்டும் என முதல்வர் அலுவலகம் முன் போராடிய பெண்!

Published

on

By

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் எந்த மருத்துவமனையிலும் பெட் இடமில்லை என்று கூறுவதாகவும் எனவே தனது கணவருக்கு பெட் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் முதல்வர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவர் இருக்கும் ஆம்புலன்சை கர்நாடக மாநில முதல்வர் அலுவலகம் முன் நிறுத்திய அந்த பெண் தனது கணவருக்கு எப்படியாவது பெட் ஏற்பாடு செய்யுங்கள் என்றும் அதற்குரிய பணத்தை நான் உடனே கட்டி விடுகிறேன் என்று கெஞ்சி அழுது கொண்டிருந்தார்.

இதனை அடுத்து முதல்வர் அலுவலக அதிகாரிகள் அந்த பெண்ணின் கணவருக்கு உடனடியாக பெட் ஏற்பாடு செய்தனர். ஆனால் அந்த பெண்ணின் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் கொரோனாவால் பலியானார் என்பது சோகமான தகவல் ஆகும். முதல்வர் அலுவலகம் முன் தனது கணவருக்கு பெட் வேண்டும் என்று அந்தப் பெண் கெஞ்சிக் கூத்தாடி கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
இந்திய ஊழியர்கள், வருவாய், மாதம், அறிக்கை, Indian Employees, Earnings, Rs 10000, Month, Report
தமிழ்நாடு5 mins ago

கொரோனா நிவாரண நிதி ரூ.2000 என்று முதல் வழங்கப்படும்? எத்தனை மணி வரையில்? டோக்கன் எப்படி?

தமிழ்நாடு23 mins ago

ரெம்டிசிவியர் மருந்துக்கு இனி சென்னை செல்ல வேண்டாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு32 mins ago

குடிமகன்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்ட டாஸ்மாக் நிர்வாகம்!

தமிழ்நாடு42 mins ago

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!

தமிழ்நாடு46 mins ago

மதுப்பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி.. ஓர் சோகச் செய்தி..!

தமிழ்நாடு1 hour ago

இன்றும், நாளையும் 24 மணிநேர பேருந்து சேவை – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு1 hour ago

திருநங்கைகளுக்கும் பேருந்தில் இலவசமா? முதல்வர் முக ஸ்டாலின் பதில்!

தமிழ்நாடு2 hours ago

அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிக்கல்

தமிழ்நாடு2 hours ago

நாளைய முழு ஊரடங்கு ரத்து: அனைத்து கடைகளும் இன்றும் நாளையும் திறக்க அனுமதி!

தமிழ்நாடு4 hours ago

இன்றும் நாளையும் எத்தனை மணி வரை கடை திறக்கலாம்?

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending