Connect with us

இந்தியா

அத்துமீறினால் திருப்பி அடிக்க தயக்கம் இல்லை.. பிரதமர் மோடி எச்சரிக்கை!

Published

on

இந்திய எல்லையில் சில நாட்களாகச் சீனா அத்துமீறி வரும் நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் நேற்று பலியாகினர். இந்நிலையில் நாட்டு மக்களிடையில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது. ஆனால் அத்துமீறினால் கண்டிப்பாகப் பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்புகள் குறித்துத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாகப் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்த கூட்டம் தொடங்கும் முன்பு கால்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவ அத்துமீறலால் பலியான 20 இராணுவ வீரர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின் பேசிய பிரதமர் மொடி சீனாவை எச்சரிக்கும் வகையில், “எங்கள் ஜவான்களின் தியாகம் வீணாகாது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். எங்களை பொறுத்தவரையில் நாட்டின் ஒற்றுமையும் இறையாண்மையும் மிகவும் முக்கியம். ஆனால் அத்துமீறினால் கண்டிப்பாகப் பதிலடி கொடுக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மோடி இப்படி பேசும் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் உள்ளிட்டவர்களும் அவருடன் இருந்தனர்.

நேற்று சீனா – இந்தியா எல்லையில் கால்வான் பள்ளத்தாக்கில் இராணுவ வீரர்கள் இடையில் ஏற்பட்ட மோதலில், 20 இந்திய இராணுவ வீரர்கள் பலியாகினர். அதே நேரம் சீன தரப்பில் 43 நபர்கள் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதை இந்திய அரசு உறுதி செய்து இருந்தாலும், இதுவரை சீன தரப்பில் அவர்களது இராணுவ வீரார்கள் இறந்தனரா என்று எந்த தகவலும் வெளியாகவில்லை.

கடந்த சில வாரங்களாகவே, இந்திய – சீன எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி அனைத்து கட்சி தலைவரிகளிடமும் ஜூன் 19-ம் தேதி மாலை 5 மணிக்கு விவாதிக்க உள்ளார்.

அதன் பின்பு ஜூன் 21-ம் தேதி, யோகா தினத்தன்று மக்களிடம் உரையாற்ற உள்ள மோடி, எல்லை பிரச்னை குறித்து எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் குறித்துத் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்தியா

இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்கு வந்துவிடுவார்கள்!

Published

on

இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்குப் போராட வந்துவிடுவார்கள் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், புதன்கிழமை ஒரு இணையக் கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசினார்.  இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்குப் போராட வந்துவிடுவார்கள்.

இளைஞர்கள் இப்போது வேலையில்லாமல் இருப்பதைத் திசை திருப்பலாம். ஆனால் இது சிறிது காலத்திற்கு மட்டுமே முடியும்.

சமூக வலைத்தளங்களில் போலி செய்திகளைக் கூட பரப்பலாம். ஆனால், வேலைவாய்ப்பை உருவாக்க முயலாத வரையில் அதுவும் தோற்றுப்போகும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

Continue Reading

இந்தியா

பாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. தமிழகத்தின் நிலை என்ன?

Published

on

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது..

பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதன்கிழமை காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிகையை வெளியிட்டது. இந்நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

1) பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.
2) பீகரின் நகரம் மற்றும் கிராமங்களில் 30 லட்சம் மக்களுக்கு வீடு கட்டுக்கொடுக்கப்படும்.
3) பீகார் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும்.
4) புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இதில் நமக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால், பாஜக தோல்வி அடைந்தால் பீகாருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்காதா? சரி, பீகாருக்கு இலவசம். பிற மாநிலங்களின் நிலை என்ன?

பீகாருக்கு என்று பீகாரி என்ற மொழி உள்ள போது, ஏன் இந்தியில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மொழியில் கற்பது தான் சிறந்தது. பீகார் மக்களுக்கு பீகாரி தானே தாய் மொழி.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது நியாயமா? உங்கள் கருத்துக்களைக் கீழ் பதிவிடுங்கள்.

Continue Reading

இந்தியா

விவசாயக் கடன் தள்ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.1500, பென்ஷன்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்!

Published

on

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களை இங்குப் பார்ப்போம்.

1) 10 லட்சம் வேலைவாய்ப்புகள் நகரம் மற்றும் கிராம்ப் பகுதிகளில் உருவாக்கப்படும்.
2) வேலை இல்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1500 நிதி உதவி.
3) விவசாய மசோதா ரத்து செய்யப்பட்டு புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்.
4) முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கு மாதம் ரூ.800 பென்ஷன்.
5) 80 வயதுக்கு அதிகமான முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 பென்ஷன்.
6) விவசாயக் கடன் மற்றும் மின்சார கட்டணம் தள்ளுபடி.
7) பஞ்சாப் போன்று விவசாயம் செய்வதற்கும், வருவாய் அதிகரிக்கவும் கூடுதல் வசதிகள் செய்துதரப்படும்.

Continue Reading
வருமான வரி தாக்கல், வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள், வருமான வரி தாக்கல் கடைசி நாள், வருமான வரி கணக்கு தாக்கல், வருமான வரி, ஐடிஆர், ITR Filing Date, income tax return last date, income tax return filing 2018, income tax return deadline, August 31
பர்சனல் ஃபினாஸ்12 mins ago

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

கிசு கிசு43 mins ago

விஜய் 65-ல் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் அவுட்.. அப்ப யாரு இன்?

பர்சனல் ஃபினாஸ்1 hour ago

வங்கியில் கடன் பெற்றவர்களுக்குத் தீபாவளி பரிசு அறிவித்த மத்திய அரசு!

வேலை வாய்ப்பு5 hours ago

எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு5 hours ago

எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? முதல்வரைப் பங்கமாகக் கலாய்த்த ஸ்டாலின்!

சினிமா செய்திகள்6 hours ago

தேவைப்படும் போது என்னிடமிருந்து உதவிகள் வரும்.. விஜய்!

வணிகம்9 hours ago

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வணிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்17 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்18 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/10/2020 )

தினபலன்18 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (24/10/2020)

வேலை வாய்ப்பு12 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 month ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்2 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்7 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்7 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்7 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: